Pages

Muhammad(pbuh)

மண்ணரைகளை தரிசிப்பது எப்படி?



கப்ரு ஜியாரத் என்றால் என்ன?

நாம் அனைவரும் மறுமை சிந்தனையுடன் வாழவேண்டும் என்பதற்காக நபி(ஸல்)அவர்கள் கப்ருகளை ஜியாரத் செய்தல் எனும் வணக்கத்தை காட்டித்தந்தார்கள். ஜியாரத் என்றால் கப்ருகளை சந்தித்தல் என்று பொருள்.தற்காலத்தில் நம்முடைய சமூதாயம் இந்த அழகிய வழிமுறையை புறக்கனித்து விட்டு; கப்ரு ஜியாரத் என்ற பெயரில் ஏராளமான இணைவைப்பான காரியங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள்.இதில் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் இவையணைத்திற்கும் இஸ்லாமியச் சாயம் பூசப்படுகிறது.

கப்ருகளைக் கட்டுவதற்கு தடை.

கப்ருகளை ஜியாரத் செய்வதாக நினைத்துக் கொண்டு பலர் தர்ஹாக்களில் தங்களுடைய காலத்ததைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். தர்காக்களுக்கு சென்று யாஸீன் ஓதுவதற்கும் பாதிஹா ஓதுவதற்கும் அங்கு நேர்ச்சை செய்வதற்கும் கப்ருகளை பூசுவதும் அங்கு அடக்கம் செய்யப்பட்டவரிடம் பிரார்த்தனை செய்வதும்.அதை முத்தம் இடுவதும் இவர்களுடைய வழக்கமாக இருக்கிறது.ஆனால் இந்த இவர்களின் செயற்பாடுகளுக்கு மார்கத்தில் எவ்விதமான அனுமதியும் வழங்கப்படவில்லை.அனைவரும் இதைத்தான் கப்ரு ஜியாரத் என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் நபி(ஸல்)அவர்கள் கப்ருகளை கட்டுவதையே தடைசெய்தார்கள்.

அலி பின் அபுதாலிப் (ரலி)அவர்கள் என்னிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் எந்த வேலைக்காக என்னை அனுப்பினார்களோ அந்த வேலைக்காக உம்மை நான் அனுப்புகிறேன்.(அந்த வேலை என்னவென்றால்)எந்த உருவச்சிலையையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்.(தரையை விட)உயர்ந்துள்ள எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதீர்.என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ அவர்கள்
நூல்: முஸ்லிம் 1764

நபியவர்கள் அலி(ரலி) அவர்களை தரையை விட உயர்ந்திருக்கும் எந்தக் கப்ருகளையும் விட்டு வைக்காமல் உடைத்துத் தரைமட்டமாக்கும் படி ஏவுகிறார்கள் அந்த கட்டளையையே அபுல் ஹய்யாஜ் அவர்களுக்கும் அலி(ரலி)அவர்கள் கூறுகிறார்கள் கப்ருகளை கட்டுவது என்பது மார்கத்தின் அடிப்படையையே தகர்க்கக்கூடிய செயலாக இருக்கிறது.

யூதர்களையும்,கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்கள் நபிமார்களுடைய கப்ருகளை வணங்கும் இடங்களாக ஆக்கினார்கள்.என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)அவர்கள்
நூல் : புகாரி 437

நபிமார்களுடைய கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கியதற்கே அல்லாஹ்வுடைய சாபம் உண்டாக வேண்டும்; என்று நபி(ஸல்)அவர்கள் கூறுவதாக இருந்தால் அவுலியாக்களுடைய கப்ருகளை கட்டி வழிபடுவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.நபிமார்கள் தான் அவுலியாக்களுக்கு எல்லாம் அவுலியாக்கள்.

நபிமார்கள் அவுலியாக்கள் என்று அல்லாஹ்விடம் இருந்தே சான்றுகளைப் பெற்றவர்கள்.ஆனால் தற்போது நம்முடைய சமுதாயம் அவுலியாக்கள் என்று வணங்கக்கூடியவார்கள் நல்லவர்களா?? கோட்டவர்களா?? என்பதற்குக் கூட எந்த சான்றும் கிடையாது பீடி குடித்தவார்களை எல்லாம் பீடி மஸ்தான் அவுலியா என்று வணங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.இப்படி மார்கத்தின் அடிப்படையில் தவரு செய்தவர்களை எல்லாம் அவுலியாக்கள் என்று கருதி அவர்களுக்கு கப்ரு கட்டி வழிபடுவதுதான் மிகவும் வேதனைக்குறிய செயல். இதற்கு காரணம் கப்ரு ஜியாரத்தைப் பற்றி சரியாக புரிதல் இல்லாதது தான்.

ஜியாரத் செய்வது எப்படி??

கப்ருகளை ஜியாரத் செய்வதாக இருந்தால் பொதுவான கப்ருகள்(பொது மையவாடி) இருக்கும் இடத்துக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களுக்காக இறைவனிடம் துஆ செய்யவேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (தம் இருதி நாட்களில்)என்னுடன் தங்கியிருந்த ஒவ்வொரு இரவின் பிற்பகுதியிலும் (மதினாவில் உள்ள)" பகீஉல் கர்கத் " பொது மையவாடிக்குச் சொல்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)அவர்கள்
நூல்: முஸ்லிம்

இது ஒரு வகை மற்ற ஒன்று இனைவைப்பாளர்களின் கப்ருக்குச் சென்று வருந்துதல் அவர்களுக்காக துஆ செய்யக்கூடாது.கீழ் வரும் செய்தியிலிருந்து அதை புரிந்து கொள்ள முடியும்.

நபி(ஸல்)அவர்கள் தன்னுடைய தாயின் கப்ரை ஜியாரத் செய்கின்ற போது அழுதார்கள்.அவர்களை சுற்றி உள்ளவர்களும் அழுதார்கள்.நபி(ஸல்)அவர்கள் நான் என்னுடைய தாய்கு பாவமன்னிப்பு கேட்பதற்கு இறைவனிடம் அனுமதி கேட்டேன் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஜியாரத் செய்வதற்கு அனுமதி கேட்டேன் எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனவே நீங்கள் கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள் அது உங்களுக்கு மரணத்தை நினைவுட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஹ{ரைரா
நூல்: முஸ்லிம் 1622

இந்த இரண்டு வகை ஜியாரத்தான் மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டது.இவ்வாறு செய்வதின் மூலம் நமக்கு மறுமை சிந்தனை மற்றும் மரண சிந்தனை அதிகரிக்கும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.கப்ருகளைப் பார்க்கும் போது நாமும் மரணிக்கக்கூடியவர்கள் தான் நமக்கும் மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் இந்த உலகில் நாம் நிரந்தரமாக வாழப்போவது இல்லை என்று மரண சிந்தனை வரும்.அந்த அச்சம் அவனை தவருகள் செய்வதை விட்டும் தடுக்கும் நபி(ஸல்)அவர்கள் காட்டித்தந்த அடிப்படையில் தன் வாழ்கையை அமைத்துக் கொள்ள உதவும்.

ஆனால் நம்முடைய சமூதாயம் இன்று கப்ரு ஜியாரத் என்ற பெயரில் செய்யக்கூடிய காரியங்களைச் செய்தால் நமக்கு மரண சிந்தனை வராது மற்றமாக தவரான சிந்தனைகள்தான் வரும்.ஏராளமான அனாச்சாரங்கள் அங்கே கொட்டிக்கிடக்கின்றது.

கப்ரு ஜியாரத்தின் போது ஓதும் துஆ.

கப்ருகளை ஜியாரத் செய்யும் போது ஓதுவதற்கு நபி(ஸல்)அவர்கள் துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள்.அந்த துஆக்களை நாமும் கப்ருளை ஜியாரத் செய்யும் போது ஓதவேண்டும்.

السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ

அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன வஇன்னா இன்ஷா அல்லாஹ் பிகும் லாஹிகூவ்ன்.

என்ற துஆவை நபி(ஸல்)அவர்கள் கப்ருகள் இருக்கும் இடத்துக்குச் சென்றால் கூறுவார்கள்.

(பொருள்: இறை நம்பிக்கை கொண்ட கப்ரு வாசிகளுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.அல்லாஹ் நாடினால் நாமும் உங்களை சந்திக்கக்கூடியவர்களே!)

அறிவிப்பவர்: அபுஹ{ரைரா (ரலி)அவர்கள்
நூல்: முஸ்லிம் 367

எனவே இப்படித் நபியவர்கள் காட்டிய அடிப்படையில் கப்ருகளை ஜியாரத் செய்யவேண்டும்.

பெண்கள் கப்ருகளை ஜியாரத் செய்யலாமா?

கப்ருகளை ஜியாரத் செய்வதில் கருத்து வேறுபாடு இல்லை என்றாலும் பெண்கள் ஜியாரத் செய்வதில் கருத்து வேறுபாடு இருக்கிறது.நபி(ஸல்)அவர்கள் ஆரம்ப காலத்தில் கப்ருகளை ஜியாரத் செய்வதற்கு ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் தடை விதித்து இருந்தார்கள். பின்னர் அனுமதி வழங்கினார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
நான் உங்களை; கப்ருகள் ஜியாரத் செய்வதை விட்டும் தடை செய்திருந்தேன். இப்போது(அனுமதிக்கிறேன்)நீங்கள் ஜியாரத் செய்யுங்கள்.

ஆறிவிப்பவர்: புரைதா இப்னு ஹ_ஸைன்.
நூல்: முஸ்லிம் 1623

இந்த செய்தியில் நபி(ஸல்)அவர்கள் ஆரம்ப காலத்தில் கப்ருகளை ஜியாரத் செய்வதற்கு தடை செய்ததையும் பின்னர் அனுமதி அளித்ததையும் தெளிவாக விளங்க முடிகிறது. இந்தச் சட்டத்தை ஆண்,பெண் ஆகிய அணைவருக்கும் பொதுவானதாகத்தான் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்த செய்தியில் நபி(ஸல்)அவர்கள் ஆரம்ப காலத்தில் கப்ருகளை ஜியாரத் செய்வதற்கு தடை செய்ததையும் பின்னர் அதற்கு அனுமதி அளித்ததையும் புரிய கொள்ள முடிகிறது.அந்த நேரத்தில் தான் பெண்கள் கப்ருகளை ஜியாரத் செய்வதையும் தடை செய்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத் செய்யும் பெண்களை சபித்தார்கள்.
அறிவரிப்பவர்: இப்னு அப்பாஸ்
நூல்: நஸாயி 2016

சிலர் இந்த செய்தியின் அடிப்படையில் பெண்கள் கப்ருகளை ஜியாரத் செய்யக்கூடாது என்று வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான கருத்தாகும்.ஏனெனில் இது மாற்றப் பட்ட சட்டமாகும். நபி(ஸல்)அவர்கள் ஜியாரத் செய்ய அனுமதி வழங்கியது ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் தான். அதனை ஜியாரத் அனுமதிக்கப்பட்டதின் நோக்கமே உணர்த்துகிறது.
கப்ருகளை ஜியாரத் செய்வதின் நோக்கம்.

நபி(ஸல்)அவர்கள் தன்னுடைய தாயின் கப்ரை ஜியாரத் செய்கின்ற போது அழுதார்கள்.அவர்களை சுற்றி உள்ளவர்களும் அழுதார்கள்.நபி(ஸல்)அவர்கள் “நான் என்iனுடைய தாய்க்கு பாவமன்னிப்பு கேட்பதற்கு இறைவனிடம் அனுமதி கேட்டேன் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஜியாரத் செய்வதற்கு அனுமதி கேட்டேன் எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனவே நீங்கள் கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள் அது உங்களுக்கு மரணத்தை நினைவுட்டும் என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் “அது மறுமையை நினைவுட்டும் என்று வந்துள்ளது”

அறிவிப்பவர்: அபுஹ{ரைரா
நூல்: முஸ்லிம் 1622

இந்த செய்தியிலிருந்து கப்ருகள் ஜியாரத் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது மரணத்தை நினைவுபடுத்துவதற்கும் மறுமை சிந்தனை எற்படுத்துவதற்கும் தான் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

மரணத்தை நினைவூட்டுதல் மறுமையை நினைவுட்டுதல் என்பது ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் சமமானதாகும்.இருவருக்கும் தேவையான ஒரு செயலை நபி(ஸல்)அவர்கள் பெண்களுக்கு மட்டும் தடை செய்திருக்க மாட்டார்கள்.தடை செய்யவும் இல்லை.

எனவே இந்த செய்தியின் மூலம் நபி(ஸல்)அவர்கள் பெண்களுக்கும் கப்ருகளை ஜியாரத் செய்ய அனுமதி வழங்கியுள்ளார்கள் என்று தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் நபி(ஸல்)அவர்கள் பெண்களுக்கு கப்ருகளை ஜியாரத் செய்ய அனுமதி வழங்கினார்கள் என்பதற்கு இன்னும் ஏறாளமான சான்றுகள் உள்ளன.
ஆயிஷா(ரலி)அவர்கள் கூறியதாவது

நபி(ஸல்)அவர்கள் எனக்கு “பகீஆ”(பொது மையவாடி)க்கு சென்று அங்கு அடக்கப்பட்டுள்ளவர்களுக்கு பாவமன்னிப்பு தேடுவதற்கு கட்டளை இட்டார்கள்.எப்படி கேட்பது அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டேன்.

السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ يَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ
(இந்த துஆவை)கூறுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)அவர்கள்
நூல்: நஸாயீ 2010

இந்த செய்தியில் நபி(ஸல்)அவர்கள் ஆயிஷா(ரலி)அவர்களுக்கு பொது மையவாடி சென்று அங்கு அடக்கப்பட்டுள்ளவர்களுக்கு பாவமன்னிப்பு கேட்குமாறு கட்டளையிடுகிறார்கள். அதுமட்டுமின்றி; அங்கு கேட்கும் துஆவைக்கூட ஆயிஷா(ரலி)அவர்களுக்குத்தான் கற்றுக் கொடுத்தார்கள்.பெண்களுக்கு கப்ரு ஜியாரத் செய்வது தடையாக இருந்தால் நபி(ஸல்)அவர்கள் ஆயிஷா(ரலி)அவர்களுக்கு அங்கு செல்வதற்கு கட்டளை இட்டிருக்கவும் மாட்டார்கள் துஆவையும் கற்றுக் கொடுத்திருக்கவுமாட்டார்கள்.இந்த செய்தியும் பெண்கள் கப்ரு ஜியாரத் செய்யலாம் என்பதை தெளிவாக உணர்துகின்றது.

கப்ரை ஜியாரத் செய்த பெண்மணி.

அனஸ் பின் மாலிக் (ரலி)அவர்கள் கூறியதாவது
கப்ருக்கு அருகில் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்ற நபி(ஸல்)அவர்கள் அப்பெண்ணிடம் அல்லாஹ்வைப் பயந்து கொள்! பொறுமையாயிரு! எனக் கூறினார்கள்.அதற்கு அப் பெண் என்னை விட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத் துன்பம் உமக்கு எற்படவில்லை என்று கூறினார்கள். அவர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி(ஸல்)அவர்களிடம் வந்தாள்.அங்கே நபியவர்களுக்கு காவலாளிகள் எவரும் இருக்கவில்லை. நான் உங்களை அறியவில்லை எனக் கூறினாள். பொறுமை என்பது துன்பம் ஏற்பட்டவுடன் மேற்கொள்வது ஆகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்
நூல்: புகாரி 1283

இந்த செய்தியில் நபி(ஸல்)அவர்கள் கப்ரு ஜியாரத் செய்ததை கண்டிக்கவில்லை மாற்றமாக பொறுமையை மேற் கொள்ளுமாறு தான் அந்த பெண்மணிக்கு கட்டளை இட்டார்கள். பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வது கூடாது என்று இருந்தால் அந்த சந்தர்பத்தில் நபி(ஸல்)அவர்கள் கண்டிப்பாக தடை செய்து இருப்பார்கள் ஆனால் அவ்வாறு செய்யவில்லை.இதுவும் பெண்கள் கப்ருகளை ஜியாரத் செய்யலாம் என்பதற்கு தெளிவான சான்றாக உள்ளது.

எனவே பெண்கள் கப்ரு ஜியாரத் செய்யக்கூடாது என்பது மிகவும் தவரான முடிவாகும்.மார்கத்தில் பெண்களுக்கும் ஜியாரத் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அந்த அனுமதியைப் பயன்படுத்தி நாம் மறுமை சிந்தனையை அதிகப்படுத்திக் கொள்வோமாக!