Pages

Muhammad(pbuh)

யார் இவர்? - ஸைத் பின் ஸாபித் (ரலி)

1. நோன்பு நோற்க நபிகளாருடன் ஸஹர் செய்தவர். 2. இவர் அந்நஜ்மு அத்தியாயத்தை நபிகளாருக்கு ஓதிக் காட்டியபோது நபிகளார் ஸஜ்தா செய்யவில்லை.
3. நபிகளார் காலத்திலும் அபூபக்ர் (ரரி) காலத்திலும் இளைஞராக இருந்தவர்.
4. யஸீத் பின் ஸாபித் (ரரி) இவரின் அண்ணன்.
5. இவருடை அண்ணன் பத்ர் போரில் கலந்துள்ளார்.
6. இவர் பத்ர் போரில் கலந்து கொள்ளவில்லை.
7. இவரிடமிருந்து அபூஹுரைரா (ரரி), அபூஸயீத் (ரரி), இப்னு உமர் (ரரி) ஸஹ்ல் பின் ஸஅத்(ரரி), உட்பட ஏரளாமான நபித்தோழர்கள் நபிமொழிகளை அறிவித்துள்ளனர்.
8. இவரின் தொடையில் நபிகளாரின் தொடை இருந்த நிலையில் 4:95 வசனம் இறங்கியது.
9. நபிகளார் காலத்தில் திருக்குர்ஆனை எழுதியவர்களில் இவரும் ஒருவர்.
10. அபூபக்ர் (ரரி) அவர்களின் கட்டளையின்படி திருக்குர் ஆன் இவர் தலைமையில் ஒன்று சேர்க்கப்பட்டது.
 
விடை
ஸைத் பின் ஸாபித் (ரரி)
ஆதாரம் :
1. புகாரி (576),
2. புகாரி (1072),
3. புகாரி (4679),
4. திர்மிதீ (943),
5. திர்மிதீ (943),
6. திர்மிதீ (943),
7. அல் இஸாபா (2882),
8. புகாரி (2832),
9. புகாரி (4679),
10. புகாரி (4679)