சூரத்துல் பகராவின் சிறப்புகள்

அல்லாஹ் தஆலா இந்த சமுதாயத்திற்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகளில் மிகப்பெரிய அருட்கொடையாக திருக்குர்ஆன் திகழ்கிறது. அந்த குர்ஆனை ஓதுபவர்களுக்கு பல சிறப்புகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

யார்
அல்லாஹ்வுடைய வேதத்திருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்துமடங்குவரை உண்டு. ”ஃப் லாம் மீம்என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக ப் ஒரு எழுத்து லாம் ஒரு எழுத்துமீம் ஒரு எழுத்து என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி­), நூல் : திர்மிதீ (2835)
­ ­­
இதே போன்று சில குறிப்பிட்ட சூராக்களுக்கு குறிப்பிட்ட சிறப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பது ஆதாரப்பூர்வமானஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திரு குர்ஆனில் சிறப்பித்து கூறப்படும் அத்தியாயம் தொடர்பாக உள்ள ஹதீஸ்களில் ஆதாரமற்ற ஹதீஸ்கள் அதிகமாக உள்ளது

ஆகவே அவற்றை தவிர்த்து கொண்டு .. ஆதாரமான ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம்

பகரா அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக வரும் ஹதீஸ்களின் தரத்தை பற்றிப் பாப்போம்


ஆதாரமான ஹதீஸ்கள்

விரண்டோடும் ஷைத்தான்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் உங்கள் இல்லங்களை (தொழுகை ஓதல் நடைபெறாத)சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள் அல்பகரா எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்தி­ருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.
அறிவிப்பாளர்:அபூஹரைரா(­)
நூல்: முஸ்லிம் 1430, திர்மிதி 2802, அஹமது 7487 , 8089, 8560, 8681


பரிந்துரை செய்யும் அத்தியாயம்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் குர்ஆனை ஓதிவாருங்கள் ஏனெனில் குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும் இரு ஓளிச்சுடர்களான அல்பகரா மற்றும் ஆலு இம்ரான் ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள் ஏனெனில் அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும் அல்பகரா அத்தியாயத்தை ஓதிவாருங்கள் அதைக் கையாள்வது வளம் சேர்க்கும் அதைக் கை விடுவது இழப்பைத் தரும் இவ்வசத்தியாயத்திற்கு முன் சூனியக்காரன் செய­ழந்துபோவார்கள்.
அறிவிப்பாளர் அபூ உமாமா (ரலி­)
நூல்: முஸ்­ம் 1440 அஹ்மத் 21126, 21136, 21169, 21186

இறைவனிடம் வாதம் செய்யும் சூரா.

நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளில் குர்ஆனும் அதன்படி செயலாற்றியவருர்களும் அழைத்து வரப்படுவார். அப்போது அல்பகரா அத்தியாயமும் ஆலு இம்ரான் அத்தியாயமும் முன்னே வரும் என்று கூறிவிட்டு (வ்விரு அத்தியாயங்களும் முன்னே வருவ)தற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வரும்) மூன்று உவமைகளைக் கூறினார்கள்.அவற்றை நான் இதுவரை மறந்திடவில்லை. அவ்விரு அத்தியாயங்களும் (நிழல் தரும்) மேகங்களைப் போன்று அல்லது நடுவே ஓளியுள்ள இரு கரும் நிழல்களைப் போன்று அல்லது அணி அணியாகப் பறக்கும் இரு பறவைக் கூட்டங்களைப் போன்று (முன்னே வந்து) தம்மைக் கையாண்டவருக்காக (இறைவனிடம்) வாதாடும்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி­)
முஸ்லிம் 1471, திர்மிதி 2808, 16979


ஷைத்தானை விரட்டும் சூரா.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் வானம் பூமியை படைப்பதற்கு ஆயிரம் வருடத்திற்கு முன்பு ஒரு கிதாபை எழுதினான் அந்த கிதாபி­ருந்து இரண்டு ஆயத்தை இறக்கி சூரத்துல் பகராவை முடித்திருக்கிறான் எந்த வீட்டில் மூன்று இரவுகள் ஓதப்படுகிறதோ அந்த வீட்டில் ஷைத்தான் நெருங்க மாட்டான்.
திர்மிதி 2882 தாரமி 3253


இரவு வணக்கத்திற்கு நிகரானது.

அல்பகராஅத்தியாயத்தின் இறுதி இரண்டு (02:285 – 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூ மஸ்ஊத் (ரலி)

புஹாரி : 4008

பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் ஓத வேண்டும். ''எவர் அல்பகரா எனும் (2வது) அத்தியாயத்தின் இறுதி இரு (286, 287) வசனங்களை இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு இந்த இரண்டுமே போதும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 5009.


ஆயத்துல் குர்ஸீ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் ரமளான் ஸகாத் பொருளைப் பாதுகாக்கும் பணியில் இருந்த போது, ஷைத்தான் வந்து திருடியதாகவும், அவன் பிடிபட்டவுடன், தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓதினால் ஷைத்தான் தீண்ட மாட்டான் என்று அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகவும் புகாரியில் ஹதீஸ் உள்ளது. அபூஹுரைராவின் முன் ஷைத்தான் வந்தானா? தூங்கும் போது ஆயத்துல் குர்ஸீ ஓதுவது ஷைத்தான் கற்றுத் தந்ததா?

ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த உணவுப் பொருளை அள்ளத் துவங்கினான். உடனே நான் அவனைப் பிடித்துக் கொண்டேன். "உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்'' என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்) இறுதியில் அவன், "நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்'' என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்ன போது, "அவன் பொய்யனாயிருந்தும் உம்மிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3275

கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் யார் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம்தான் தடையாக உள்ளது.

அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : நஸயீ



முந்திய
நபிமார்களுக்கு கொடுக்கப்படாத சூரா.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இந்த சமுதாயம் மற்ற சமுதயத்தை விட மூன்று சிறப்பு படுத்தப்பட்டிருக்கிறது பூமி முழுவதும் சுத்மமாகவும் தொழும் இடமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது இந்த சமுதயாயத்தின் வரிசை மலக்குமார்களுடைய வரிசையை விட சிறந்ததாகும் இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நான் சூரத்துல் பகராவின் கடைசி இரண்டு வசனங்களையும் அர்ஷின் கீழி­ருந்து கொடுக்கப்பட்டுள்ளேன் இதற்கு முன் எந்த நபிக்கும் கொடுக்கப்பட வில்லை என்றார்கள்.
நூற்கள்: அஹ்மத் (22167) முஸ்­ம் (252) திர்மிதி (3198) நஸயி (447) அஹ்மத் (3483)

மேற்கூறப்பட்ட அஹ்மத் அறிவிப்பை தவிர மற்ற அனைத்து நூற்களிலும் சூரத்துல் பகராவை நான் கொடுக்கப்பட்டுள்ளேன் என்று இடம் பெற்றுள்ளது கடைசி ஆனால் கடைசி இரண்டு வசனம் என்று இடம் பெற வில்லை.


ஆதாரமற்ற ஹதீஸ்கள்

சூரத்துல் பகரா இல்லாத வீடு ஒன்றுமில்லாத வீடு.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் உங்களில் ஒருவர் ஒரு காலுக்கு மேல் கால் போட்டு இசை கேட்பார் அவர் குர்ஆனை கேட்பதை விட்டு விடுவார் எந்த வீட்டில் சூரத்துல் பகரா ஓதப்படுகிறதோ அந்த வீட்டை விட்டு ஷைதான் விரண்டோடுகிறான் வீடுகளில் ஒன்றுமில்லாத வீடு எந்த வீடு குர்ஆனை விட்டு கா­யாக இருக்கிறதோ அந்த வீடுதான்.
நூல்: தாரமி (3258)
இந்த செய்தி மவ்கூப் பாகவும் மர்பூஃ ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது மவ்கூப் ஆன செய்தி ஆதாரமாக அமையாது ஆனாலும் மர்பூஃ ஆக வரக்கூடிய செய்தி ஆதாரப்பூர்வமாக இருப்பதால் இந்த செய்தி ஆதாரமாகும்.


பைத்தியத்தை நீக்கும் சூரா.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராம வாசி வந்து அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார் அவருக்கு நோய் இருக்கிறது என்றார் என்ன நோய் என்றார்கள் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொன்னார் நபி (ஸல்) அவர்கள் அவரை தன்னிடம் கொண்டு வா என்று சொன்னார்கள் அவர் அவரை கொண்டு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வைத்தார் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் சூரத்துல் பாத்திஹாவையும் சூரத்துல் பகராவின் முதல் நான்கு வசனங்களையும் இலாஹகும் இலாஹவ் வாஹித் என்ற ஆயத்தும் ஆயத்துல் குர்ஸியும் சூரத்துல் பகராவின் கடைசி ஆயத்தும் ஆல இம்ரான் என்ற அத்தியாயத்தில் ஷஹிதல்லாஹஅன்னஹலாயிலாஹா இல்லா என்ற ஆயத்தும் சூரத்துல் அஃராபில் இன்ன ரப்ப குமுல்லாஹல்லாஹல்லதி எனத் தொடங்கும் ஆயத்தும் சூரத்துல் முஃமினின் கடைசி வசனமான பதஆலல்லாஹஎனத் தொடங்கும் வசனமும் சூரத்துல் ஜின்னில் அன்னஹதஆலா எனத் தொடங்கும் வசனமும் சூரத்துல் ஸாப்பாத்தில் முதல் பத்து வசனமும் சூரத்துல் ஹஷ்ர் ரில் கடைசி மூன்று வசனமும் குல் வல்லாஹஎன்ற ஆயத்தும் முஅவ்விததைன் எனும் குல் அவூது பிரப்பில் பலக்கும் குல் அவூது பிரப்பின்னாஸ் என்ற அத்தியாயத்தையும் ஓதினார்கள் பின்பு அந்த மணிதர் நோயுராதவரைப் போன்று ஆகிவிட்டார்.
அறிவிப்பவர்: உபை பின் கஃபு (­)
நூல்: அஹ்மத்
(20237)
இந்த செய்தியில் உன்ர் பின் ­ என்பவரும் அபீ ஜனாப் என்பவரும் இடம் பெற்றுள்ளனர் இவ்விருவரையும் அறிஞர்களும் குறை கூறியுள்ளனர்.
அறிஞர் அஹ்மத் அவர்கள் இவர் தத்லீஸ் செய்பவர் என்பவர் என்றும் இப்னு மயீன் அவர்களும் இவ்வாறே சொல்கிறார்கள் இப்னு ஸஃது அவர்கள் இவர் கடுமையாக தத்லீஸ் செய்பவர் என்றும் பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம் 7 பக்கம் 427)
இந்த ஹதீஸில் மற்றொரு அறிவிப்பாளரான அபீ ஜனாப் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவரையும் அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
அறிஞர் இப்னு மயீன் அவர்கள் இப்னு ஸஃது சொன்னதாக சொல்கிறார் இவரை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர் என்றும் இமாம் புகாரி அவர்களும் அபூஹாதம் அவர்களும் இப்னுல் கத்தான் அவர்கள் பலவீனமாக்கியதாக குறிப்பிடுகிறார்கள் இப்னு மயீன் அவர்கள் பலவீனமானவர் என்றும் உஸ்மான் தாரமி அவர்கள் பலவீனமானவர் என்றும் இஜ்­ அவர்களும் இவர் பலவீனமானவர் என்றும் அம்ரு பின் அலீ அவர்கள் இவர் ஹதீஸ் துரையில் கைவிடப்பட்டவர் என்றும் இமாம் ஜவ்ஜஸானி அவர்கள் இவர் பலவீமானவர் என்றும் இதே போன்று யஃகூப் பின் சுப்யான் அவர்களும் இவர் பலவீனமானவர் என்றும் இதே போன்று இமாம் அபூஹாதம் அவர்களும் இமாம் அபூதாவூத் அவர்களும் இமாம் நஸயீ அவர்களும் பலவீனமானவர் என்றும் இமாம் ஸாஜி அவர்கள் இவர் ஹதீஸ் துரையில் பலவீமானவர் என்றும் இப்னு அம்மார் அவர்களும் அபூஅஹ்மத் அவர்களும் பலவீமானவர் என்றும் இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவரை பலவீமானவர் பட்டிய­ல் சேர்த்துள்ளார்.
நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம் 11 பக்கம் 177)


குர்ஆனின்
திமிழ்.

ஓவ்வொரு பொருளுக்கும் திமில் (உயரமான பகுதி) என்று ஓன்று உண்டு. குர்ஆனின் திமில் சூரத்துல் பகராவாகும், இன்னும் அதிலே ஓரு வசனம் உண்டு அது குர்ஆனின் தலைவியாகும் அதுவாகிறது ஆயத்துல் குர்ஸியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூற்கள்:திர்மிதி
(2803)
இந்த ஹதீஸ் மூன்று வழியாக வந்துள்ளது முதலாவது செய்தியில் ஹகீம் பின் ஜுபைர் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவரை அறிஞர்கள் குறை கூறியுளள்னர்.
இமாம் அஹ்மத் அவர்கள் இவர் ஹதீஸ் துரையில் பலவீனமானவர் மூழை குழம்பியவர் என்றும் இப்னு மயீன் அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும் யஃகூப் பின் ஷைபா அவர்கள் இவர் ஹதீஸ் துரையில் பலவீனமானவர் என்றும் இப்னு அபீ ஹாதம் அவர்கள் இவர் ஹதீஸ் துரையில் பலவீனமானவர் நிராகரிக்கப்பட்டவர் என்றும் இமாம் புகாரி அவர்கள் ஷீஃபா அவர்கள் இவரை விமர்சனம் செய்துள்ளார் என்றும் இமாம் நஸயீ அவர்கள் பலவீனமானவர் என்றும் இமாம் தாரகுத்னீ அவர்கள் கைவிடப்பட்டவர் என்றும் இப்னு மஹ்தீ அவர்கள் இவர் குறைவான செய்திகளை அறிவிக்கிறார் அதிலும் நிராகரிக்கப்பட வேண்டிய செய்தியை அறிவித்துள்ளார் என்றும் இமாம் அபூதாவூத் அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.
நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம் 2 பக்கம் 383)
இரண்டாவது வழியில் கா­த் பின் ஸயீத் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவரையும் அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
இவருடைய யாராலும் வழி மொழியப்படாததாகும் நூல்: மீஸானுல் இஃதிதால் (பாகம் 2 பக்கம் 412)
மூன்றாவது மஃகல் பின் யஸார் ­ அறிவிக்கும் செய்தி இதில் யாரென்று அறியப்படாத இரண்டு நபர்கள் இடம் பெற்றுளளனர் இவரையும் அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

பகரா குர்ஆனின் திமிலாகும். குர்ஆனின் கிளைகளாவது ஓவ்வொரு வசனத்துடனும் எண்பது மலக்குகள் இறங்குகின்றன.இன்னும் ஆயத்துல்குர்ஸி அர்ஷின் கீழிருந்து வெளியேற்றப்பட்டதாகும். பிறகு ஆயத்தல்குர்ஸியைக் கொண்டு சூரத்துல் பகரா இணைக்கப்பட்டது அல்லது சூரத்துல் பகராவைக் கொôண்டு ஆயத்துல்குர்ஸி இணைக்கப்பட்டது.இன்னும் சூரத்து யாஸீன் குர்ஆனின் இதயமாகும் அல்லாஹ்வையும் மறுமை வீட்டின் நற்பேற்றை நாடி ஓரு மனிதர் அதனை (யாஸீன்) ஓதினால் அவருடைய (பாவங்கள்)மன்னிக்கப்படும்.இன்னும் நீங்கள் அதனை மரணத்தருவாயில் இருப்பவர் அருகே ஓதுங்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஃகல் பின் யஸார் (ரலி­)
நூல்: அஹ்மத்
(19415)
இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஒரு மணிதர் என்று இடம் பெற்றுள்ளார் என்று இடம் பெற்றுள்ளது இவரும் இவர் தன்னுடைய தந்தையின் மூலம் அறிவிக்கிறார் இவருடைய தந்தையைப்பற்றியும் எந்த குறிப்பும் இடம் பெற வில்லை எனவே இவர்கள் யாரென்று அறியப்படாதவர்கள் இவர்களுடைய அறிவிக்க கூடிய இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது.
நான்காவதாக இப்னு மஸ்வூத் (­) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஆனால் இது மவ்கூப் ஆன செய்தியாகும்.


வளம்
சேர்க்கும் சூரா.

சூரத்துல் பகராவைக் கற்றுக் கொள்ளுங்கள் அதைக் ஓதுவது வளம் சேர்க்கும் அதைக் கை விடுவது இழப்பைத் தரும் இவ்வசத்தியாயத்திற்கு முன் சூனியக்காரன் செய­ழந்துபோவார்கள். பிறகு சிறிது நேரம் கழித்து திரும்பவும் கூறலானார்கள். சூரத்துல் பகராவையும் சூரத்துல் ஆலஇம்ரானையும் கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் அவ்விரண்டும் மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது இரு அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும் இன்னும் குர்ஆன் அதனின் தோழர் அவர் கப்ரி­ருந்து எழுப்படும் நாளில் ஓரு மனித உருவில் அவனிடம் வந்து கூறும் நீ என்னை அறிவாயா?அவன் அம்மனிதரிடம் கூறுவான் நான் உன்னை அறியமாட்டேன் இவ்வாறு இரண்டு தடவை அம்மனிதர் கேட்பார். அவன் அவன் நான் உன்னை அறியமாட்டேன் எனக் கூறுவான். கடைசியாக அம்மனிதன் நான் தான் உன் தோழன் குர்ஆன் கடுமையான வெயில் நேரத்தில் உன்னிடத்தில் இளைப்பாறினேன். உன்னுடைய இரவு நேரங்களில் விழித்தேன் ஒவ்வொரு வியாபரிகளும் அந்த விளாபாரத்திற்குப் பின்னால் இருந்தார்கள் ஆனால் இன்றைய தினம் வியாபாரம் இனக்கு பின்னால் இருக்கிறது பிறகு அரசாட்சியை அவனுடைய வலது கையில் கொடுக்கப்படும் அவனுடைய இடது கையில் நிரந்தரமான பாக்கியத்தை கொடுக்கப்படும் அவனுடைய லையில் கம்பிரமான கிரீடம் வைக்கப்படும் அவனுடைய பெற்றோர்களுக்கு இரண்டு நகைகள் அணிவிக்கப்படும் உலக வாசிகள் அவர்களுக்கு நிகராக ஆக முடியாது பின்பு (தாய் தந்தையர்கள் இருவரும்) எதன் காரணமாக இதை நாங்கள் அணிவிக்கப்படுகிறோம என்று கேட்பார்கள் உங்களுடைய குழந்தைகள் குர்ஆனை படித்த காரணத்தினால் இது வழங்கப்படுகிறது என்று சொல்லப்படும் பின்பு குர்ஆனை ஓதியவருக்கு நீ ஓது நீ குர்ஆனை ஓதும் காலமெல்லாம் சொர்க்கத்தில் உள்ள அந்தஸ்துகளில் நீ உயரமான அந்தஸதை அடைந்து கொள்ளப்படும் என்று சொல்லப்படும்.
அறிவிப்பவர்: புர்தா பின் ஹஸீப் (­)
நூற்கள்:அஹ்மத் (21872)இப்னு மாஜா (3771) தாரமி
(3257)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் பிஷ்ர் பின் முஹாஜிர் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவரை அறிஞர்கள் விமர் சனம் செய்துள்ளனர்.
இமாம் அஹ்மத் அவர்கள் இவர் ஹதீஸ் துரையில் நிராகரிக்கப்பட்டவர் என்றும் இப்னு மயீன் அவர்களும் இப்னு அபீஹாதம் அவர்களும் இவருடைய ஹதீஸ்களை எழுதலாம் ஆனால் ஆதாரம் பிடிக்க கூடாது இமாம் புகாரி அவர்கள் இவர் அறிவித்த செய்திகளில் சிலதில் மாற்றமாக அறிவிக்க கூடியவர் என்றும் இப்னு அதீ அவர்கள் இவர் அறிவித்த செய்திகள் யாராலும் வழி மொழியப்படாதவை என்றும் இப்னு ஹிப்பான் அவர்கள் இவர் அனஸ் (ரலி­) அவர்களை தொட்டும் தத்லீஸ் செய்பவர் என்றும் இவர் அதிகமாக தவறிழைப்பவர் என்றும் இமாம் ஸாஜி அவர்கள் இவர் ஹதிஸ் துரையில் நிராகரிக்கப்பட்டவர் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.
நூல் : தஹ்தீப் தஹ்தீப் (பாகம் 1 பக்கம் 411)
இந்த செய்தியின் சில வாசகங்கள் மட்டும் ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளில் இடம் பெற்றிருந்தாலும் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸின் வாசகங்களை விட கூடுதலாக இடம் பெற்றுள்ளது கூடுதலாக இடம் பெற்ற இந்த அறிவிப்பு பலகீனமானதாகும் ஏனென்றால் இந்த அறிவிப்பாளர் தொடரில் யஹ்யா பின் அப்துல் ஹீமைத் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் பலவீனமானவர்.
யஹ்யா பின் அப்துல் ஹீமைத் என்பவர் பலவீனமானவர் என்று நஸயீ அவர்கள் கூறுகிறார்கள்.
நூல: லுபாவு வல மத்ரூகீன் (பாகம் 1 பக்கம் 107)
இப்னு நூமைர் அவர்கள் இவர் பொய்யர் என்றும் இமாம் அஹ்மத் அவர்கள் இவர் பகீரங்கமாக பொய் சொல்பவர் என்றும் இவர் ஹதீஸ்களை திருடிக்கொண்டிருந்தார் என்பதை அறிந்து வந்தோம் இப்னு ஸஃதி அவர்கள் இவர் வீழ்தாட்டப்பட்டவர் என்றும் இமாம் அவர்கள் பலவீனமானவர் என்றும் இப்னுமயீன் அவர்கள் இவர் பலமானவர் என்று கூறுகிறார்கள்.
நூல்: லுபாவு வல் மதரூகீன் (பாகம் 3 பக்கம் 197)


இரு
உலகத்தின் நன்மையை பெற்றுத் தரும் சூரா.

ஒரு மணிதர் நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனுடைய அத்தியாயங்களில் மிகச்சிறப்பான அத்தியாயம் எது என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் குல் வல்லாஹஅஹத் என்ற அத்தடியாயம் என்றார்கள் பின்னர் அவர் குர்ஆன் வசணங்களில் சிறந்த வசணம் எது என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆயத்துல் குர்ஸி என்றார்கள் பின்னர் அவர் அல்லாஹ்வின் தூதரே உன்னுடைய உம்மத் எந்த ஆயத்தை பெற்றுக்கொள்வதை விரும்புகிறீர்கள் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் சூரத்துல் பகராவின் கடைசி வசணங்கள் என்றார்கள் ஏனென்றால் அது அல்லாஹ்வின் அர்ஷின் கீழே உள்ள அருளின் பொக்கிஷமாகும் இந்த வசணங்களை இந்த உம்மத்திற்காக கொடுத்திருக்கிறான் இது துன்யா மற்றும் மறுமையின் நன்மை அனைத்தையும் பொதிந்ததாக இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: தாரமி (3380)

இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள அய்பஃ என்பவர் விமர்சனத்திற்குள்ளானவர்.
இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அய்பஃ இப்னு அப்துல் கலாயீ என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் தனக்கு முன்னால் உள்ள ஸஹாபிகளை விட்டு அறிவிப்பவர்.
நூல்: ­ஸானுல் மீஸான் (பாகம் 1 பக்கம் 476)
எனவே இந்த செய்தி முர்ஸலாகும் இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது.
அல்லாஹ் சூரத்துல் பகராவை இரண்டு ஆயத்துகளை கொண்டு முடித்திருக்கிறான் அந்த இரண்டு ஆயத்துகளை அர்ஷின் கீழி­ருக்கின்ற பொக்கிஷத்தி­ருந்து கொடுத்திருக்கிறான் அந்த ஆயத்துகளை உங்களுடைய பெண்களுக்கு கற்று கொடுங்கள் ஏனென்றால் அது தொழுகையும் குர்ஆனும் துஆவும் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: தாரமி (3390)
இந்த ஹதீஸ் முர்ஸலாகவும் மாபூஃ ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் மாபூஃ ஆக வரக்கூடடிய ஹதீஸ் பலவீனமானதாகும். ஏனென்றால் இலருடைய மணண சக்தியில் கோளாரு இருக்கிறது அது மட்டுமில்லாமல் இப்னு வஹப் இவருக்கு மாற்றமாக அறில்த்திருக்கிறார் இவர் ஹாபிழ் ஆகும் எனவே மர்பூ ஆன செய்தியியையும் மவகூளப் ஆன செய்தியையும் ஏற்றுளுக்கொள்ள முடியாது.
இந்த செய்தியில் எனவே இந்த செய்தியை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.



முந்திய
வேத்தில் உள்ள சூரா.

நான் சூரத்துல் பகராவை முந்திய வேதததி­ருந்து கொடுக்கப்பட்டுள்ளேன் என்று நபி )ஸல்( அவர்கள் கூறினார்கள்.
நூல்: ஹாகிம் (பாகம் 1) (பக்கம்
749)

இந்த ஹதீஸ்களின் அனைத்திலும் உபைதுல்லாஹ் பின் அபீ ஹீமைத் என்பவரே இடம் பெற்றுள்ளார் இவரை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
இவர் அறிவிப்பாளர் வரிசைகளை புரட்டுபவர் இவர்தான் இந்த செய்திகளை உருவாக்கினார் என்று சந்தேகப்பட முடியாத அளவிற்கு செய்திகளை கொண்டு வருபவர் இதனால் இவர் விடப்படுவதற்கு தகுதயானவராகும்.
நூல்: மஜ்ரூஹீன் (பாகம் 2 பக்கம் 65)


அர்ஷின் கீழி­ருந்து இறங்கிய பொக்கிஷம்.

நான்கு ஆயத்துகளை அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் உள்ள கஜானாவி­ருந்து இறக்கியிருக்கிறது அவைகள் அல்லாத வேறு யாதும் இறங்க வில்லை (முதலாவது) உம்முல் குர்ஆன் அல்லாஹ் இதைப்பற்றி குறிப்பிடும் போது அது நம்மிடத்திலே உள்ள தாய ஏட்டில் இருக்கிறது (இரண்டாவது) ஆயத்துல் குர்ஸி (மூன்றாவது) சூரத்துல் பகரா (நான்காவது) கவ்ஸர் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஃஜமுல் கபீர் (பாகம் 8 பக்கம் 235)
இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் வலீத் பின் ஜமீல் என்பவர் இடம் பெருகிறார் இவûரை அறிஞர்கள் விமர்சனமி; செய்துள்ளனர்.
இமாம் அபூஸர்ஆ அவர்கள் இவர் பலவீமானவர் என்றும் இவர் காஸிம் என்பவவரை வழியாக நிராகரிக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவித்திருக்கிறார் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.
நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம் 11 பக்கம் 116)
இமாம் அபூஸர்ஆ கூறியதைப் போன்று இவர் காஸிம் என்பவர் வழியாகத்தான் இந்த செய்தியை அறிவித்துள்ளார்.
எனவே இந்த செய்தியை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

அல்லாஹ் இரண்டு வசணங்களை தன்னுடைய அர்ஷின் கீழ் உள்ள பொக்கிஷத்தி­ருந்து இறக்கியிருக்கிறான் இவ்விரண்டு ஆயத்துகளையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் படைப்பினங்கள்>>>>>>> தன்னுடைய கையினால் எழுதினான் யார் அந்த இரண்டு ஆயத்துகளையும் 1ஷாவுக்கு பின்னால் ஓதுகிறாரோ இரவில் நின்று வணங்குவதை விட்டும் போதுமானதாகும் அவ்விருவசனங்கள் ஆமனர்ரசூலு என்று தொடங்கும் வசனத்தி­ருந்து சூரா முடிவு வரை யாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தாரிகு ஜீர்ஜான் (பாகம் 1 பக்கம்
268)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் வலீத் பின் உபாத் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவரை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
இந்த செய்தியை அபான் என்பவர் ஆஸிமை வழியாக அறிவித்துள்ளார் அபான் என்பவர் என்பவர் இந்த செய்தியை தவிர மற்ற செய்தியை அறிவிப்பதாக நான் அறிய மாட்டேன் என்று காமில் நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்
நூல்: காமில் பீ லுபாவுர் ரிஜால் (பாகம் 7 பக்கம் 84)