யார் இவர்? - ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

1. இவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகு ஏழு நாள்வரை வேறு எவரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.
2. அல்லாஹ்வின் பாதையில் அம்பெய்த அரபுகல் நானே முதலாமவன் ஆவேன் என்று கூறியவர்.
3. இவர் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட ஒருவர்.
4. நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்றபோது அவர்களை இரவில் காவல் காத்தவர்.
5. நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து இவருக்கு அர்ப்பணிப்ப தாக சொன்னார்கள்.
6. உஹுதுப் போரில் முஸ்லிம்கள் சிதறி ஓடியபோது நபி களாருக்கு பக்க பலமாக இருந்த இருவரில் ஒருவர். 7. இவரை குணப்படுத்து, இவரின் ஹிஜ்ரத்தை முழுமைப் படுத்து என்று நபி (ஸல்) அவர்கள் பிராத்தித்தார்கள். 8. தம் சொத்தில் பாதியை தர்மம் செய்ய முன்வந்தவர்.
9. இவரின் தொழுகை விஷயமாக மக்கள் உமர் (ரலி) அவர்களிடம் முறையிட்டு இருக்கிறார்கள்.
10. இவருக்கு ஸஅது பின் மாலிக் என்று மற்றொரு பெயரும் உண்டு.

விடை:
ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
ஆதாரம் :
1. புகாரி (3727),
2. புகாரி (3728),
3. அஹ்மத் (1585)
4. புகாரி (2885),
5. புகாரி (3725),
6. புகாரி (3723),
7. புகாரி (5659),
8. புகாரி (5659),
9. முஸ்லிம் (775),
10. புகாரி (4059)