Pages

Muhammad(pbuh)

"பித்அத்" அனைத்தும் வழி கேடுகள்தான்

நபி அவர் கூறுகிறார்கள்:-
எனக்குமுன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களூம், தோழர்களும்  ருந்திருக்கிறார்கள்.  அவர்கள் அந்தந்த நபியுனுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள் செய்யாததை செய்தாகச் சொல்வார்கள்; அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ, அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான்.எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும்  மூமினாவான். இதன் பின்னர் ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது. என நபி அவர்கள் கூறினார்கள். (ப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம்)
 
வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபி அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி அவர்கள்  கூறினார்கள். (ப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ,ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُபுகாரீ,ந்ஸயீ, முஸ்லிம்)
    உங்களிடையே ரண்டை விட்டுச்செல்கிறேன் அவற்றைப்  பற்றிப் பிடித்திருக்கும்  காலமெல்லாம்  நீங்கள்  வழி தவறவே  மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம், ரண்டு எனது வழிமுறை.  (மாலிக் ப்னு அனஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ முஅத்தா)
    அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُஅறிவித்துள்ளார்கள்:-
    "எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே" என்று நபி அவர்கள் கூறினார்கள்.   (புகாரீ, முஸ்லிம்)
    நபி அவர்கள் கூறியுள்ளார்கள்:-
    "வெள்ளை  வெளேர்  என்ற  நிலையில்  உங்களை  நான்  விட்டுச் செல்கிறேன். அதன் ரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நசமாகக் கூடியவனைத் தவிர  வேறுயாரும்  வழி தவறவே  மாட்டார்கள். (உமர்رَضِيَ اللَّهُ عَنْهُநூல்:ரஜீன்)
    எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு  டமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது  என நபி அவர்கள் நவின்றார்கள்.  (அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அபூதாவூது, நஸயீ.)  
     பித்அத் விசயமாக நபித்தோழர்களுடைய அறிவுரைகள்
    நான் உங்களிடம் அல்லாஹ் கூறுகின்றான், அல்லாஹ்வுடைய ரஸுல் அவர்கள் கூறுகிறார்கள் என்று கூறுகிறேன் நீங்களோ அபூபக்கர் சொன்னார், உமர் சொன்னார் என்று கூறுகிறீர்கள். எனவே உங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழியப்படுமோ என்று நான் அஞ்சுகிறேன். என ப்னு அப்பாஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ கூறுகிறார்கள்.
    நான் பின்பற்றுகிறவனே அல்லாமல்,  புதிதாக உண்டாக்குகிறவன் அல்ல. நான் நேராக நடந்தால் என்னைப் பின்பற்றுங்கள். பிழை விட்டால் என்னை திருத்துங்கள் என அபூபக்கர் சித்தீக் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறுகிறார்கள்.
ஒரு பள்ளியினுள்ளே அமர்ந்து கூட்டாக "திக்ரு" ஸலவாத்து, ஓதிக்கொண்டிருந்தவர்களை பார்த்து ப்னு மஸ்வூத்رَضِيَ اللَّهُ عَنْهُ  அவர்கள், "நான் நபி அவர்களின் தோழர்களின் ஒருவனாக இருந்திருக்கிறேன். நபி அவர்களுடைய காலத்தில்  யாரும் இவ்வாறு திக்ரு,ஸலவாத்து ஓதுவதை நான் பார்த்ததே இல்லை. எனவே, நீங்கள் நபி அவர்கள் காட்டித்தராத  பித்அத்தைச்  செய்கிறீர்கள்" என்று  கூறி  அவர்களை பள்ளிவாசலை விட்டும் வெளியேற்றி விட்டார்கள்.
    ஒருவர் தும்மியதற்குப் பிறகு நபி அவர்கள் கற்றுக்கொடுத்தபடி சொல்வதோடு" வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் "என்று ணைத்துக்கொண்டார். இதனை பித்அத் என்று கண்டித்து திருத்தினார்கள் இப்னு உமர்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள்.
    "பித்அத் அனைத்தும் வழி கேடுகள்தான். மனிதர்கள் அவற்றில் சிலதை அழகானது(ஹஸன்) என்று கருதினாலும் சரியே" என ப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறியுள்ளார்கள்.
    "பின்பற்றுபவனாக ரு.புதிதாக ஒன்றை ஏற்படுத்தாதே" என இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறியுள்ளார்கள்.
    "நபித்தோழர்கள் செய்யாத வணக்க வழிபாடுகள் எதனையும்  செய்யாதீகள். முன் சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும் விட்டு வைக்கவில்லை" என ஹுதைபாرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவித்துள்ளார்கள். "அல்லாஹ்வின் ஏவல்களைக் கொண்டும், நபி அவர்களின் நடை முறைகளைக் கொண்டும் மார்க்கத்தை போதுமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய புதுமை (பித்அத்)களை விட்டுவிடுமாறு எச்சரிக்கை செய்கிறேன்." என தாபியீன்களின் தலை சிறந்தவரும்,சீரிய கலீபஃபாவுமான ப்னு அஜீஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
    நான்கு மாம்களின் மணியான உபதேசங்கள்
    இமாம் அபூஹனிபா (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
        நீங்கள் ஹதீஸ் ஆதாரங்களையும், நபிதோழர்களின் நடை முறைகளையும் பற்றிப் பிடிப்பவர்களாய்
ருங்கள். மார்க்கத்தில் புதிதாக தோன்றியவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அனைத்தும் பித்அத்துக்களும் வழிகேடுகளேயாகும்.
    இமாம் மாலிக் (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
        "மார்க்கத்தில் பித்அத்தை உண்டாக்கி அதற்கு பித்அத்து ஹஸனா என்று எவன் பெயர் சூட்டுகின்றானோ, அவன் நபி அவர்கள் தனது ரிஸாலத்தில் (தூதுவப் பணியில்) மோசடி செய்து  விட்டார்கள் என்றே கருதுகிறான்.எனேன்றால், அல்லாஹ், "அல்யவ்ம அக்மல்து லக்கும் தீனுக்கும்......என்று சொல்லிவிட்டான். அன்று மார்க்கமாக
ல்லாதது
இன்றும் மார்க்கமாக இருக்க முடியாது.
    இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
        எவன் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உண்டாக்கி,  அதை பித்அத்து ஹஸனா(அழகிய பித்அத்து) என்று  சொல்கிறானோ அவன் புதிதாக ஒரு மார்க்கத்தையே  உண்டாக்கி விட்டான்.

    இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
        எங்களிடம் சுன்னாவின் அடிப்படையாவது:ரசூல் அவர்களும், அவர்களது தோழர்களும்
ருந்த வழியை உறுதியாகப் பற்றிப் பிடித்து, அவர்களைப் பின்பற்றி பித்அத்துக்களை விடுவதேயாகும். ஏனென்றால் பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளேயாகும்.  நூல்:அஸ்ஸுன்னத்து வல் பித்ஆ