1 நபி (ஸல்) அவர்களின் மகளான ஸைனப் (ரலி-) அவர்களின் குழந்தை இறந்த போது நபியவர்களுடன் கலந்து கொண்டவர்.
2 இவர் நோய் வாய்ப்பட்ட போது நபி (ஸல்)அவர்கள் சில நபித் தோழர்களுடன் இவரை நோய் விசாரிக்க வருகை தந்தார்கள்.
3 இவர் மதீனா வாசிகளான கஸ்ரஜ் கோத்திரத்தாரின் தலைவராவார்.
4 நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அன்ஸாரிகள் இவரையும் தலைவராக்குவதற்கு பனூ ஸாயிதா கூடத்தில் ஒன்று கூடினார்கள். 5 இவரின் தாயார் இறந்தபோது அவர் சார்பாக ஏதாவது தர்மம் கொடுக்கலாமா? என்று நபியர்வர்களிடம் கேட்டவர்
6 இவருடைய தாயார் இறந்த போது மிஹ்ராப் என்ற தோட்டத்தை தாயாருக்காக வேண்டி தர்மம் செய்தவர்.
7 மக்கா வெற்றியின் போது அன்சாரிகளின் கொடி இவர்களிடம் இருந்தது.
8 அப்துல்லாஹ் பின் உபை மன்னிக்குமாறு நபிகளாரிடம் பரிந்துரை செய்தவர்.
9 நபியர்கள் இவருடைய ரோசத்தை கண்ட போது அவரைவிட நான் ரோஷக்காரன்,அல்லாஹ் என்னைவிடவும் ரோஷக்காரன் என்று சொன்னார்கள்.
10 நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (அவர்களது அவையில்) ஆட்சித் தலைவருக்கு ஒரு காவல்துறை அதிகாரியைப் போன்று செயல்பட்டுவந்தார்கள்.
விடை
ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள்
1 ஆதாரம் புகாரி 1284
2 ஆதாரம் புகாரி 1304
3 ஆதாரம் புகாரி 4141
4 ஆதாரம் புகாரி 3668
5 ஆதாரம் புகாரி 2756
6 ஆதாரம் புகாரி 2762
7 ஆதாரம் புகாரி 4280
8 ஆதாரம் புகாரி 4566
9 ஆதாரம் புகாரி 6846
10 ஆதாரம் புகாரி 7155