ஹதீஸ் எண்: 211
தொடர்ந்து கசிகின்ற இச்சை நீரைப் பற்றியும் குளிப்பு கடமையாக்கும் காரியங்கள் பற்றியும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் அது மதி (இச்சை நீராகும்) ஆண் உயிரினங்கள் அனைத்தும் இச்சை நீரை வெளிப்படுத்தக் கூடியவைதான். அது வெளிப்பட்டு விட்டால் உனது உறுப்பையும், விதைகளையும் கழுவிக் கொள். மேலும் தொழுகைக்கு நீ உலூச் செய்வது போன்று நீ உலூச் செய்து கொள் என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் சஃது அல் அன்சாரி (ரலி) அவர்கள்.
ஹதீஸ் எண்: 212
எனது மனைவி மாதவிடாய் ஆனவளாக இருக்கும் போது எனக்கு அவளிடத்தில் அனுமதியானது என்ன? என்று ஹிசாம்பின் ஹகீம் அவர்களின் சிறிய தந்தை அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களிடம் வினவிய போது, 'இடுப்புக்கு மேற்பகுதி உனக்கு அனுமதியாகும்' என்று பதிலளித்தார்கள், என்று அறிவித்து இதன் அறிவிப்பாளர் மாதவிடாய் பெண்ணுடன் கலந்துண்ணுவதை கூறி இந்த ஹதீஸை தொடர்கிறார்.அறிவிப்பவர்: தனது சிறிய தந்தை வாயிலாக ஹிசாம் பின் ஹகீம் அவர்கள்.
ஹதீஸ் எண்: 213
தனது மனைவி மாதவிலக்கானவளாக இருக்கும் போது ஒருவருக்கு அவளிடம் அனுமதிக்கப்பட்டது என்ன? என்று நான் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவிய போது இடுப்புக்கு மேற்பகுதி ஆகும். ஆனால் இதை விட்டு தவிர்ந்திருப்பது சிறந்ததாகும். என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள்.இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்: இந்த ஹதீஸ் வலுவானது அல்ல.
பாடம்: 84 விந்து வெளிப்படாது உடலுறவு கொள்ளல்
ஹதீஸ் எண்: 214
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் (இதை) உடலுறவு கொண்டு விந்து வெளிப்பட வில்லையானால் குளிக்க வேண்டியதில்லை என்பதை இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் மக்களுக்கு அனுமதி வழங்கிய காரணம் ஆடைகள் போதாமையினால் தான். பிறகு குளிக்க வேண்டுமென்று கட்டளை விதித்து, அதற்கு தடை விதித்து விட்டார்கள்.அறிவிப்பவர்: உபையி பின் கஃப் (ரலி) அவர்கள்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
(இதை என்பதன் விளக்கமாக விந்து வெளிப்பட்டாலே குளிக்க வேண்டும் என்பதாகும்)
நீருக்கு நீர் பரிகாரம் என்றால் உடலுறவின் போது இந்திரியம் வெளிப்பட்டால் மட்டும் குளிப்பது கடமையாகும் என்பதைக் குறிக்கும் இது ஆரம்ப காலத்தில் உள்ள சலுகை என்று இந்த ஹதீஸில் அறிகின்றோம்.ஹதீஸ் எண்: 215
விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும் என்று அவர்கள் அளித்த தீர்ப்புகள் யாவும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய துவக்க காலத்தில் வழங்கிய அனுமதியே பின்னர் அவர்கள் குளிக்கும்படிக் கட்டளையிட்டனர்.அறிவிப்பவர்: உபையி பின் கஃப் (ரலி) அவர்கள்.
ஹதீஸ் எண்: 216
ஒருவன் தன் மனைவியுடைய நான்கு கிளைகளுக்கு இடையே அமர்ந்து ஆண்குறியை பெண்குறியோடு இணைத்தால் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமையாகிவிடும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.ஹதீஸ் எண்: 217
விந்து வெளிப்பட்டாலே குளிக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் சொன்னார்கள்.அபூஸலமா அவர்கள் இவ்வாறே செய்வார்கள்.
பாடம்: 85 குளிக்காமல் மறுமுறை உடலுறவு கொள்ளல்
ஹதீஸ் எண்: 218
ஒரு நாள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மனைவியர்களிடம் சென்று விட்டு கடைசியில் ஒரு தடவையே குளித்துக் கொண்டார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள்.
இந்த ஹதீஸை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஹிஷாம் பின் ஜைத் அவர்களும் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து கதாதா அவர்கள் வாயிலாக மஃமர் அவர்களும், ஜுஹ்ரி வாயிலாக சாலிஹ் பின் அபுல் அகலர் ஆகிய அனைவருமே அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் (ரலி) வாயிலாக அறிவிக்கின்றனர்.
பாடம்: 86 திரும்ப உடலுறவு கொள்ளும் முன் உலூச் செய்தல்
ஹதீஸ் எண்: 219
ஒரு நாள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியர்களிடம் சென்று விட்டு ஒவ்வொரு தடவையும் குளித்தார்கள். அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களே! இதை நீங்கள் மொத்தமாக ஒரு தடவை குளித்திருக்கக் கூடாதா? என்று நான் வினவிய போது இதுவே உள்ளும் புறமும் சுத்தமானதாக ஆகும் என்று பதில் அளித்தனர்.அறிவிப்பவர்: அபூராபிஃ அவர்கள்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
அனஸ் (ரலி) அவர்களது ஹதீஸ் இதைவிட மிகச் சரியானதாகும்.ஹதீஸ் எண்: 220
உங்களில் ஒருவர் தனது மனைவியிடம் உடலுறவு கொண்டு விட்டு மீண்டும் அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்று தோன்றினால் அவ்விரண்டிற்கும் இடையில் அவர் உலூச் செய்வாராக! என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்.
Labels:
அபூதாவூது