Pages

Muhammad(pbuh)

அன்னியப் பெண்ணை பார்த்தல்

(நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும். தங்களின் மர்மஸ்த்தானங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும். அது அவர்களுக்கு மிக பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன். (அல்குர்ஆன் 24:30)


நபி(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள்:

கண்ணின் விபச்சாரம் -தவறானதைப்- பார்ப்பதாகும்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ)


திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பது, மருத்துவர், மருத்துவத்திற்காக அன்னியப் பெண்ணைப் பார்ப்பது போன்ற மார்க்கத் தேவைக்காக, நிர்ப்பந்தத்திற்காக பார்ப்பது இதிலிருந்து விதிவிலக்குப் பெரும்.


இது போல் பெண்கள் அன்னிய ஆண்களைப் பார்ப்பதும் தவறாகும்.


அல்லாஹ் கூறுகிறான்:
மேலும் (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும். தங்கள் மர்மஸ்த்தானங்களை அவர்கள் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும்...(அல்குர்ஆன் 24:31)


ஒரு ஆணோ, பெண்ணோ தம் இனத்தைச் சேர்ந்த அழகானவர்களை இச்சையுடன் பார்ப்பது ஹராமாகும். மேலும் ஒரு ஆணின் மறைக்கவேண்டிய பகுதியை மற்ற ஆண் பார்ப்பதும், ஒரு பெண்ணின் மறைக்கவேண்டிய பகுதியை மற்ற பெண் பார்ப்பதும் ஹராமாகும். மறைக்கவேண்டிய எந்தப் பகுதியையும் பார்ப்பதோ, தொடுவதோ கூடாது -அது ஏதேனும் திரைக்குப் பின்னால் இருந்தாலும் சரியே!-.

பத்திரிக்கைகளில் வரும் கவர்ச்சிப் படங்கள் மற்றும் திரைப்படங்களின் மூலம் ஷைத்தான் பலரை இதுபோன்ற மானக்கேடான செயல்களில் ஈடுபடுத்துகிறான். நிச்சயமாக அவைகள் உண்மையானவைகள் அல்ல, மேலும் குழப்பத்திற்கும் இச்சையை தவறான முறையில் தீர்ப்பதற்கும் வழிவகுக்கின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.