Pages

Muhammad(pbuh)

யார் இவர்? - அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)


1 தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இனிய குரல் இவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.

2 இவர்களுடைய மகனுக்கு நபிகளார் இப்ராஹீம் என்று பெயர் சூட்டினார்கள்.
3 இவர்கள் என்னைச் சார்ந்தவர்கள், நான் அவர்களைச் சார்ந்தவன் என இவர்களின் குலத்தை குறிப்பிட்டு நபிகளார் கூறினார்கள்
4 இவருடைய குலத்தவர்கள் தங்களிடம் உணவு குறைந்து விட்டால் அனைவரும் தங்களிடம் எஞ்சி இருப்பதை ஒரு துணியில் சேகரித்து தங்களுக்குள் சமமாக பங்கிட்டுக் கொள்வார்கள்.
5 நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்திற்கு இரவுத் தொழுகைக்கு முறை வைத்துச் செல்லக்கூடியவர்களில் ஒருவராக இவர்கள் இருந்தார்கள்.
6 முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் இவர்களையம் யமன் நாட்டிற்கு நபிகளார் அனுப்பி வைத்தார்கள்.
7 இவர் நபி (ஸல்) அவர்களை இவர்களும், இவருடன் இருவரும் சந்திக்கச் சென்றபோது அவரோடு இருந்த ஒருவர் பதவி கேட்டார். அப்போது நபியவர்கள் பதவி கேட்போருக்கு நாங்கள் பதவி கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
8 இவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்ய நாடியுள்ளீரா? எனக் கேட்டார்கள்.
9 ஒரு இடத்திற்கு சென்று மூன்று முறை அனுமதி கேட்டு பதில் வரவில்லையானால் அங்கிருந்து திரும்பிவிட வேண்டும் என்ற நபிமொழியை உமர் (ரலி) அவர்களுக்கு உணர்த்தியவர்
10 நபியவர்கள் எப்படி பல் துலக்குவார்கள் என்ற செய்தியை அறிவித்தவர்.

விடை
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள்
1 ஆதாரம் புகாரி 5048
2 ஆதாரம் புகாரி:5467
3 ஆதாரம் புகாரி 2486
4 ஆதாரம் புகாரி:2486
5 ஆதாரம் புகாரி 567
6 ஆதாரம் புகாரி4341
7 ஆதாரம் புகாரி 2261
8 ஆதாரம் புகாரி 1795
9 ஆதாரம் புகாரி 2062
10 ஆதாரம் புகாரி 244