தப்லீக் ஜமாஅத்

இந்தியாவின் தமிழகத்திலே நெய்வேலி எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்தான் சகோதரர் எம் .யூஸூப் பாய் அவர்கள். சிறுபிராயத்திலிருந்தே தஃவாப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். மிக நீண்டகாலமாகவே தப்லீக் ஜமாஅத் அமைப்பில் இணைந்து செயற்பட்டு பல்வேறு இடங்களுக்கெல்லாம் நீண்ட வக்துக்களில் சென்று, பல தப்லீக் பெரியார்களைச் சந்தித்து அளவலாவிய அனுபவங்கள் அவர்களுக்கு நிறையவே உண்டு.
தப்லீக் அமைப்பிலுள்ள பல விடயங்கள் குர்ஆன் ஹதீஸூக்கு முரணாவதாக அவரது மனம் உறுத்தவே பெரியார்களிடம் அது பற்றிக் கேட்க அவர்கள் சொன்ன பதில் திருப்தியளிக்காததால் அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு குர்ஆன் ஹதீஸின் பிரகாரம் தஃவத்துச் செய்யும் அமைப்புகளோடு இணைந்து கொண்டார் .
அல்ஜூபைல் தஃவா நிலையத்தில் நீண்ட காலமாகவே தன்னார்வத் தொண்டராக தஃவாப் பணியில் ஈடுபட்டு வந்த இவர் தாயிகளுக்கு ஒரு முன்மாதிரியானவராக பல அருங்குணங்கள் மிக்கவராயிருந்தார். அவர் தான் மேற்படி தலைப்பில் ஒரு நூல் எழுதும் எண்ணம் இருப்பதாக நான் சொன்னபோது என்னை ஊக்கப்படுத்தி இப்படியான ஒரு நூல் எழுதப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி அதற்கான துணை நூல்கள் பலவற்றையும் தேடியெடுத்துத் தந்து உதவியவர். பின்னர் அவரே இந்த நூல் முற்றுப் பெற்றதும் அதனைப் பெற்று சரிபார்த்தும் தந்தார் . அன்னார் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த சாலை விபத்தொன்றில் திடீர் மரணமடைந்து விட்டார்கள் இன்னாலில்லாஹி அஇன்னா இலய்ஹி ராஜிஊன் . அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸைக் கொடுப்பானாக . ஆமீன் யா ரப்பல் ஆலமீன் .
இஸ்லாத்தில் மெஞ்ஞானமா ?

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் முழு மனித சமுதாயத்துக்குமே நபியாக அனுப்பப்பட்டவர்கள். அவர்களுக்கு அல்லாஹ் மக்கள் நேர்வழி பெறவேண்டும் என்பதற்காக அல்குர்ஆனை அருளினான் . நபியவர்களும் உலக மக்கள் அனைவருக்கும் இவ்வுலகில் ஒருமனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் எதிர் நோக்கும் தேவைகள்,பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வினை இனிதே கூறிச்சென்றிருக்கின்றார்கள் . அவர்களது வழிமுறையினை நாம் 'ஸூன்னா' என்று அழைக்கின்றோம் . நபியவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்து செல்லும் போது இவ்வாறு கூறினார்கள் ...
' மக்களே நான் உங்களைத் தெட்டத் தெளிவானதொரு பாதையிலே விட்டுச் செல்கின்றேன் அதன் இருள் சூழ்ந்த இரவுப்பகுதி கூட பட்டப்பகலைப் போல் பிரகாசமிக்கதாய் விளங்குமளவுக்கு அவ்வழி மிகத் தெளிவான வழியாகும் . தன்னைத் தானே அழிவின் பக்கம் போட்டுக் கொள்ளும் துரதிஷ்டமிக்கவனைத் தவிர வேறு எவரும் இவ்வழியை விட்டும் தடம் புரண்டு செல்ல மாட்டார்கள் ' ( இப்னு மாஜா 43 )

மேலும் கூறியுள்ளார்கள் 'நான் உங்கள் மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன் . அவ்விரண்டையும் பலமாகப் பற்றிப் பிடித்திரும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறி விட மாட்டீர்கள், அவைதான் ஒன்று அல்குர்ஆன் அடுத்தது எனது குடும்பத்தினரின் வழிமுறையாகும்'என்றார்கள். ( முஸ்லிம் 2137 )

நபித்தோழர் இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். 'ஒரு முறை நபியவர்கள் நீண்டதொரு கோட்டினை வரைந்தார்கள் . பின் அக்கோட்டுக்கு வலது இடது புறமாகப் பலகோடுகளை வரைந்தார்கள் . பின்பு இதோ இருக்கும் நேர் கோடு (போன்றது) தான் நான் உங்களுக்குக் காட்டிய வழி முறையாகும் . அதற்குக் குறுக்கே இரு மருங்கிலும் இருக்கும் பாதைகள் ஷைத்தானுடைய பாதைகளாகும் . அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஷைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றான் என்று கூறி விட்டுப் பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள் .

وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيماً فَاتَّبِعُوهُ وَلا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ (153 انعام)
' நிச்சயமாக இது தான் எனது நேரான பாதையாகும் , எனவே இதையே நீங்கள் பின்பற்றுங்கள் (இதுவல்லாத) வேறு பாதைக ளைப் பின்பற்ற வேண்டாம் . ஏனெனில் அவை நேரான வழியை விட்டும் உங்களைப் பிரித்துத் தடுத்திடும் . நீங்கள் நல்லறிவு பெறவேண்டுமென்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு இந்த உபதேசத்தைச் செய்கின்றான் . ( அல் அன்ஆம் 153 )
.
எனவே மேற்படி நபிமொழிகளிலிருந்து நபியவர்கள் அனைத்து முஸ்லிம்களையும் அல்குர்ஆன் அல்ஹதீஸ் வழியிலேயே நடக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருப்பதுடன் அதைப் புறக்கணித்து வேறு வழியில் நடக்க முற்படும் போது நிச்சயமாக அது வழிகேட்டின் பக்கமே இட்டுச் செல்லும் என்றும் எச்சரித்திருப்பதை அறிய முடிகின்றது .ஸூபித்துவம் என்றால் என்ன ?...

ஸூபித்துவம் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான வரைவிலக்கணத்தை ஸூபித்துவ வாதிகளின் நூல்களில் கூட விரிவாகக் காணமுடியவில்லை . எனினும் அவர்களது கருத்துக்கள் சிந்தனைப் போக்குகளிலிருந்து இவ்வாறு விளங்க முடிகின்றது.
ஸூபித்துவம் என்பது 'இஸ்லாமியப் போர்வையில் உருவாக்கப்பட்ட யூத .கிருஷ்த்தவ, கிரேக்கம் போன்ற மாற்று மத தத்துவங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்ட சித்தார்த்தங்களை அடிப்படையாக வைத்து துறவரம் பூண்டு ஆத்மீகவழி நடப்பதாகக் கூறிக் கொள்ளும் ஒரு கொள்கைக்கே ஸூபித்துவம் எனப்படும்' இதன் வழி நடப்பவர்கள் ஸூபிகள் என அழைக்கப்படுவார்கள்.

எனவே பாமர மக்கள் நம்புவதைப் போன்று உலக ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி ஆத்மீகப் பாதையின் பக்கம் அழைக்கும் ஒரு அமைப்பே ஸூபித்துவம், ஸூபிகள் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற இறைநேசச் செல்வர்கள் என்பதெல்லாம் உண்மைக்குப் புறம்பான அப்பட்டமான மூடத்தனமான கருத்தாகும் . ஸூபித்துவம் பற்றி எடுத்துக் கூறிய தமிழ் நூல்கள் கூட இவர்களின் யதார்த்த நிலை பற்றிப் பெரிதாக ஆராயாது இதைப் பற்றி நல்லபிப்பிராயம் தெரிவித்திருப்பதன் விளைவே இந்த இறை மறுப்புச் சித்தாந்தம் இன்று பாமர மக்கள் மத்தியில் பரவி நன்மதிப்பைப் பெற்றுள்ளது . எனவே இதற்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இதற்கும் நபிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை . மாறாக நபியவர்கள் கூறியது போல் சீரிய நபி வழியை விட்டும் நெறி தவறிய வழிகெட்ட கூட்டங்களில் மிகமிக வழிகெட்ட கூட்டத்தினரே இந்த ஸூபித்துவவாதிகள் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும் .ஸூபித்துவத்தின் தோற்றம்

இவ்விடத்தில் முக்கியமான ஒரு விடயத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதாவது அல்லாஹ்வின் பகிரங்க விரோதியான ஷைத்தான் மனித சமூகத்தை நேர்வழியை விட்டும் திசை திருப்பி நரகத்தில் வீழ்த்துவதற்காக இரண்டு விதமான யுக்திகளைக் கையாள்வான். ஓன்று இஸ்லாமியக் கோட்பாடுகள் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிப்பதில் வெறுப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இஸ்லாத்தை விட்டும் தூரமாக்கி வெளியேற்றி பாவச் செயல்களில் ஈடுபடச் செய்து வழிகெடுத்து விடுவான். கொஞ்சம் இறை பக்தி ஆத்மீகப் பற்று, வணக்க வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவேரை வழிகெடுப்பதற்கு மற்றொரு வழிமுறையைக் கடைப் பிடிப்பான் . அதாவது அவர்களின் மார்க்க அறிவின்மையைப் பயன்படுத்தி இஸ்லாத்தில் இல்லாத , இஸ்லாம் தடுத்த விடயங்களை – அவைதான் இஸ்லாமிய அனுஷ்ட்டானங்கள் என நம்ப வைத்து அதன் வழியில் நடக்க வைத்து வழிகெடுத்து விடுவான் . இந்த வகையில் ஷைத்தானால் சூழ்ச்சி செய்யப்பட்டு ஆத்மீகத்தின் பெயரால் வழிகெடுக்கப்பட்டவர்களே ஸூபித்துவ வாதிகள் எனும் உண்மை ஆரம்ப கால ஸூபிகளில் வரலாற்றைப் படிக்கும் போது தெளிவாகும் .

உண்மையைச் சொல்லப் போனால் ஸூபித்துவ வாதிகள் தமக்கு இருப்பதாக வாதிடும் மறைவான அறிவு, கஸ்பு, தரீக்கத், ஹக்கீக்கத், மஃரிபத் ஞானம், ஜத்பு ( தன்னை மறந்த நிலை), பனாஃ (கடவுளோடு சஞ்சரித்தல்) இவை போன்ற அனைத்து விவகாரங்களும் இவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தி இவர்களை வழி கெடுப்பதற்காக இவர்களின் சிந்தனையில் ஏற்படுத்தும் குழப்பங்களேயாகும் . இவையனைத்தும் அவனின் மாயாஜால யுக்திகளே என்பதை முதலில் தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சரி விடயத்துக்கு வருவோம்.
ஸூபித்துவம் எப்போது ஆரம்பமானது என்று ஆராயும் போது நபி (ஸல்) அவாகளின் காலத்திலோ அவர்கள் உருவாக்கி விட்டுச் சென்ற ஸஹாபாச் சமூகத்தினர் மத்தியிலோ, அதன் பின் சிறந்த காலத்தினரென நபியவர்கள் விதந்துரைத்த தாபியீன்களது காலத்திலோ இவ்வாறான ஒரு வாசகமே உபயோகத்தில் இருந்ததில்லையென்று அடித்துச் சொல்ல முடியும் . ஆனால் நபியவர்களின் காலத்திலும் அதற்கு முந்திய காலத்திலும் கூட இன்றைய வழிகெட்ட ஸூபிகள் கொண்டுள்ள கருத்துக்களும், சித்தாந்தங்களும் அக்கால யூத, கிறிஸ்த்தவ, இந்து, கிரேக்க, யூனானிய தத்துவங்களில் நிறைந்து காணப்பட்டதையும், அவை அந்தந்த சமூகத்தில் உள்ள ஒரு பிரிவினரிடம் செல்வாக்குப் பெற்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்ததையும் தெளிவாக அறிய முடியும்.

எனினும் ஆரம்ப கட்டமாக இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் நபியவர்கள் ஏற்கனவே கூறி வைத்தது போல் பிரச்சினைகளும் குழப்பங்களும் ஏற்பட்ட வேளை இஸ்லாமிய சமூகத்தில் வாழ்ந்த சில நல்ல மக்கள் கூட இப்பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கி எவற்றிலுமே சம்பந்தப்படாமல் வாழமுற்பட்டது உண்மை . ஆனால் அவர்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய வரையறைக்குள் இருந்தார்கள் . இஸ்லாம் துறவரத்தைப் போதிக்கவில்லை . அதை எதிர்க்கின்றது .ஆனால் அதேவேளை உலக மாயைகளில் அதன் ஆசாபாசங்களில் வீழ்ந்து அதன் அலங்காரங்களில் மயங்கி தனது மறுமை வாழ்வை அழித்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கின்றது .

அல்குர்ஆன் கூறுகின்றது ...

اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الأَمْوَالِ وَالأَوْلادِ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرّاً ثُمَّ يَكُونُ حُطَاماً وَفِي الآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِنْ اللَّهِ وَرِضْوَانٌ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ ( الحديد 20)
 
அறிந்துகொள்ளுங்கள்!!. இவ்வுலக வாழ்க்கையானது வீண்விளையாட்டும், கேளிக்கையும், ஆடம்பர - அலங்காரமும், செல்வத்தையும் பிள்ளைகளையும் வைத்துப் பெருமையடித்துக் கொள்வதுமேயன்றி வேறில்லை . எப்படி ஒரு மழையின் மூலம் பயிர்கள் செழித்து வளர்வது கண்டு விவசாயிகள் ஆச்சரியப்பட்ட வேளை பின்னர் அது காய்ந்து மஞ்சள் நிறமாகி பின் சருகாகி விடுகின்றதோ .(இவ்வாறுதான் உலக வாழ்க்கையும்) . மறுமையில் (இவ்வுலகில் தீமை புரிந்தோருக்கு) மிகக் கடுமையான வேதனையும், (நல்லோருக்கு) அவனது கருனையும் மன்னிப்பும் காத்திருக்கின்றன. இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை . (ஸூரா அல்ஹதீத் : 20 )

நீ உலக வாழ்வில் ஒரு வழிப்போக்கனைப் போன்று அல்லது அநாதரவானவனைப் போன்று வாழ்ந்து கொள். எனக்கும் இவ்வுலக ஆடம்பரத்திற்கும் என்ன சம்பந்தம் ? நான் இளைப்பாறுவதற்காக ஒரு மரநிழலில் தங்கியிருக்கும் வழிப்போக்கனைப் போன்றே இவ்வுலகில் வாழ்கின்றேன் என் நபியவர்கள் இப்னு உமர் ( றழி )அவர்களுக்கு உபதேசித்திருக்கின்றார்கள் .

இப்னு உமர் அடிக்கடி இப்படிக் கூறுவார்கள் ... காலையில் நீ விழித்தெழுந்தால் மாலை வரை உயிரோடிருப்போமென்று உறுதி கொள்ளாதே . மாலைப் பொழுதை அடைந்து விட்டால் மறுநாள் காலை விழித்தெழுவோமென உறுதி கொள்ளாதே . இவ்வுலகில் வைத்தே மறுமைக்குத் தேவையானதைச் சேகரித்துக் கொள் . ( ஆதாரம் : புகாரி 5937 திர்மிதி 2299 இப்னு மாஜா 4099 )

எனவே இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் உதுமான் (றழி) அவர்களது படுகொலைக்குப் பின் குழப்பங்களும் பிளவுகளும், அரசியல் அராஜகங்களும் தோன்ற ஆரம்பித்தபோது ஸூபித்துவம் என்ற பெயரில்லாவிட்டாலும் - முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அறிமுகமான ஒரு இறை பக்தி மிகு கூட்டத்தினர் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட, இஸ்லாம் போதித்த விடயங்களை மாத்திரம் சமூகத்தின் மத்தியில் முன்வைத்து மக்களை உலக ஆசையிலிருந்து விடுவித்து ஆத்மீகத்தின் பக்கம் அழைத்துக் கொண்டிருந்தனர் என்பது உண்மை . அதன் காரணமாகவே அக் காலப் பகுதியில் வாழ்ந்த உலமாக்கள் இமாம்கள் கூட இந்தப் பிரிவினருக்கு ஆதரவு நல்கியதும் உண்மை. ஆனால் காலப் போக்கிலேதான் அதாவது நபியவர்கள் சிறப்பித்துக் கூறிய மூன்று தலைமுறையினரின் காலத்தின் பின்னரே அன்னிய இந்து , கிரேக்க , யஹூதிய நச்சுக் கருத்துக்கள் , விஷமத்தனமான சிந்தனைகளையெல்லாம் பின்வந்த ஸூபிகள் அவர்களது நூல்களின் மொழிபெயர்ப்பிலிருந்து இரவல் பெற்று அவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூசி சமூகத்தின் மத்தியில் ஸூபித்துவம் எனும் பெயரில் உலவ விட்டு விட்டார்கள். தாம் கோர்வை செய்த நூற்களிலும் இந்த சிந்தார்த்தங்களை விபரித்து அதற்கு உரமூட்டும் விதமாக ஒரு சில குர்ஆன் வசனங்களையும் , நபி மொழிகளையும் அவற்றின் விளக்கத்தைத் திரிபுபடுத்திக் கூறி இந்த நச்சுக் கருத்துக்களும் அல்குர்ஆன் ஹதீதுகளில் கூறப்பட்டவைகள்தான் எனப் பாமரர்களையும் நம்பச் செய்து விட்டார்கள் .

இதன் பின்பு வாழையடி வாழையாக இந்த வழிகெட்ட கொள்கையைத் தத்தெடுத்த ஸூபித்துவ வாதிகள் அதிலுள்ள தவறான வழிகெட்ட சித்தார்த்தங்களை நியாயப்படுத்தி அதற்கு வலுவூட்டும் விதமாக குர்ஆன் ஹதீஸ் வசனங்களை வளைப்பதிலும் திரிபுபடுத்துவதிலுமே தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள் . அதுமட்டுமின்றி அப்பாஸிய ஆட்சியில் அனேக கிரேக்க தத்துவ நூல்கள் அறபியில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இவற்றிலுள்ள தமது கொள்கைக்குச் சார்பான விடயங்களையும் அவற்றிலிருந்து திருடி அவற்றைத் தமது சொந்தக் கருத்துக்களாக மெஞ்ஞானம் என்ற பெயரில் பாமர மக்களுக்கும், தமது நூல்களிலும் அறிமுகப்படுத்தினார்கள் . இங்கு ஒரு கவலைக்குரிய விடயம் யாதெனில் உண்மையாகவே, சமூகத்தின் மத்தியில் மதிக்கப்பட்ட கஸ்ஸாலி போன்ற சில பேரறிஞர், உலமாக்கள் சிலரும் இந்த வழிகெட்ட சிந்தனையால் உந்தப்பட்டு – கவரப்பட்டு , சிந்தனைக் குழப்பத்துக்குற்பட்டு பின்னர் இக்கொள் கையை ஒருவகையில் அங்கீகரிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள் . அன்றைய முஸ்லிம் சமூகமே போற்றி வந்த இது போன்ற நல்ல உலமாக்களின் திடீர் மாற்றமே இவ்வழிகெட்ட கொள்கை மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதற்கு உரமாக இருந்தது என்பதே உண்மை . கஸ்ஸாலி இமாம் சிந்தனைக் குழப்பத்தில் இருந்த காலப்பகுதியில் கோர்வை செய்த 'இஹ்யா உலூமுத்தீன் ' எனும் ஆத்மீகப் பயிற்சிக்குரிய விடயங்களை விளக்கும் இந்த நூலில் இந்த ஸூபித்துவ அத்வைதக் கொள்கை பற்றி ஆங்காங்கே பகிரங்கமாகக் குறிப்பிட்டிருப்பதையும், இக்கொள்கையுள்ள வழிகேடர்களுக்கு இடம் பெற்ற ஷைத்தானிய சேட்டைகள் சிலதைக் ' கராமத் ' எனும் பெயரில் தம் நூலில் குறிப்பிட்டிருப்பதையும் அவதானிக்க முடியும். எனவே சமூக ஆதரவுள்ள இவரின் இச்செயல் சமூகத்தின் வழிகேட்டுக்கே பாலம் அமைத்துக் கொடுத்து விட்டது . 'இஹ் யா உலூமித்தீன்' மார்க்க அறிவுகளுக்கு உயிரூட்டல் எனும் பெயரில் வெளி வந்த இந்நூல் தூய இஸ்லாமிய மார்க்கத்தையே சாவடிக்கக் கூடியதாக - நஞ்சாக ஆகி விட்டதென்றால் மிகையாகாது .

எனவே அக்கால ஸூபித்துவ வாதிகளின் வழிகெட்ட சித்தாந்தங்களைச் சுருக்கமாகச் சொல்லப் போனால் இவர்கள் தமது அடிப்படைக் கொள்கைகளை நான்கு பிரிவுகளாக வகுக்கின்றனர் இஸ்லாத்தை இவ்வாறு கூறு போட்டு எந்த ஷிர்க்கையும் பித்அத்தையும் அழித்தொழிப்பதற்காக நபியவர்கள் அனுப்பப்பட்டார்களோ அந்தக் குறிக்கோளையே இடித்துத் தரைமட்டமாக்கும் வகையில் இஸ்லாத்தில் விளையாடியிருக்கின்றனர். அவர்களது வழிகெட்ட கொள்கைப்படி பின்வருமாறு இஸ்லாத்தைக்கூறு போட்டிருக்கின்றார்கள் .

சூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் .

  • ஷரீஅத் - (மார்க்கம் .)

  • தரீக்கத் -- ( ஆன்மீகப் பயிற்சி பெறல்)

  • ஹக்கீக்கத் -- ( யதார்த்தத்தை அறிதல் )

  • மஃரிபத் -( மெஞ்ஞான முக்தியடைதல் )
என இவர்கள் இஸ்லாத்தை நான்காக வகுத்திருப்பதை அறிந்து கொள்ள முடியும் . இவை பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து வைத்திருப்பது நல்லது .

ஷரீஅத் .

ஸூபிகளிடத்தில் ஷரீஅத் எனப்படுவது தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற சாதாரண மார்க்க அனுஷ்ட்டானங்களைக் குறிக்கும். இவர்களின் கருத்துப்படி ஆரம்ப நிலையிலுள்ள, உண்மை - யதார்த்தத்தை அறியாத பண்படாத சாதாரண பாமர மக்களுக்குரிய ஆத்மீகப் பயிற்சி நெறிகளே இவ்வகை வணக்கங்களாகும் . இவற்றால் மனிதனுக்கு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை , நெல்லை மூடியிருக்கும் உமி போன்றதே ஷரீ அத் சட்டங்கள். உள்ளேயிருக்கும் அரிசியைப் போன்றதுதான் ஹக்கீக்கத். ஆரம்பப் பருவத்தில் உள்ளிருக்கும் அரிசியைக் கெடாமல் காக்க உமி அவசியம்தான் . எனினும் காலப்போக்கில் கதிர் முற்றியதும் அறுவடையின் பின் உமியை நீக்கித் தூர வீசி விடுவது போன்று ஹக்கீக்கத்தை அறிந்தவுடன் ஷரீஅத்தை - மார்க்க அனுஷ்ட்டானங்களைத் தூக்கி எறிந்துவிட வேண்டும் என்பதே இவர்களின் கோற்பாடு . ஆரம்பத்தில் ஒரு பயிற்சி நோக்கிலேயே இவற்றை ஒருவன் செய்கின்றான். நெல்லின் உள்ளிருக்கும் அரிசியை அடைய விரும்புபவன் உமியைத் தூக்கி வீசி விடுவது அவசியம் போன்று ஒருவன் யதார்த்தத்தை அறிந்ததும் வெளிப்படையான அமல்களை - மார்க்க அனுஷ்ட்டானங்களை விட்டு விட வேண்டும் என்பதே இவர்களது கோற்பாடு.

பிரபல ஸூபியான கஸ்ஸாலி இமாம்தான் இவ்வாறான ஒரு கொள்கையை அப்பாவி சமூகத்தின் மத்தியில் புகுத்தி லட்சக் கணக்கான மக்களின் வழிகேட்டுக்குக் காரணமாயிருந்தவர் . இவர் ஒரு மார்க்க அறிஞரும் கூட . எனினும் ஸூபித்துவத்தால் கவரப்பட்டு இந்நிலைக்கு ஆளாகி விட்டார். இவர் இறுதித் தருவாயில் இவ்வழிகெட்ட கொள்கைகள் அனைத்தையும் விட்டு மீண்டு தவ்பாச் செய்து விட்டதாகவும், ஸூன்னத் வல் ஜமாஅத்தினரின் கொள்கைக்கு மாறி விட்டதாக வாக்குமூலம் கொடுத்ததாகவும் வரலாறு உண்டு என்பது தனி விடயம். இவர் எழுதிய' இஹ்யா உலூமுத்தீன்' எனும் நூல் பிரபலமானது. இதை இவர் நான்கு பகுதியாகப் பின்வருமாறு வகுத்திருக்கின்றார் .

அ- இபாதாத் - வணக்கங்கள் .
ஆ- ஆதாத் - பழக்க வழக்கங்கள் .
இ- முஹ்லிகாத்- மனிதனை அழித்துவிடத்தக்க பாவங்கள் .
ஈ- முன்ஜியாத் - நரகை விட்டும் பாதுகாக்கக் கூடியவைகள் .

இப்படி நான்கு பகுதிகளாகப் பிரித்து விட்டு நான்காவது பகுதி இருக்கின்றதே - அதாவது முன்ஜியாத் - நரகை விட்டும் பாது காக்கக் கூடியவைகளின் பட்டியலில் அவர் குறிப்பிடுவது என்ன தெரியுமா ? நரகை விட்டும் பாதுகாக்கும் ஒரே வழி தரீக்கத் மாத்திரமே !! தரீக்கத்தை -அதாவது ஆத்மீகப் பாதையை அடைய வேண்டுமா ? ஷைக்கிடம் பைஅத் செய் ,அவருக்கு அடிமையாகு , அவரிலே அல்லாஹ்வைக் காண் , அவர் சொல்வதைச் செய். அப்படி நீ தரீக்கத்தின் வழி நடந்தால்தான் உன்னால் ஹக்கீக்கத்தை அடைய முடியும் , ஹக்கீக்கத்தை அறிவதுதான் நரகை விட்டும் உன்னைக் காக்கும் என்பதே அதன் விளக்கம் . இதன் படி இபாதத்கள் , தொழுகை நோன்பு , ஹஜ் போன்ற வணக்கங்கள் செய்வது எதுவுமே ஒரு முஸ்லிமை நரகை விட்டும் காப்பாற்றாது . மாறாக ஹக்கீக்கத்தைத் தெரிந்தால்தான் சுவர்க்கம் என்பது தான் கஸ்ஸாலியின் கொள்கை என்பது தெளிவாகின்றது .

ஆனால் அல்குர்ஆனிலோ அல்லாஹ் கூறுகையில் ...
நரக வாதிகளைப் பார்த்து சுவர்க்க வாதிகள் நீங்கள் நரகத்துக்கு வரக் காரணம் என்ன என்று கேட்ட போது அவர்கள் என்ன பதில் கூறுவார்கள் என்று இவ்வாறு கூறுகின்றான் ..


சுவன வாதிகள் நரகுக்குச் சென்ற பாவிகளிடம் ' நீங்கள் நரகம் வரக் காரணம் யாது' என்று வினவுவார்கள் . அதற்கு அவர்கள் நாங்கள் தொழக் கூடியவர்களில் இருக்கவில்லை , ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை ,வீணர்களுடன் கூடித்திரிந்தோம், நியாயத் தீர்ப்பு நாளைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்தோம்' என்பார்கள் . (ஸூரா முத்ததிர் 41)

நபி (ஸல் ) அவர்களிடம் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே.. நான் கடமையான தொழுகையைத் தொழுது ,ரமழானில் நோன்பு நோற்று, ஹலாலானவற்றை எடுத்தும் ,ஹராமானவற்றைத் தவிர்ந்தும் வாழ்கின்றேன் .இது தவிர வேறு எதுவுமே நான் செய்யவில்லை . இப்படியிருக்க நான் சுவர்க்கம் செல்வேனா? என்று கேட்க நபியவர்கள் ஆம் என்று கூறினார்கள் .
( ஆதாரம் முஸ்லிம் 18 )


இவ்விரு ஆதாரங்களின் மூலமாகத் தொழாதிருத்தல், இபாதத் செய்யாதிருத்தல்தான் ஒருவன் நரகம் செல்லக் காரணமாகின்றது என்பதும் தொழுவதும் இதர இபாதத்களைச் செய்வதும் சுவனம் சேர்க்கும் என்பதும் தெளிவாகின்றது . ஆனால் கஸ்ஸாலியோ தரீக்காவில் சேராவிட்டால் சொர்க்கமேகிடையாதுஎன்கின்றாரே ??

இவ்வாறே கஸ்ஸாலி இமாமவர்கள் அறிவை இரண்டு வகையாகப் பிரிக்கின்றார்கள். உலக அறிவு , மறுமையின் அறிவு என்று . மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் சரிதானே .. இதிலென்ன தவறு என்பார்கள் . ஆனால் கஸ்ஸாலி அதற்குக் கூறும் வியாக்கியானத்தைப் பாருங்கள்...

'உலக அறிவென்பது உலகில் செய்யும் இபாதத் ,நல்ல கெட்ட காரியங்கள் ஹராம் ஹலால் பற்றிய அறிவாகும் . மறுமையின் அறிவென்பது ஹக்கீகத்துடைய அறிவாகும். அதாவது அல்லாஹ் தான் இப்பிரபஞ்சமாக வெளியாகியுள்ளான் எனும் ஹக்கீக்கத்தை-யதார்த்தத்தை சூபித்துவப் பாசறையில் தரீக்காவின் வழியில் பயின்று அறிவதே மறுமையின் அறிவாகும் . இந்த அறிவு அதாவது(ஹகீக்கத்தை அறிதல்) மறுமை அறிஞர்களின் (சூபியாக்களின்) தீர்ப்புப்படி ஒவ்வொருவருக்கும் பர்ழு ஐன் - கட்டாயக் கடமையாகும் . எப்படி ஒருவன் உலக அறிவைச் சார்ந்த இபாதத்களைச் செய்யாதவிடத்து உலக உலமாக்களின் தீர்ப்புப் பிரகாரம் அப்பகுதி அரசனின் வாளுக்கு இரையாக நேரிடுமோ அதே போன்று மெஞ்ஞான அறிவான இவ்வறிவைக் கற்காது புறக்கணிப்பவர்கள் மறுமையில் அரசருக்கெல்லாம் அரசனான அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாகி அழிந்துவிட(நரகம் செல்ல)வேண்டியேற்படும் என்று கஸ்ஸாலி சொல்கின்றார்கள்..  (இஹ்யாஉலூமுத்தீன் பக்கம் 1-114)

இவ்வாறு முதல்க் கட்டமாக இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ள வந்த எதுவுமறியா அப்பாவி முஸ்லிமை அழைத்து அவனுக்குக் குழையடித்து , மூளையைச் சலவை செய்து இவ்வாறான ஷைத்தானிய சிந்தனைகளை ஊட்டி அவர்களைத் தமது தரீக்காவுக்குள்(தரீக்கத்துன்நார் - நரகத்துகின் பாதை என்பதே மிகப் பொருத்தம்) அழைத்துச் செல்கின்றனர் . இனி அங்கே என்ன நடைபெறுகின்றது என்று பார்ப்போம். ...


தரீக்கத் الطريقة


அன்றைய புராதன ஸூபித்துவ வாதிகள் முதல் இன்றுள்ள நவீன ஸூபிகள் உட்பட அனைவரிடமும் புரையோடிப் போயுள்ள ஒரு விடயம்தான் இந்ததரீக்காவாகும் .இதிலே பல படித்தரங்கள் உள்ளன . சுருங்கக் கூறின் யதார்த்தத்தை அறிந்து கொள்ள விரும்புபவர் முதலில் ஒரு ஷைக்கிடத்தில் பைஅத்செய்து அவர்சொல்லும் வழியில் நடை பயில்வதை இவர்கள் தரீக்கத் என்றழைக்கின்றனர் . அதாவது ஒரு ஆத்மீகப் பயிற்சி பெறும் சீடர் தனது உணர்வுகள் , புலன்களையெல்லாம் மரணிக்கச் செய்யுமளவு தன்னைச் சிரமத்துக்குள்ளாக்கி தன்னைத்தானே வருத்தி 'அதஹ்' எனும் பைத்தியம் போன்ற சுய நினைவிழந்த நிலைக்குக் கொண்டு வருதல் வேண்டும் . இதற்கான பயிற்சிகளை அந்த தரீக்காவின் ஷைக்கே முன்னின்று சொல்லிக் கொடுப்பார் .
இது பற்றி கஸ்ஸாலி இவ்வாறு கூறுகின்றார் ...
'தரீக்கத்தினை அடைவதற்கு கல்வத் (தனித்திருத்தல்) , ஜூஉ (பசித்திருத்தல்), ஸஹர்(விழித்திருத்தல்), ஸூம்து மௌனமாயிருத்தல்) போன்றன அவசியமாகும் . ( இஹ்யா உலூமுத்தீன் 2-243 )

அத்துடன் தனது உடலைத் தானே சிலவேளை வதைத்துக் கொள்ளவும் வேண்டும் . இதற்காக நீண்ட நேரம் ஒற்றைக் காலில் நிற்றல் , தலைகீழாக நிற்றல் , முள்ளின் மீது அமர்தல் ,நெருப்பால் உடலைப் பொசுக்கல் போன்ற பயிற்சிகளையும் ஷைக்கானவர் மேற்கொள்வார் .
இவர் கூறும் அனைத்தையும் முரீது (சீடர்) எவ்வித மறுப்போ , வெறுப்போ இன்றி மேற்கொள்ள வேண்டுமென்பது ஸூபித் துவத்தின் பொது விதி. சுருங்கக் கூறின் அவர்கள் கூறுவது போல் 'ஒரு (முரீது) சீடனானவன் தனது ஷைக்கின் முன்னால் மய்யித்தைக் குளிப்பாட்டுபவன் முன் வைக்கப்பட்ட சடலத்தைப் போல் நடந்து கொள்ள வேண்டும் . அவனுக்கு எந்தவித விருப்பு வெறுப்போ சுய சிந்தனையோ இருக்கக் கூடாது . அவரின் முன் நின்றால் இவனுக்குப் பேச்சே வரக் கூடாது, அவரது அனுமதியின்றி இவன் (தன்மனைவீயுற்பட)எவரிடமும் தொடர்பு கொள்வதோ, குர்ஆன்ஓதல், திக்ர் , அறிவைத்தேடல் போன்ற எவற்றிலுமோ ஈடுபடக் கூடாது .(அல் அன்வாருல் குத்ஸிய்யா 1- 187)

அபூ யஸீத் அல் புஸ்தாமி எனும் ஸூபி கூறுகின்றார் ...
'ஒரு ஷைக்கானவர் தனது முரீதை ஒரு வேலையின் நிமித்தம் வெளியே அனுப்பினால் அவன் போகும் வழியிலேயே தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் - இந்த முரீதானவன் இப்போது உடனடியாகத் தொழுது விட்டு அதன்பின் அந்த வேலையை முடிக்கலாம் தானே என்று எண்ணிவிட்டால் கூட அவன் ஆழமறியாத ஒருபாதாளக் கிணற்றினுள் வீழ்ந்தவனைப் போலாவான் என்கின்றார் . ( ஸத்ஹாத்துஸ் ஸூபிய்யா ப 343 )

ஷைக் றிபாயிஃ கூறுவதைப் பாருங்கள் .
'ஒரு முரீதுக்கு இருக்க வேண்டிய பண்புகளிலொன்றுதான் தனது ஷைக் எப்போதும் நேரிலும், மறைவிலும் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாக உணர வேண்டும். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஊழியஞ் செய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் . எந்த வேலையைச் செய்யும் போதும் அவரது நினைவு மனதில் வர வேண்டும் . அவர் செய்யும் எந்தவிதமான மோசமான காரியங்களையும் கண்டு அதைக் கண்டிக்கக் கூடாது . ஒரு முறை இப்படித்தான் ஒரு ஷைக்கின் வீட்டுக்கு அவரது முரீதானவர் சென்ற போது தனது ஷைக் ஒரு அழகிய பெண்ணிடம் சல்லாபித்து ,அவளைக் கட்டிப்பிடித்து , முத்தமிட்டு உடலுறவில் ஈடுபட்டிருக்கக் கண்டார். இதைக் கண்டதும் அதிர்ச்சியுற்ற அவர் அவசரப் பட்டு 'என்ன காரியம் பண்ணிவிட்டீர்'!! என ஷைக்கைக் கண்டித்து விட்டார்..உடனே அவர் ஷைக்கிடமிருந்து கற்ற அனைத்து நெறிகளும் அவரிடமிருந்து அந்த இடத்திலேயே பறிக்கப்பட்டுவிட்டன. . . (நூல் : கிலாததுல் ஜவாஹிர் ; பக்கம் :278)


பிரபல ஸூபி இப்னு அஜீனா கூறுகின்றார் ...
ஷைக்குக்கு சிஷ்யன் செய்யும் மரியாதை யாதெனில் அவன் ஷைக்கின் கைகளையும் கால்களையும் முத்தமிட வேண்டும் . அவரின் முன் இருக்கும் போது தலை தாழ்த்தி வாய்மூடியிருக்க வேண்டும் . முரீதுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டு விட்டால் அவனது மனக்கண் முன் ஷைக்கை முன்னிறுத்தி அவரிடமே தனது நோயை நீக்குமாறு முறையிட வேண்டும் . ஏனெனில் இவ்வாறு செய்தால் அல்லாஹ்வின்உதவியால் சந்தேகமின்றி நிச்சயம் சுகம்கிடைக்கும் . . (புதூஹாத்துல் இலாஹிய்யா : 308-309)

வழிகெட்ட ஸூபி ஸஃரானி சொல்வதைக் கேளுங்கள் ....
ஒரு ஷைக்கின் மீது உண்மையான அன்பு கொள்வது எப்படியெனில் அல்லாஹ்வுக்காகவே ஒன்றை நேசித்து அவனுக்காகவே ஒன்றை வெறுப்பது போன்றே இந்த ஷைகுக்காகவே எதையும் நேசிக்க வேண்டும் அவருக்காகவே எதையும் வெறுக்கவும் வேண்டும் . அவ்வாறே ஷைக்கின் கப்ரைத் தரிசிக்கச் சென்றால் அவர் மய்யித் , மரணித்து விட்டவர், நாம் பேசும் எதையும் செவியுற மாட்டார் என எண்ணிவிடக் கூடாது . எனினும் அவர் திரையுலகில் உயிருடன் இருப்பதாகவே நம்ப வேண்டும் . அப்போதுதான் அவரது பரக்கத் - அருளைப் பெற முடியும் . ஏனெனில் முரீதானவர் ஷைக்கின் கப்ரை ஸியாரத் செய்து அல்லாஹ்வை திக்ர் செய்தால் அந்த ஷைகும் கப்ரில் எழுந்து உற்கார்ந்து கொண்டு இவருடன் திக்ர் செய்கின்றார் . இதை நாங்கள் பல தடவைகள் நேரடியாகவே கணகளாலேயே பார்த்திருக்கின்றோம் . (அன்வாருல் குத்ஸிய்யா 1-169)

அப்துல் காதிர் ஜீலானி கூறுகின்றார் ...
ஷைக்- குருவானவர் வெளிப்படையாகச் செய்யும் எக்காரியத்துக்கும் முரீத் மாற்றஞ்செய்யக் கூடாது . மறைமுகமாகச் செய்யும் விடயங்களில் குறுக்கீடு செய்து எதிர்க்கேள்வி கேட்கவும் கூடாது . (அல்குன்யஹ் 2- 164 )

தொடர்ந்து முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கூறுகையில்...
'நிச்சயமாக ஷைக்கின் மூலம் ஒருவனுக்கு நன்மையுமுண்;டு , தீமையுமுண்டு. தனது ஷைக்கை நேசிப்பது மறுமையில் ஒருவன் நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்ந்து கொள்ளக் காரணமாகி விடும் இது அவரில் மூலம் கிடைக்கும் நன்மையாகும் , அவருடன் முறண்பட்டு வாதம் செய்வது அவனின் நாசத்திற்குக் காரணமாகி விடும் . இது அவரினால் ஏற்படும் தீங்கு . நீ என் கரத்தைப் பிடிப்பதன் மூலமாக வெற்றி பெறவில்லையென்றால் உனக்கு ஒரு போதும் வெற்றியே கிடையாது . ( அல்பத்ஹூர் ரப்பானி )

ஒரு தடவை ஷகீக் பல்கீ, அபூதுராப் ஆகிய இரு ஸூபிகளும் அபூ யஸீத் அல்புஸ்தாமி எனும் ஸூபியிடம் வந்தனர் . இரு வருக்கும் உணவு பரிமாறப்பட்டது . அங்கு ஒரு வாலிபன் அவர்களுக்குப் பணிவிடைக்காக இருந்தான் . அவ்விருவரும் வாலிபரே.. எம்முடன் வந்து சாப்பிடு என்று கூற அதற்கவன் 'நான் நோன்பு ' என்றான். அதற்கவர்கள் பரவாயில்லை ஒரு மாத நோன்பின் நன்மையைத் தருகின்றோம் வா .. எனக்கூற அதற்கும் அவன் மறுத்து விட்டான். சரி ஒரு வருடகால நோன்பின் நன்மையைத் தருகின்றோம் வா என்று கூறினர். அவன் அதற்கும் மறுத்து விடவே ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர் 'அல்லாஹ்வின் பார்வையை விட்டும் விழுந்து விட்ட அவனை அவன் பாட்டுக்கு விட்டு விடுங்கள்' என கோபத்துடன் கூறினார் . இதன் காரணத்தால் அவ்வாலிபர் திருட்டுக் குற்றமொன்றில் பிடிபட்டு அவன்கைதுண்டிக்கப்பட்டது. . . ( ரிஸாலா குஷைரிய்யா ப : 151 )

ஒரு சீடன் தன் ஷைக்கை நேசிப்பது சரத் - நிபந்தனையாகும் என்பது அனைத்து சூபிகளும் ஏகோபித்த விடயமாகும் . எந்தளவுக்கு நேசிக்க வேண்டுமென்றால் தனது ஷைக் அல்லாத எவரும் எதைக் கூறினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாது செவிடனைப் போல நடந்து கொள்ள வேண்டும் . யார் விமர்சித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது . அந்தப் பகுதியிலுள்ள மக்கள் அனைவருமே ஒன்று கூடி முயற்சித்தாலும் அவர்களால் இவனை அந்த ஷைக்கை விட்டும் தடுக்க முடியாதளவுக்கு அவனது குருப்பற்று இருக்க வேண்டும். ஷைக்குடைய மகத்துவத்தை மனதில் நிறுத்தி மனக்கண்ணால் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தால் அவனுக்குப் பசி, தாகம் எதுவுமே ஏற்படக் கூடாது . ஒரு சீடருக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டது . அவர் எதுவும் உண்ணாமல் குடிக்காமல் சதா தன் ஷைக்கையே நினைத்துக் கொண்டிருந்தார் . ஆனாலும் அவர் இருந்ததை விடக் கொளுத்து விட்டார்.
( அன்வாருல் குத்ஸிய்யா 1-168 )

இது போன்ற ஸூபித்துவ வாதிகளின் தரீக்கத் விதிகளையும் நிப ந்தனைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம் . இவ்வாறான அபத்தமிக்க பைத்தியகாரத்தனமான இஸ்லாத்திற்கு முறணான , இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்தெறியக்கூடிய கதைகளையும் புராணங்களையும் லட்சக்கணக்கில் ஸூபித்துவ நூல்களில் நீங்கள் காணலாம் . விரிவஞ்சி அவற்றைக் குறைத்துக் கொள்கின்றேன் . இக்கட்டுக் கதைகளில் பொதிந்திருக்கும் அபத்தங்களை விமர்சிக்க , விபரிக்க முற்பட்டால் புத்தகம் நீண்டு விடும் . எனவே அதை வாசகர்களான உங்களின் ஆய்வுக்கு விட்டு விடுகின்றேன் . மிகக் குறைந்தளவு இஸ்லாமிய அறிவுடைய ஒரு பாமரன் கூட இக்கருத்துக்கள் இஸ்லாத்தைத் தகர்க்கக் கூடிய மிகப் பெரிய வெடி குண்டு , இதற்கும் இஸ் லாத்துக்கும் எள் முனையளவு கூட சம்பந்தம் கிடையாது என்பதை அடித்துச் சொல்வான் என்பது மட்டும் உண்மை .

சுருக்கமாகச் சொல்வதாயின் ஸூபிகளின் தரீக்கத் எனும் இந்த மாயையின் பின்னணியில் ஒரு பெரிய சதிவலையே பின்னப்பட்டிருக்கின்றது . அதாவது அப்பாவிப் பாமரர்கள் மத்தியில் தம்மை விலாயத் பெற்ற இறை நேசச் செல்வர்கள் , ஷைக்மார்கள் என அறிமுகப்படுத்தி அப்பாமரர்களை இஸ்லாத்தின் பெயரைக் கூறி ஏமாற்றித் தமது சீடர்களாக்கி ஆத்மீகம் எனும் பெயரில் பொய்களையும் புருடாக்களையும், அதிசயமிக்க கற்பனைச் சம்பவங்களையும் கூறி மூளைச்சலவை செய்து தன்னைப் பின் பற்றாவிட்டால் வழி கேட்டில் வீழ்ந்து நரகத்துக்குத்தான் செல்ல வேண்டும் எனும் அளவுக்குப் பயமுறுத்தி தாமும் வழி கெட்டு எதுவுமறியா அப்பாவி மக்களையும் வழிகெடுக்கும் ஒரு ஷைத்தானிய ஊடகம் தான் இந்த தரீக்கத் ஆகும்.

இதை விட முக்கியமான பயங்கர விடயம் யாதெனில் இந்தத் தரீக்கத் வாதிகள் அனைவரினதும் மிக முக்கிய குறிக்கோள் யாதெனில் இஸ்லாத்தையே அழித்து இடித்து வீழ்த்திவிடக் கூடிய இரு கொள்கைளின் பக்கம் தம் சீடர்களை அழைத்து அவற்றைப் போதித்து அதன் மூலம் சுய லாபம் தேடுவதே இவர் களின் அடிப்படை நோக்கமாகும். அவையாவன...

1- வஹ்தத்துல் வுஜூத் - அத்வைதக் கொள்கை -அதாவது படைப்பினங்களான நாமும் படைத்தவனான அல்லாஹ்வும் ஒன்றுதான். ,அவன்தான் பல வடிவங்களில் இப்பிரபஞ்சமாகவும், அதிலுள்ள வஸ்த்துக்களாகவும் காட்சி தருகின்றான் எனும் கொள்கை .
2- அல்ஹூலூல் வல்இத்திஹாத்: அதாவது இறைவன் படைப்பினங்களின் மீது இறங்கி சஞ்சரிக்கின்றான் பின் இறண்டறக் கலந்து விடுகின்றான் எனும் இந்துத்துவ , கிருஷ்த்தவக் கொள்ளை .

அல்லாஹ் கூறுகின்றான் ...

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلاَّ إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ المائدة (73)

'அல்லாஹ் மூன்று கடவுள்களில் மூன்றாவது கடவுளெனக் கூறிய (அதாவது அல்லாஹ் இயேசுவிலும் அவர் தாயிலும் இறங்க அவர்களும் கடவுளாகி விட்டார்கள் எனக் கூறிய கிருஷ்த்தவர்கள்) காபிர்களாகி விட்டார்கள் . ( உண்மைக் ) கடவுள் ஒரே கடவுளேயன்றி வேறில்லை . அவர்கள் தாம் சொல்வதை விட்டும் விலகிக் கொள்ளாவிடில் அவர்களில் ( இக் கொள்கை மூலம் ) காபிர்களாகி விட்டவர்களை கடுமையான வேதனை பிடித்துக் கொள்ளும் . அவர்கள் அல்லாஹ்விடத்தில் (தமது இக்கொள்கையை விட்டு விட்டு ) தவ்பாச் செய்து பாவ மீட்சி பெற வேண்டாமா ? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனுமாகஇருக்கின்றான். . (அல்குர்ஆன் : மாயிதா 73 . )

எனவே சூபிகள் உருவாக்கிய தரீக்கத் எனும் ஷைத்தானியக் கோட்டையிலே ஷைக் எனப்படுபவர்தான் அல்லாஹ்வின் அனைத்து ஆற்றல்கள் , சக்திகள், வல்லமைகளும் பெற்றவராகக் கருதப்படுவார். அவரின் சீடர்களுக்கு அவர் குருநாதர் மாத்திரமல்ல கடவுளும் அவர்தான் . ஷைகுக்கு தெய்வீகத் தன்மைகள் - கடவுளின் சக்திகள் இருப்பதை ஏற்றுக் கொள்ளாத சிஷ்யன் நிச்சயமாக உண்மையான வெற்றிப் பாதையை அடைந்து கொள்ள மாட்டான். வெற்றிப் பாதையெனப்படுவது இவர்களிடத்தில் வஹ்தத்துல் வுஜூத்- கண்ணால் காண்பதெல்லாம் கடவுளே .. எனும் கொள்கையைக் குறிக்கும். ஆம் நரகத்துக்குரிய இலவச நுழைவுச் சீட்டை வென்று தரும் பாதை இதுதான் .. சந்தேகமேயில்லை . தனது ஷைக் கடவுளின் வல்லமைகள் பெற்றவர்,சக்திமிக்கவர் என எண்ணும் சீடனுக்குக் காலப் போக்கில் 'ஜத்பு ' (பைத்தியம் போன்ற சுய நினைவற்ற) நிலை ஏற்படும் .அதன் பின் அவன் தனது ஷைக்கையே கடவுளாகக் காண்பான் என்பதே தரீக்கத் போதிக்கும் தத்துவ மாகும். இந்தப் பேருண்மையை?? விளங்கிக் கொள்ளவே தரீக்காவிற்குப் பிரவேசிப்பது அவசியம் அங்கிருந்து நேரே நரகம்தான் !!!. .இதைப் பகிரங்கமாக மக்கள் மத்தியில் சொன்னால் ஷைக்மார்களுக்கு அவர்கள் பைத்தியக் கிறுக்கர்கள் என்று பட்டம் சூட்டி விடுவார்கள் என்பது மட்டும் உண்மை .

الحقيقة ஹகீக்கத். (ரகசியம் )

ஹக்கீக்கத் எனப்படுவது சூபிகளின் ஷைத்தானிய அடிப்படை விதிகளில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றது . தன் வழியில் முஃமினாக வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மனிதன் மார்க்க விளக்கம் பெற ஷைத்தானிய தோழர்களாகிய சூபிகளை நாடும் போது முதலில் ஷரீஅத் சட்டங்களை முடிந்தளவு கடைப்பிடித்து முஸ்லிமாக இருந்த அவனை தரீக்கத் எனும் பாதாளக் குழியில்த் தள்ளி தம்மைத் தவிர வேறு யார் எது சொன்னாலும் கேட்கக் கூடாது எனும் பைத்திய நிலைக்கு அவனை ஆளாக்கி அவனிடம் பைஅத் - ஞான தீட்சை ? பெற்ற பின்னர் அவனுக்கு சூபிகள் கற்றுக் கொடுக்கும் ஒரு இரகசியம்தான் இந்த ஹகீக்கத் எனும் சமாச்சாரம் . அவர்களின் கருத்துப்படி இது ஒரு ரகசியம் இது தான் உண்மை - யதார்த்த நிலை . ஆனால் இவ்வுண்மை அனைவருக்கும் தெரிவதில்லை. அவர்களிடம் ஞானதீட்சைபெறாதவர்களுக்குத் தெரிவிப்பதுமில்லை . காரணம் இவர்கள் கூறும் பைத்தியகாரத் தனமான உளறல்களையும் , சாத்தானிய வசனங்களையும் , பகுத்தறிவுக்குப் பொருந்தாத கற்பனைக் கட்டுக் கதைகளையும் நம்பி ஏமாறும் நிலையில் எந்தப் பாமரனும் இல்லை . எனவே இவனால் எழுப்பப்படும் கேள்விகளுக்குக் கூட இவர்களால் விடையளிக்க முடியாது .ஒன்றுமறியாத பாமரனும் இவர்கள் கூறுவதைக் கேட்டால் இவர்களின் குடுமியைப் பிடித்து ஆதாரம் கேட்பான். ஆப்பிழுத்த குரங்கு போல அவனிடம் மாட்டித் தவிக்க நேரிடும் . ஆதாரம் இருந்தால் தானே சமர்ப்பிக்க முடியும் . இந்துப் புராணங்களில் , யூத கிருஷ்த்தவ , கிரேக்க தத்துவங்களில் வேண்டுமானால் ஆதாரம் கிடைக்கலாம் . குர்ஆன் ஹதீதில் கிடைக்குமா ? அதனால் தான் தமது சூபித்துவ வலையில் வீழ்ந்து தீட்சை பெற்று -- மூளையை அடகு வைத்து மூடனாகி விட்டவர்களிடம் மாத்திரமே இந்த ஹக்கீக்கத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் . அதுவும் அவனாக குருவின் அனுமதியின்றி எவரிடத்திலும் இது பற்றி வாய் திறக்கக் கூடாது எனும் நிபந்தனையுடன்...
அது என்ன ரகசியம் ? என்ன ஹக்கீக்கத் ? என்று பார்ப்போம் .

அதாவது இப்பிரபஞ்சமே அல்லாஹ்தான் அவனின் வெளிப்பாடே இப்பிரபஞ்சம் என்பதைத் தெரிந்து கொள்வதே ரகசியம். நாம் பார்க்கும் ,கேட்கும், தொடும் அனைத்துமே ,,, நான், நீ, அவன், அவள், அது, வானம் ,பூமி சந்திரன் சூரியன் ஆடு மாடு ஏன் நாய் பன்றி அனைத்துமே அல்லாஹ்தான். கடலிலுள்ள நீர்தான் அலையாகவும் , நுரையாகவும் ,உப்பாகவும் பரிணமித்திருப்பது போல் அல்லாஹ்தான் இப்பிரபஞ்சமாகத் தோற்றம் தருகின்றான் அனைத்துப் பொருள்களுக்கும் சேர்த்துத்துத்தான் அல்லாஹ் எனப்படும் என்பதே இப்பைத்தியர்களின் மஃரிபத் எனும் மூடத் தத்துவம் . இதை அறிந்தவர் தான் ஞானி - ஆரிப் என இவர்களிடம் அழைக்கப்படுவார் .

பிரபல சூபி கஸ்ஸாலி சொல்கின்றார் ...
அல்லாஹ்வை அறிந்து கொண்ட ஒரு ஞானி அனைத்துப் பொருட்களிலும் அல்லாஹ்வைக் காண்பார் . ஏனெனில் அனைத்து வஸ்துக்களுமே அவனிலிருந்தே , அவனை நோக்கியே , அவன் மூலமாகவே, அவனுக்காகவே உருவாகியிருக்கின்றன. தீர்க்கமான முடிவின்படி எல்லாம் அவனே ...( இஹ்யாஉலூமுத்தீன். 1—254 )

தொடர்ந்து கஸ்ஸாலி சொல்கின்றார் ..
மெஞ்ஞானிகள் ( ரகசியம் ) ஹகிக்கத் எனும் வானில் உயர்ந்து அங்கே சஞ்சரிக்கும் போது உலகிலே அவர்கள் ஒரே (அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையென ஏகோபித்துஒருமித்துத் கூறுகின்றனர் . எனினும் சிலருக்கு இந்நிலை தெட்டத் தெளிவாக அறிவியல் ரீதியாகப் புலப்படும் . (அவர்கள் இந்த ரகசியத்தால் குழம்பிப் போக மாட்டார்கள்) இன்னும் சிலருக்கோ அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள். அப்படியானவர்கள் எல்லாம் ஒன்றே எனும் ஓர்மையில் மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து ) غيرية ) வேறொன்று என்ற வார்த்தை - பன்மை என்பதே அவர்களிடமிருந்து அடியோடு நீங்கி விடும் . அவர்களின் விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் புலப்படாது . அனைத்துமே அல்லாஹ்வாகவே தென்படும் . இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒரு வகை போதையேற்பட்டதன் காரணத்தினாலேயே அவர்களில் சிலர் 'நான் தான் அல்லாஹ் ' என்றும் , வேறு சிலரோ ' நானே அல்லாஹ் நான் தூய்மை மிக்கவன், வல்லமை மிக்கவன் ' என்றும் , வேறு சிலர் 'எனது ஜூப்பாவிலும் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை ' என்றும் கூறியிருக்கின்றார்கள் .(மிஸ்காதுல் அன்வார் .ப : 122)

கஸ்ஸாலி சொல்கின்றார் ...
ஆரிபீன்கள் சொல்கின்றார்கள் 'நாங்கள் நரக நெருப்புக்குப் பயப்படவுமில்லை. சொர்க்கத்துக் கன்னியர்க்கு ஆசைப்படவுமில்லை எங்கள் நோக்கமே இறை தரிசனமே. அவன் எம் கண்களுக்குப் புலப்படாமல் கணப் பொழுதேனும் தடைப்படக் கூடாது என்றே நாங்கள் யாசிக்கின்றோம்'. ( அல் இஹ்யா 4--22 )

இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்...
ஆரிப் என்பவர் எல்லா வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வையே காண்பார் . ஒவ்வொரு பொருமே அவருக்கு அல்லாஹ்வாகத்தான் தென்படும் . முழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு ஞானிக்கு பிற மத மக்கள் வணக்கம் செலுத்தும் ஏனைய சிலைகள்,விக்ரகங்கள் அனைத்துமே அல்லாஹ்வின் தஜல்லி - வெளிப்பாடாகவே தெரியும். இதனாலேயே அவர்கள் பிற மதத்தவர்களால் வணங்கப்படும் அனைத்து மதத்து சிலைகளையும் இலாஹ் - அல்லாஹ் என்றே அழைத்தார்கள் . அந்த ஒவ்வொரு சிலைக்கும் கற்சிலை ,பொற் சிலை , வெங்கலச் சிலை என தனிப்பட்ட பெயர்கள் இருப்பினும் கடவுள் - அல்லாஹ் எனும் பொதுப் பெயர் கூறியே அவர்கள் அவற்றை அழைத்தார்கள் . ( புஸூஸூல் ஹிகம் - இப்னு அரபி ப: 192 )


இதுதான் வழிகெட்ட இந்த ஸூபிகள் சொல்லும் ரகசியம் .?? இது வழிகேட்டின் உச்சம் , இதற்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை. மாறாக இதை அழித்தொழிக்கவேதான் அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான் என்பதைப் பாமர மகன் கூட எடுத்துக்கூறாமலேயே அறிந்து கொள்வான் . இது சுத்த பைத்தியகாரர்களின் உளறல் . முற்றிய பைத்தியம் என்பதைச் சாதாரண பைத்தியகாரன் கூடச் சொல்வான் . அல்குர்ஆனின் அனைத்து வசனங்களிலும் இக்கொள்கை குப்ர்., கலப்பற்ற ஷிர்க் என்று விபரிக்கப்பட்டிருப்பதை அனைவருமே படித்தால் அறிந்து கொள்ள முடியும் 

சூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் -தொடர்ச்சி

  • ஷரீஅத் - (மார்க்கம்.)

  • தரீக்கத் -- (ஆன்மீகப் பயிற்சி பெறல்)

  • ஹக்கீக்கத் -- (யதார்த்தத்தை அறிதல்)

  • மஃரிபத் .—(மெஞ்ஞான முக்தியடைதல்)

الحقيقة ஹகீக்கத். (ரகசியம் )

ஹக்கீக்கத் எனப்படுவது சூபிகளின் ஷைத்தானிய அடிப்படை விதிகளில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றது . தன் வழியில் முஃமினாக வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மனிதன் மார்க்க விளக்கம் பெற ஷைத்தானிய தோழர்களாகிய சூபிகளை நாடும் போது முதலில் ஷரீஅத் சட்டங்களை முடிந்தளவு கடைப்பிடித்து முஸ்லிமாக இருந்த அவனை தரீக்கத் எனும் பாதாளக் குழியில்த் தள்ளி தம்மைத் தவிர வேறு யார் எது சொன்னாலும் கேட்கக் கூடாது எனும் பைத்திய நிலைக்கு அவனை ஆளாக்கி அவனிடம் பைஅத் - ஞான தீட்சை ? பெற்ற பின்னர் அவனுக்கு சூபிகள் கற்றுக் கொடுக்கும் ஒரு இரகசியம்தான் இந்த ஹகீக்கத் எனும் சமாச்சாரம் . அவர்களின் கருத்துப்படி இது ஒரு ரகசியம் இது தான் உண்மை – யதார்த்த நிலை . ஆனால் இவ்வுண்மை அனைவருக்கும் தெரிவதில்லை. அவர்களிடம் ஞானதீட்சைபெறாதவர்களுக்குத் தெரிவிப்பதுமில்லை . காரணம் இவர்கள் கூறும் பைத்தியகாரத் தனமான உளறல்களையும் , சாத்தானிய வசனங்களையும் , பகுத்தறிவுக்குப் பொருந்தாத கற்பனைக் கட்டுக் கதைகளையும் நம்பி ஏமாறும் நிலையில் எந்தப் பாமரனும் இல்லை . எனவே இவனால் எழுப்பப்படும் கேள்விகளுக்குக் கூட இவர்களால் விடையளிக்க முடியாது .ஒன்றுமறியாத பாமரனும் இவர்கள் கூறுவதைக் கேட்டால் இவர்களின் குடுமியைப் பிடித்து ஆதாரம் கேட்பான். ஆப்பிழுத்த குரங்கு போல அவனிடம் மாட்டித் தவிக்க நேரிடும் . ஆதாரம் இருந்தால் தானே சமர்ப்பிக்க முடியும் . இந்துப் புராணங்களில் , யூத கிருஷ்த்தவ , கிரேக்க தத்துவங்களில் வேண்டுமானால் ஆதாரம் கிடைக்கலாம் . குர்ஆன் ஹதீதில் கிடைக்குமா ? அதனால் தான் தமது சூபித்துவ வலையில் வீழ்ந்து தீட்சை பெற்று -- மூளையை அடகு வைத்து மூடனாகி விட்டவர்களிடம் மாத்திரமே இந்த ஹக்கீக்கத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் . அதுவும் அவனாக குருவின் அனுமதியின்றி எவரிடத்திலும் இது பற்றி வாய் திறக்கக் கூடாது எனும் நிபந்தனையுடன்...
அது என்ன ரகசியம் ? என்ன ஹக்கீக்கத் ? என்று பார்ப்போம் .

அதாவது இப்பிரபஞ்சமே அல்லாஹ்தான் அவனின் வெளிப்பாடே இப்பிரபஞ்சம் என்பதைத் தெரிந்து கொள்வதே ரகசியம். நாம் பார்க்கும் ,கேட்கும், தொடும் அனைத்துமே ,,, நான், நீ, அவன், அவள், அது, வானம் ,பூமி சந்திரன் சூரியன் ஆடு மாடு ஏன் நாய் பன்றி அனைத்துமே அல்லாஹ்தான். கடலிலுள்ள நீர்தான் அலையாகவும் , நுரையாகவும் ,உப்பாகவும் பரிணமித்திருப்பது போல் அல்லாஹ்தான் இப்பிரபஞ்சமாகத் தோற்றம் தருகின்றான் அனைத்துப் பொருள்களுக்கும் சேர்த்துத்துத்தான் அல்லாஹ் எனப்படும் என்பதே இப்பைத்தியர்களின் மஃரிபத் எனும் மூடத் தத்துவம் . இதை அறிந்தவர் தான் ஞானி – ஆரிப் என இவர்களிடம் அழைக்கப்படுவார் .

பிரபல சூபி கஸ்ஸாலி சொல்கின்றார் ...
அல்லாஹ்வை அறிந்து கொண்ட ஒரு ஞானி அனைத்துப் பொருட்களிலும் அல்லாஹ்வைக் காண்பார் . ஏனெனில் அனைத்து வஸ்துக்களுமே அவனிலிருந்தே , அவனை நோக்கியே , அவன் மூலமாகவே, அவனுக்காகவே உருவாகியிருக்கின்றன. தீர்க்கமான முடிவின்படி எல்லாம் அவனே ...( இஹ்யாஉலூமுத்தீன். 1—254 )

தொடர்ந்து கஸ்ஸாலி சொல்கின்றார் ..
மெஞ்ஞானிகள் ( ரகசியம் ) ஹகிக்கத் எனும் வானில் உயர்ந்து அங்கே சஞ்சரிக்கும் போது உலகிலே அவர்கள் ஒரே (அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையென ஏகோபித்துஒருமித்துத் கூறுகின்றனர் . எனினும் சிலருக்கு இந்நிலை தெட்டத் தெளிவாக அறிவியல் ரீதியாகப் புலப்படும் . (அவர்கள் இந்த ரகசியத்தால் குழம்பிப் போக மாட்டார்கள்) இன்னும் சிலருக்கோ அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள். அப்படியானவர்கள் எல்லாம் ஒன்றே எனும் ஓர்மையில் மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து ) غيرية ) வேறொன்று என்ற வார்த்தை - பன்மை என்பதே அவர்களிடமிருந்து அடியோடு நீங்கி விடும் . அவர்களின் விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் புலப்படாது . அனைத்துமே அல்லாஹ்வாகவே தென்படும் . இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒரு வகை போதையேற்பட்டதன் காரணத்தினாலேயே அவர்களில் சிலர் 'நான் தான் அல்லாஹ் ' என்றும் , வேறு சிலரோ ' நானே அல்லாஹ் நான் தூய்மை மிக்கவன், வல்லமை மிக்கவன் ' என்றும் , வேறு சிலர் 'எனது ஜூப்பாவிலும் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை ' என்றும் கூறியிருக்கின்றார்கள் .(மிஸ்காதுல் அன்வார் .ப : 122)

கஸ்ஸாலி சொல்கின்றார் ...
ஆரிபீன்கள் சொல்கின்றார்கள் 'நாங்கள் நரக நெருப்புக்குப் பயப்படவுமில்லை. சொர்க்கத்துக் கன்னியர்க்கு ஆசைப்படவுமில்லை எங்கள் நோக்கமே இறை தரிசனமே. அவன் எம் கண்களுக்குப் புலப்படாமல் கணப் பொழுதேனும் தடைப்படக் கூடாது என்றே நாங்கள் யாசிக்கின்றோம்'. ( அல் இஹ்யா 4--22 )

இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்...
ஆரிப் என்பவர் எல்லா வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வையே காண்பார் . ஒவ்வொரு பொருமே அவருக்கு அல்லாஹ்வாகத்தான் தென்படும் . முழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு ஞானிக்கு பிற மத மக்கள் வணக்கம் செலுத்தும் ஏனைய சிலைகள்,விக்ரகங்கள் அனைத்துமே அல்லாஹ்வின் தஜல்லி – வெளிப்பாடாகவே தெரியும். இதனாலேயே அவர்கள் பிற மதத்தவர்களால் வணங்கப்படும் அனைத்து மதத்து சிலைகளையும் இலாஹ் - அல்லாஹ் என்றே அழைத்தார்கள் . அந்த ஒவ்வொரு சிலைக்கும் கற்சிலை ,பொற் சிலை , வெங்கலச் சிலை என தனிப்பட்ட பெயர்கள் இருப்பினும் கடவுள் - அல்லாஹ் எனும் பொதுப் பெயர் கூறியே அவர்கள் அவற்றை அழைத்தார்கள் . ( புஸூஸூல் ஹிகம் - இப்னு அரபி ப: 192 )


இதுதான் வழிகெட்ட இந்த ஸூபிகள் சொல்லும் ரகசியம் .?? இது வழிகேட்டின் உச்சம் , இதற்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை. மாறாக இதை அழித்தொழிக்கவேதான் அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான் என்பதைப் பாமர மகன் கூட எடுத்துக்கூறாமலேயே அறிந்து கொள்வான் . இது சுத்த பைத்தியகாரர்களின் உளறல் . முற்றிய பைத்தியம் என்பதைச் சாதாரண பைத்தியகாரன் கூடச் சொல்வான் . அல்குர்ஆனின் அனைத்து வசனங்களிலும் இக்கொள்கை குப்ர்., கலப்பற்ற ஷிர்க் என்று விபரிக்கப்பட்டிருப்பதை அனைவருமே படித்தால் அறிந்து கொள்ள முடியும் .

மஃரிபத் (மெஞ்ஞானம் )المعرفة

சூபிகளின் கூற்றுப்படி தேவையற்ற சரீஅத் சட்டங்களால் தன்னைத்தானே விலங்கிட்டுக் கொண்ட ஒரு மனிதன் ஒரு சூபிக் குருவின் சீடனாகி தரீக்கத் எனும் சேற்றினுள் விழுந்து மூளையையும் சுய சிந்தனையையும் பறிகொடுத்து பின்னர் ஹக்கீக்கத் எனும் மாயையில் வீழ்ந்து புலம்ப ஆரம்பித்ததும் அளவுக்கதிகம் இறை நினைவில் ?? ( சூபிகளின் இறைவனான ஷைத்தானின் நினைவில் மூழ்கியதால் ) 'பனாஃ ' எனும் நிலை ஏற்படுமாம் . இதற்கு இறை நினைவால் மூழ்கி தன்னையே அழித்துக் கொள்ளல் ( அதாவது தன்னிலை மறந்து விடும் நிலை ) என்று சூபிகள் வாதிடுகின்றனர் உண்மையில் இது போதை மயக்கத்தில் பேதலித்து விடுவதால் , அல்லது ஊன் உறக்கமின்றி சதா காலமும் ஏதோ ஒன்றை நினைத்துக் குழம்பிக் கொண்டிருப்பதால் ஏற்படும் ஒரு வகை மூளைக் குழப்பம் அல்லது பைத்தியத்தின் ஆரம்ப நிலை என்பதில் சந்தேகமில்லை . அனைவரையும் விட அல்லாஹ்வுக்கு விருப்பமான , அவனுக்கு அதிகம் அஞ்சி நடந்த , இபாதத் , வணக்கம் உட்பட அனைத்து விடயங்களிலும் முன்மாதிரியாக அனுப்பப்பட்ட முஹம்மத் நபியவர்களுக்கே இவ்வாறான ஒரு நிலை ஏற்படவில்லையே .. இப்படியொரு பனாஃ நிலைக்குக் சென்று இவர்களைப் போல் உளறவில்லையே ... நபியவர்களை விட இந்த சூபிகள் இறை நேசர்களா ? அவர்களை விடக் கடுமையான வணக்கவாளிகளா ? அவர்களுக்குத் தெரியாத ஹக்கீக்கத்தை ( ரகசியத்தை ) இவர்கள் தெரிந்து கொண்டார்களா ?

நபியவர்களின் ஆத்மீகப் பாசறையில் பயிற்சி பெற்ற லட்சக் கணக்கான ஸஹாபாக்களில் ஒருவருக்கேனும் இப்படியொரு நிலை ஏற்பட்டுப் புலம்பியதாக வரலாறு உண்டா ? அப்படி இந்த சூபிகள் நிரூபிப்பார்களா? அல்லாஹ் பொருந்திக் கொண்டதாக அல் குர்ஆனிலேயே விளம்பரப்படுத்தப்பட்ட அந்த இறைநேசர்களுக்குக் கற்பிக்காத ரகசியத்தை இந்த சூபிகளுக்கு கற்றுக் கொடுத்தானா? இந்த வினாக்களுக்கு ஒவ்வொரு தனி மனிதனும் விடையளிக்கக் கடமைப்பட்டுள்ளான் .

சரி.... விடயத்துக்கு வருவோம் ..

இப்போது இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே அல்லாஹ்வின் பிரதிபலிப்பே .. தூணும் அவனே துரும்பும் அவனே , வானமும் அவனே வையமும் அவனே நீயும் அவனே நானும் அவனே எனும் ரகசியம் அவருக்குப் புலப்பட ஆரம்பித்ததும் அவருக்கு அனைத்து வித மறைவான ஞானங்களும் புலப்பட ஆரம்பிக்கும். இவரே முன் கூட்டியே கடவுளாக இருந்திருந்ததன்; ரகசியத்தை இப்போது இவர் கண்டு கொண்டதால் கடவுளின் ஆற்றல் ,அறிவு வல்லமை மறைவான ஞானம் அனைத்தும் இவருக்கும் வந்து விடும் . இதற்குத்தான் இவர்களிடத்தில் மஃரிபா மெஞ்ஞான முக்தி பெறல் எனப்படும் . இந்த நிலையை அடைந்தவர்களுக்கு ஆரிபீன்கள் மெஞ்ஞானவான்கள் எனும் பெயர் சூட்டப்படும் .

அப்துல் அஸீஸ் தப்பாக் எனும் அண்மைக்கால சூபி ஒருவர் கூறுகின்றார் ..
'அல்லாஹூத்தஆலா--தான் யாரென்ற மஃரிபா ஞானத்தை ஒருவருக்குக் கொடுக்கும் வரை எவரையும் நேசிப்பதில்லை . அந்த ஞானம் பெற்றதும் அவர் அல்லாஹ்வின் ரகசியங்களையெல்லாம் காண ஆரம்பிப்பார் . அப்போது அவருக்கு ஜத்பு எனும் இறை ஈர்ப்பு நிலை ஏற்படும் . ( இப்ரீஸ் ப: 217 )

இல்லை! உண்மையில் இது தேவையற்ற சிந்தனைக் குழப்பத்தாலும் ,அளவுக்கதிகமான திக்ர் எனும் பெயரில் அரங்கேற்றிய பேயாட்டத்தாலும் ஏற்பட்ட காக்காய்வலிப்பு நோய்தான் இது! .

அதாஉல்லாஹ் இஸ்க்கந்தரி எனும் சூபி மகான்?? கூறுகின்றார்...

'மஃரிபா –ஞானமென்பது ஒரு கற்கக் கூடிய அறிவல்ல .அது நேரடியாகக் காணும் ஒரு நிகழ்வாகும் , அது சொல்லித் தெரியும் ஒன்றல்ல, அது வர்ணிக்க முடியா ஒரு ரசனைமிகுஓவியம் , திரையிடப்படாத ஒரு காட்சி . இதைக் கண்ணுற்றவர்கள் ஏனையோரைப் போன்றல்ல ,ஏனையோர் கண்ணுற்றோரைப் போன்றுமல்லர். மஃரிபா எனும் ஞானம் பெற்ற ஆரிபீன்களிடத்தில் அல்லாஹ் அல்லாத எப்பொருளும் இருக்கின்றதென்றோ இல்லையென்றோ சொல்லப்பட மாட்டாது . ஏனெனில் அவனே எல்லாம் என்பதே உண்மையாதலால் அவனல்லாத எதுவும் இல்லையென்பது தெளிவாகின்றது , (கஸ்புல் அஸ்ரார் . ப: 139)

எதுவுமறியா அப்பாவிப் பாமர சமூகம் சூபி மகான்கள் ,மெஞ்ஞான குருநாதர்கள் என்று போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஷைத்தானின் தூதர்களான கேடுகெட்ட இந்த சூபிகளின் அந்தரங்கம் இதுதான் . குப்ரையும் ஷிர்க்கையும் பாமரர்கள் மத்தியில் பெயரை மாற்றி மெஞ்ஞானம் எனும் போர்வையில் விதைத்து நரகத்தின் நாயகனான ஷைத்தானின் அணிக்கு ஆட்சேர்ப்பு செய்து ஷைத்தானின் நேசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம் போட்டு பசுத்தோல்ப்போர்த்திய புலிகள் போன்று சமுகத்திலே ஊடுருவிய, இப்போதும் ஊடுருவியிருக்கும் இந்தக் கேடு கெட்டவர்களை அனைவரும் அடையாளங் கண்டு கொள்ள வேண்டும் . இவர்களைப் பற்றி சமூகத்தின் மத்தியில் உள்ள தவறான கருத்தோட்டத்தைக் களையெடுத்து இவர்களின் சுய ரூபத்தைத் தோலுரித்துக் காட்ட வேண்டும் . இது ஒவ்வொரு முஃமினதும் இஸ்லாமிய,தார்மீகக் கடமையாகும் .


அன்னிய பிற மதங்களில் சூபித்துவம்.

சூபி மகான்கள் இஸ்லாத்தில் மேன்மைக்கும் அந்தஸ்த்துக்கும் உரியவர்கள், தம் வாழ்வையே இஸ்லாத்திற்காக அர்ப்பணித்தவர்கள் என்று தவறாகப் புரிந்து வைத்திருப்போருக்கு மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கின்றேன் . இந்த சூபித்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் கடுகளவு கூடச் சம்பந்தம் இல்லை . இன்னும் சொல்லப் போனால் இந்த சூபித்துவம் இஸ்லாத்திற்கு முன்னுள்ள காலத்திலேயே பல்வேறு மதங்களிலும் அந்தந்த மதங்களின் பிரதான சித்தாந்தமாக இருந்து வந்துள்ளதையும், இந்த சூபிகள் அன்றும் இன்றும் கூறும் அதே அத்வைதக் கொள்கையை அந்தந்த மதங்களைச் சேர்ந்த குருக்களும் ஞானிகளும் போதித்து வந்துள்ளனர் என்பதையும் நாம்; காண முடிகின்றது . இன்றும் கூட அந்தந்த மதங்களின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக இந்த சூபிகள் சொல்லித் திரியும் அத்வைத மெஞ்ஞானக் கொள்கை ?? அமைந்திருப்தைக் காணலாம் . இதை நான் அனுமானமாகச் சொல்லவில்லை . தகுந்த ஆதாரங்களுடன் இக்கொள்கை அன்னிய வேதங்களில் உள்ளதென்பதை நிரூபிக்க அந்தந்த மதங்களின் வேத நூல்களிலிருந்தே இது பற்றிக் கூறப்படும் பகுதிகளை எடுத்துக் கூறுகின்றேன் . அவற்றைப் படித்து விட்டு – சந்தேகப்பட்டால் அந்ததந்த வேத மூல நூல்களை எடுத்துப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் . இந்த ஷைத்தானியக் கொள்கைகளையெல்லாம் அழித்தொழிப்பதற்காகவே இஸ்லாம் வந்தது . அழித்தொழித்தது . ஒரேயொரு கடவுள்தான் அல்லாஹ் . அவனல்லாத அனைத்தும் அவனது அடிமைகள் . படைப்புக்கள் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியது . சூபிகள் சொல்வது போல் இந்த எல்லாம் அவனே என்பதுதான் அல்லாஹ் கூற விரும்பிய ரகசியமெனில் முஹம்மது நபிக்கு இஸ்லாத்தைக் கொடுத்து அதைப் போதிக்க வேண்டிய அவசியமில்லை . ஏனெனில் இக்கொள்கைதான் இஸ்லாத்துக்கு முன்பே அனைத்து மதங்களிலும் இருந்துள்ளதே ....

எனவே சுருங்கக் கூறின் சூபிகள் அனைவரினதும் ஒருமித்த அடிப்படைக் கொள்கை ' எல்லாம் அவனே ' எனும் அத்வைதக் கொள்கையும், கடவுள் குறிப்பிட்ட சிலரில் இறங்கி அவர்கள் கடவுள் அவதாரம் எடுக்கின்றனர் எனும் ஹூலூல் இத்திஹாத் எனும் கொள்கையுமாகும் . இது முழுக்க முழுக்க ஷைத்தானியக் கொள்கை . இதற்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஏனைய பல்வேறு மாற்று மதங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்ட ஒரு சித்தார்த்தமே இது என்பதை அந்தந்த மதங்களின் மூல நூல்களிலிருந்தே- முடிந்த வரைக்கும் எடுத்துக் காட்ட முயற்சிக்கின்றேன் .

ஸூபித்துவம் ... யஹூதிகளிடத்தில்;

சூபி என்ற மூலச் சொல் எதிலிருந்து பிறந்தது என்பதில் பல கருத்துக்கள் இருக்கின்றன. الصوفசூப்-கம்பளி எனும் சொல்லிலிருந்து பிறந்திருக்க வேண்டுமென சிலர் வாதிடுகின்றனர் . இன்னும் சிலர்(الصفاء) ஸபா- தெளிவு எனும் சொல்லிலிருந்து பிறந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர் . எனினும் இக்கருத்துக்கனை ஏற்றுக் கொள்ள முடியாததற்கு பல நியாயங்கள் இருக்கின்றன . அதுபற்றிய விபரங்களை சூபித்துவம் பற்றிய ஏனைய நூல்களில் அறிந்து கொள்ளலாம் .

எனினும் இச்சொற்பதம் எங்கிருங்து வந்ததென்பதை நுணுக்கமாக ஆராயும் போது அதிர்ச்சியான சில தகவல்கள் கிடைக்கின்றன . அதாவது இச்சொல் 'சூபியா' ( ஞானம் ) எனும் யூனானிய சொல்லிலிருந்து அன்றேல் சூபிய் எனும் யஹூதிய சொல்லிலிருந்துதான் வந்திருக்க வேண்டுமென்பது ஆராயும் போது ஐயத்துக்கிடமின்றித் தெளிவாகின்றது . ஆம் ! யஹூதிய சமூகத்தின் மத்தியில் இருந்த ஒரு சில மதகுருக்களுக்கு சூபிய் என்று கூறப்பட்டு வந்தது . அஸ்ஷைக் அல் முஸ்லிக் - நேர்வழி காட்டும் குருக்கள் என இவர்கள் அறிமுகமாகியிருந்தனர் . இவர்கள் நடத்தும் சில ரகசிய ஆத்மீக மெஞ்ஞான சபைகளுக்கு நபிமார்களும் வருகை தருவார்கள் என இவர்கள் நம்பி வந்தார்கள் . இவர்கள் ஒன்று கூடும் இடத்திற்கு (مصفاة ) மிஸ்பா என அழைக்கபட்டது . இஸ்ரவேலர்கள் கன்ஆன் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டதன் பின்னர் இவ்வாறான தேவாலயங்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்க ஆரம்பித்தன. பின்னர் மதாலயங்களாகவும் ,கல்விக் கூடங்களாகவும் பரிணமிக்க ஆரம்பித்தன . இந்த ஆத்மீகப் பயிற்சியை வழங்குபவருக்கு நபீம் எனும் பெயரும் இருந்து வந்துள்ளது . அதாவது இவர் சூபிய் என்பவருக்கு ஒரு படித் தரம் குறைந்தவராவார் . இவர்கள் தம்மை நபிமார்கள் எனவும் வாதி;ட்டுள்ளனர் . யஹூதிகள் இவர்களை அளவு கடந்து நேசி த்து கண்ணியப்படுத்தி வந்துள்ளனர் .உண்மையான நபிமார் களைக் கொலை செய்தும் வந்துள்ளனர் . இந்த மிஸ்பாத் எனும் ஞானக்கூடத்தில் கற்றுத் தேர்ந்தவர்கள் தம்மை நபிமார்கள் எனவும் அறிமுகப்படுத்தினர் .

ஹிஜ்ரி இரண்டாம் மூன்றாம் ஆண்டுகளில்மட்டுமின்றி நபிகளாரின் காலத்திலேயே அரபு நாட்டில் சில பொய் நபியமார்கள் தோன்றினர் . இவர்கள் சிலரின் வரலாற்றை எடுத்துப் பார்க்கும் போதும் மிஸ்பாத் எனும் யஹூதிக் கல்லூரியில் பயின்ற யஹூகளாக இவர்கள் இருந்தமை வரலாறு சொல்லும் பாடமாகும் .
(பார்க்க : முஹம்மத் பில் கிதாபில் முகத்தஸ் ப 72 ) (அல்கஸ்பு அன் ஹகிக்கதிஸ் ஸூபிய்யா ப 742 )கிரேக்க யூனானிய தத்துவங்களில் சூபித்துவம்..

யூனான் ,கிரேக்கம் போன்ற பகுதிகளில் பல்வேறு தத்துவங்களும் கொள்கைகளும் தோற்றம் பெற்றுள்ளன . இவற்றில் மிகப் பிரபலம் பெற்றிருந்த கொள்கைதான் ' ( اسرارإلويس ) 'அஸ்ராரு இல்வீஸ்' எனும் கொள்கையாகும் .யூனானியர்கள் இஸ்கந்தர் என்பவரின் தலைமையில் சிரியா , எகிப்து, ஈராக் போன்ற நாடுகளைக் கைப்பற்றிய வேளையில் அப்பகுதிகளில் இவர்களது கலாச்சாரங்கள் பிரதிபலிக்க ஆரம்பித்தன. இவர்கள் தம் கடவுளை வணங்கமுன் நடனம், ஆடல், பாடல், நாட்டியம் போன்றவற்றில் ஈடுபட்டு ஜத்பு எனும் ஒரு வகை தன்னிலை அறியா போதை நிலைக்கு வருவார்கள் . வஹ்தத்துல் வுஜூத் அனைத்தும் கடவுளிலிருந்து தோன்றியவையே எனும் தத்துவமே இவர்களிடம் இருந்தது .ஒருவகை தெய்வீக நெருப்பே இவர்களின் கடவுளாக இருந்தது (நாமறிந்த நெருப்பல்ல) இந்த தெய்வீக நெருப்பிலிருந்தே அனைத்தும் தோன்றி இறுதியில் அவை அழிந்து நெருப்புடன் நெருப்பாக சங்கமிக்கின்றன என நம்பி வந்தார்கள் .(றஸாயிலு இப்னு ஸப்ஈன் ப :268)

கிருஷ்தவத்தில் சூபித்துவம் .
கிருஷ்த்துவ மதத்தில் முன்பிருந்தே துறவறம் கடைப்பிடிக்கப் பட்டு வந்ததை அல்குர்ஆன் இப்படிக் கூறுகின்றது.

وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَامَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلاَّ ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا فَآتَيْنَا الَّذِينَ آمَنُوا مِنْهُمْ أَجْرَهُمْ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ( حديد 27 )
'நாங்கள் அவர்களுக்குத் துறவறத்தைக் கடமையாக்க வில்லை அதை அவர்களாகவே உருவாக்கிக் கொண்டார்கள். ( அல்ஹதீத் 27)

கிருஷ்த்துவுக்குப் பின் இரண்டாம் நூற்றாண்டுகளில் சூபித்துவத் தத்துவம் கிருஷ்த்தவ மதத்திலும் ஊடுருவ ஆரம்பித்தது.

الغنوسية) )அல்கனூஸிய்யா எனும்பெயரிலேயே கிருஷ்த்தவ மக்களிடையே இது அறிமுகமானது . கனூஸிய்யா என்பதற்கு மெஞ்ஞானம் என்று பொருள்ப்படும் . கனூஸிய் என்பவர் மெஞ்ஞானியாவார் . ஆரம்பத்தில் கிருஸ்த்தவத் திருச்சபை இந்த அத்வைத சூபித்துவத் தத்துவத்தை ஏற்றுக் கொள்ளா விட்டாலும் காலப் போக்கில் அதனை அங்கீகரித்து விட்டது . இவர்களில் ஒரு பிரிவினர் ஹூலூல் -இத்திஹாத் - அதாவது மனிதனில் கடவுள் அவதரிக்கின்றான் எனும் கொள்கையிலும் இன்னும் ஒரு பிரிவினர்; படைப்புக்கள் அனைத்துமே கடவுளின் வெளிப்பாடே எனும் வஹ்தத்துல் வுஜூத் கொள்கையிலும் இருக் கின்றனர் .

கதீஸா திரேஸா எனும் கிருஸ்த்தவப் பாதிரி இப்படிக் கூறுகின்றார்.
'மனித ஆத்மா இறை ஆன்மாவுடன் இணைவதென்பது எரியும் இரு மெழுகுதிரிகளைப் போன்றதாகும். ,இரண்டும் வெவ்வேறாக எரிந்தாலும் அவற்றிலிருந்து வெளிப்படும் பிரகாசம் ஒன்றேயாகும் . ( இயேசுவின் போதனைகள் ப : 212)

இன்னொரு கிருஷ்த்தவப் பாடலில்...
'இதோ காதலனே .. நான் உன்னிடம் பிரசன்னமாகி விட்டேன் . நான் உன்னை நெருங்க வேண்டும் . எனது இந்த சிற்றுடல் உன் உடலுடன் சங்கமிக்க வேண்டும் . என்னுயிர்; என் காதல்க் கடவுளின் கைகளில் தவழ வேண்டும் . ( உமர் பாரிலின் கவிதைகள் ப : 77)

எனது காதல் கடவுள் .. மலைகளும் அவனே ஓடைகளும் அவனே, ,மரங்களும் அவனே , தீவுகளும் அவனே , நதிகள் ,காற்று இரவு அனைத்தும் அவனே ,.. (மஜல்லதுல் அரபி இதழ் : 305 ப: 40 )


இந்து மதத்தில் சூபித்துவம் .

இந்து மதம் பற்றி தெளிவானதொரு முறையில் வரைவிலக்கணப்படுத்திக் கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது . காரணம் ஒன்றுக்கொன்று முறண்பட்ட பல்வேறு கொள்கைகளின் கூட்டுக் கலவையே இந்து மதமாக உள்ளது . இருப்பினும் குறிப்பிட்ட ஒருசில விடயங்களில் மாத்திரம் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை நிகழ்வதைக் காண முடிகின்றது .

இந்துக்களின் வர்ணாச்சிரமக் கொள்கையின்படி மனிதன் கடவுளிலிந்தே பிறக்கின்றான் . கடவுள் சிலரைத் தனது நெற்றியிலிருந்தும் ,சிலரைத் தன் நெஞ்சுப் பகுதியிலிருந்தும் ,வேறு சிலரைத் தன் வயிற்றுப் பகுதியிலிருந்தும் மற்றும் சிலரைத் தனது கால்ப் பகுதியிலிருந்தும் படைத்திருப்பதாகவும் - கடவுளின் தலையிலிருந்து படைக்கப்பட்டவர்கள் பிராமணர்கள் - உயர்ந்தவர்களென்றும் , காலிலிந்து பிறந்தவர்கள் சூத்திரர்கள் -தீண்டத்தகாதவர்கள் என்றும் இந்து வேத நூல்களான ரிக் , அதர்வன, யஜூர் போன்றவற்றில் காண முடிகின்றது .

இப்போது புரிகின்றதா? அத்வைதக் கொள்கை எங்கிருந்து வந்த தென்று ,,,
இந்துக்களின் வேத நூலான பகவக் கீதையை அனைத்து இந்துக்களும் தமது வேத நூலாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள் அதே போல் ஆதி பராசக்தி எனும் நித்திய ஜீவ ஆத்மா இருப்பதாகவும் நம்புகின்றனர் . சிலர் வேறு பெயர் கூறியும் இதை அழைப்பதுண்டு .

இவர்களிடத்தில் ஆயிரக் கணக்கான கடவுள்கள் இருக்கின்றன . எனினும் பிரதானமான கடவுள்கள் மூன்று என அனைவரும் நம்புகின்றனர் . அவைகளாவன...
1- பிரம்மன் - படைப்பதற்கு , இதற்குப் பரமசிவன் என்றும் சொல்லப்படும் .
2- விஷ்னு – காப்பதற்கு .
3- யமன் - அழிப்பதற்கு .

பகவக் கீதையில் வருவதாவது ...
'காக்கும் கடவுளான விஷ்னு ஒரு முறை மனித உருவெடுத்து கிருஷ்னனின் வடிவில் அருச்சுனன் எனும் தேவரிடத்தில் வந்தார் . ( இவர் பின்பு கடவுளாக மாறி விட்டது வேறு விடயம் .)

அருச்சுனன் : எனக்கு ஒரு புதிருக்கு விடை தெரிய வேண்டும் . நீ எனக்குக் தந்த ஆத்மாவின் ரகசியம் என்ன ? அதனாலேயே நான் அழியாமல் நிலை பெற்றிருக்கின்றேன் . நான் உனது திரு வடிவத்தைக் காண விரும்புகின்றேன் . உன்னைக் காணக்கூடிய சக்தி எனக்கிருப்பதாக நீ நம்பினால் உனது அழிவற்ற ஆத்மா வை வெளிப்படுத்துவாயாக .

கடவுள் : அருச்சுனா.. என்வடிவங்களைப் பார் .. அவை நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவற்றுக்குப் பல நிறங்களும் வடிவங்களும் இருக்கின்றன . இப்பிரப ஞ்சத்தைப் பார் . அதில் நீ பார்க்கும் அனைத்தும் என் உடலிலேயே இணைந்து கலந்திருக்கின்றன . எனினும் உன் மனிதக் கண்களால் என்னைக் காண முடியாது . இருப்பினும்; இயற்கையை வென்ற தெய்வீகக்கண்களை உனக்குத் தருகின்றேன் அப்போது உன்னால் என்னைக் காண முடியும் .
பின்னர் அருச்சுணனுக்கு தெய்வீகக் கண்கள் கொடுக்கப்பட்டதன் பின் பார்த்த போது கடவுளின் உடலிலேயே பல்வேறு வடிவங்களில் முழுப் பிரபஞ்சத்தையும் அவர் கண்டார் . (மேற்கோள்: அல் பிக்ர் அல் பல்ஸபிய்யா அல் ஹின்திய்யா ப :204 )

மனிதன் பண்பட்டு பிரம்மனுடன் இரண்டறக் கலந்து விடும் போது அவனும் பிரம்மனாகி விடுவான் . அவனது உயிர் அமைதி பெற்று விடும். அவன் எதற்கும் ஆசைப்படவோ எதற் காகவும் கவலைப்படவோ மாட்டான்.தான் யார் என்பதையும் தன் நிலை யாது என்பதையும் அறிந்து கொள்ளும் போது அவன் என்னுள் சங்கமித்து குடி கொண்டு விடுகின்றான் . ( அதே நூல் ப: 234 )

எனவே அனைத்தும் கடவுளே எனும் அத்வைதக் கொள்கையும் ஜத்ப் எனப்படும் தன்னிலை மறக்கும் நிலையும், அதன் பின் ஏற்படும் ஏனைய ஷைத்தானியத் தொடர்புகளால் உண்டாகும் வழக்கத்ததுக்கு மாறான சில அதிசயங்களும் சாதி மத பேதமின்றி அனைத்து மதத்தினத்தினரிடமும் இருந்திருப்பதை நாம் அறிய முடிகின்றது . எனவே இதையெல்லாம் கராமத் என்றும் இவர்களையெல்லாம் அவ்லியாக்கள் - இறை நேசச் செல்வர்கள் என்றும் சொல்ல முடியுமா? சிந்திப்போமாக ..

இதே அத்வைதச் சித்தாந்தம் புத்த மதத்திலும் இருப்பதை அறிய முடிகின்றது புத்த மத வேத நூலான 'பாயஸீயசூத்ரா ' எனும் நூலில் இது பற்றி தெட்டத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது விரிவஞ்சி இங்கே அது தவிர்க்கப்படுகின்றது .

எனவே சுருக்கமாகச் சொல்வதெனில் சூபித்துவமும் அதன் ஆணி வேரான அத்வைதக் கொள்கையும் பழமை வாய்ந்தது . தொண்மை மிக்கது . இஸ்லாத்தை நபியவர்கள் அறபுநாட்டில் பிரச்சாரம் செய்வதற்கு முன்பே இந்தக் கொள்கை உலகின் பல பாகங்களிலும் பல்வேறு பெயர்களில் அறிமுகமாகியிருந்தது .பாரசீகம் , இந்துஸ்த்தான் போன்ற இடங்களில் சமயக் கொள் கையாகவும் , எகிப்து , சிரியா , ஈராக் போன்ற பகுதிகளில் ஒரு புதிய சித்தாந்தமாகவும் , அறபுப் பகுதியில் 'கஹானா' (சாஸ்த்திரம்) எனும் பெயரிலும் அறிமுகமாகியிருந்தது . அவ்வாறே எஹூதிகளிடத்திலும் , கிருஷ்த்தவர்களிடத்தில் இக்கொள்கை காணப்பட்டது .

பின்னர் இஸ்லாம் அறிமுகமாகிச் சில நூற்றாண்டுகளின் பின்னர் சில விசமிகளால் இஸ்லாத்திலும் இக்கொள்கை ஊடுருவல் செய்யப்பட்டது . முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற மார்க்க அறிவற்ற சில முக்கிய புள்ளிகளின் செல்வாக்கினால் முஸ்லிம்களின் மத்தியிலும் சில பகுதிகளின் இக் கொள்கை கால்ப் பதிக்க ஆரம்பித்து . அப்பாஸிய மன்னரான அப்துல் மலிக் பின் மர்வானின் ஆட்சிக் காலத்தில் ஹாரித் அத்திமஸ்க்கி எனும் ஒருவன் இக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து வந்தான் . இவன் ஒரு முன்னாள் சூனியக்காரன் . பிற்பாடு தன்னை நபியென வாதித்தான் . தனக்கு இறைவனிடமிருந்து வஹீ வேத அறிவிப்பு வருவதாகவும் வாதித்தான் . ஆனால் இவனிடம் வந்தது கெட்ட ஷைத் தான்கள்தான் . தன்னுடைய குப்ர் இறை மறுப்பின் காரணமாக ஷைத்தானியத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு சில வழக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்ய ஆரம்பித்தான் .

 ஏமாந்த சில பாமர மக்கள் இதையும் கராமத் என நினைத்து அவன் பின்னால் செல்ல ஆரம்பித்தனர் . உண்மையில் ஷைத்தானியத் தொடர்புகளை ஏற்படுத்தக் கொண்டு அதன் மூலம் செய்த்தான்கள் இவனுக்குச் செய்துகாட்டும் வித்தைகளே இவை . பொது மக்களின் ஈமானுக்கு அச்சுறுத்தலாகவிருந்த இவனது செயற்பாடுகளை அவதானித்த அக்கால மன்னர் இவனை அழைத்து விசாரித்து விட்டு அவனுக்கு மரண தண்டனை விதித்தார் . ஆனால் அவனைக் கொலை செய்ய முற்பட்ட போதும் முடியாமல்ப் போய் விட்டது . அவன் உடலில் ஈட்டி ஏற மறுத்து விட்டது . அவனோடு இருந்த ஷைத்தானின் வேலையே இது . இறுதியில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று சொல்லி அம்பெய்த போது அது அவனைத் தாக்கியதும் அவன் இறந்தான் .

எனவே சூபித்துவத் போர்வையில் அத்iவைதக் கொள்கையுடைய இவர்களிடமிருந்து சில அதிசயங்கள் ஏற்பட்டால் அதைக் கண்டு பாமர முஸ்லிம் மக்கள் மிரண்டு ஆச்சரியப்பட்டு இவர்கள் இறை நேசச் செல்வர்கள்தான் என்று முடிவு செய்து கொண்டு அவனின் காலில் விழுந்து கும்பிடுவதற்குக் தயாராகி விடுகின்றனர் . இத்தகைய போலி ஷைத்தானிய வித்தைகள் இந்த சூபிகளிடம் மட்டுமல்ல யூத ,கிருஷ்த்தவ ஏன் இந்து பௌத்த மத குருக்களுக்கும் இடம்பெறுகின்றனவே என்பதை யோசிக்க மறந்து விடுகின்றனர் .
  


இஸ்லாத்தைத் தகர்க்கும் ஸூபித்துவம் .
மக்களை ஆத்மீகப் பாதையில் பயிற்றுவிக்கும் பள்ளி எனும் போலி பெயரில் மக்களிடையே அறிமுகமாகியிருக்கும் இந்த சூபித்துவ அத்வைத தத்துவம் எந்தளவுக்கு இஸ்லாத்தைத் தகர்க்கும் விஷமத்தனமான, நச்சுக் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது என்பதைக் கொஞ்சம் தொட்டுக் காட்டுவதுதான் இந்தப் பகுதியின் நோக்கம். எந்தளவுக்கு சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாதபடி மிக்க தந்திரமாக இந்த நச்சுக் கருத்துக்களை மக்கள் இதயங்களில் புகுத்தியிருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது . எனவே இது பற்றி; சற்று விரிவாகப் பார்ப்போம் .

எல்லாம் இறைவனே .. என்று கூறும் சூபித்துவம் .

எல்லாம் அவனே எனும் தத்துவமே சூபித்துவத்தின் அடிநாதமாகும் . சூபித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளும் இந்த விடயத்தில் உடன்பட்டுக் காணப்படுகின்றன . ஆனால் இதை ஆரம்பப் படித்தர மக்களுக்குச் சொல்வது கிடையாது. எமது பகுதிகளில் உள்ள காதிரிய்யா , ஷதுலிய்யா, ஜிஸ்திய்யா இது போன்ற அனைத்துத் தரீக்காக்களுமே இவ்வத்வைதத்தை வெளிப்படையாகச் சொல்லவிட்டாலும் அத்தரீக்காக்களின் மௌலீது நூல்களில் கூட இவை மலிந்து காணப்படுகின்றன.இந்த அனைத்துத் தரீக்காக்களும் முன்னைய சூபித்துவவாதிகளால் எழுதப்பட்ட ஒரே வித நூல்களிலிருந்தே தமது சரக்குகளை எடுத்திருக்கின்றன .இப்போதும் எடுக்கின்றன . இந்த தரீக்காக்களில் பெயர்கள் சமீபத்திய சூபித்துவ வாதிகளினாலேயே தோற்றுவிக்கப்பட்டன .

எல்லாம் அவனே எனும் கருத்தில் சில முற்கால சூபிகள் சொல்லி வைத்த தத்துவங்கள் ? இல்லை! வழிகேடுகள் சிலதைப் பார்ப்போம் .

 பிரபலசூபியான கஸ்ஸாலி இமாம் அவர்கள் திருவுளமாகின்றார்கள்??..

தவ்ஹீத் என்பதை நான்கு படித்தரங்களாக வகைப்படுத்தலாம் . முதலாவது நாவினால் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது, இரண்டாவது அதன் அர்த்தத்தை கல்பால் இதயத்தால் உண்மைப் படுத்துவது, இது பாமரமக்களின் படிநிலையாகும், மூன்றாவது இறை ஒளியினால் கஷ்புடைய ஞானத்தைக் காண்பதாகும் . இது இறைநெருக்கம் பெற்றவர்களின் நிலையாகம் , நான்காவது பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத்தவிர எதையுமே காணாத நிலையாகும். தன்னையும் அவர் கடவுளாகவே காண்பார். இந்நிலைக்கு சூபியாக்களிடத்தில் பனாஃ -- இறைவனுடன் சங்கமித்து விடுதல் என்று கூறப்படும் . இந்த நிலையை அடைந்தவர்தான் உண்மையான தவ்ஹீத் வாதியாவார் .(இஹ்யா உலூமுத்தீன் . 245-4 ம்பாகம் )

இவ்வாறு கஸ்ஸாலி கூறி விட்டு பின்வருமாறு வினாவெழுப்புகின்றார். ஒருவன் வானம் பூமி கடல், கரை ,பறவை, மிருகம் இப்படிப் பல்வேறு படைப்புக்களைக் காணும் நிலையில் எங்ஙனம் அனைத்தையும் ஒன்றாக ஒரே கடவுளாகக் காண்பது சாத்தியமாகுமென நீ வினவலாம் . எனினும் இது கஸ்புடைய ஞானத்தின் உச்ச கட்ட நிலையால் ஏற்படுவதாகும் இந்த ஞானத்தின் ரகசியத்தை எழுத்துக்களால் வடிக்க முடியாது .ப்பின் இந்த ரகசியத்தை பகிரங்கப்படுத்துவது குப்ராகுமென ஆரிபீன்கள் கூறுவார்கள் .
(அதே நூல் அதே பக்கம்)

மன்ஸூர் அல் ல்லாஜி என்பவன் வழி கெட்ட சூபிகளில் ஒருவன் இவனது காலத்தில் தீனூர் எனும் ஊரில் ஒருவர் மடமொன்றில் தனிமையில் இருந்து வந்தார் . இவரது மடத்தைச் சிலர் சந்தேகத்தின் பேரில் சோதனை போட்ட போது அங்கிருந்து கடிதமொன்றைக் கண்டெடுத்தனர் . அக்கடிதத்தில் 'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமான மன்ஸூர் அல்கல்லாஜியிடமிருந்து இன்னாருக்கு.' என்று எழுதப்பட்டிருந்தது . இக்கடிதம் அரசரிடம் சமர்ப்பிக்கப்பட அவர் ஹல்லாஜியை வரவழைத்து இதுவரை நீ நபியென்றுதான் வாதாடி வந்தாய் .இப்போது நீதான் கடவுள் என்று கூறத் துணிந்து விட்டாயா? எனக் கேட்க நான் அப்படிக் கூறவில்லை. எனினும் அனைவரும் கடவுள் என்பதே எங்கள் தத்துவம் . இக்கடிதம் எனக்குரியதே... அதே வேளை இதை எழுதியவனும் அல்லாஹ்வே என்றான் . ( இக்கொள்கை காரணமாகவே அவனுக்கு இஸ்லாமிய அரசால் மரணதண்டனை விதிக்கப்பட்டது . . . ( தல்பீஸூ இப்லீஸ் பக்கம் 171)

மற்றுமொரு சூபித்துவ வழிகேடனாகிய இப்னு அரபி என்பவன் ஒரு கவிதையில் கூறுகின்றான் .
மனிதனே கடவுள். கடவுளே மனிதன் இப்படியிருக்க யார் யாருக்குக் கட்டளையிடுவது ?
நீ மனிதனென அழைத்தாலும் கடவுளென அழைத்தாலும் இரண்டுமே ஒன்றுதான் இப்படியிருக்க யார் யாரை வணங்குவது .? (அல்புதூஹாத்துல் மக்கிய்யா213 )

இப்னு அபியின் மற்றுமொரு உளறலைப் பாருங்கள் ....
ஒரு மனிதன் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போதும் அல்லாஹ்வுடனேயே உறவு கொள்கின்றான் ...நான் அவனை அல்லாஹ்வை வணங்குகின்றேன் அவன் என்னை வணங்குகின்றான் .( ஸூபிய்யா 17 )

அபூ யஸித் அல் புஸ்தாமி எனும் மூடச் சூபி பின்வருமாறு பிரார்த்திக்கின்றான்.. 'உனது வஹ்தானியத்தை எனக்கும் தருவாயாக . உனது ப்பு எனும் கிரீடத்தை எனக்கும் அணிவிப்பாயாக . என்னையும் உனது ஒருமைத்துவத்துடன் சேர்த்துக் கொள்வாயாக . என்னை மக்கள் கண்டால் உன்னைக் கண்டதாகவே சொல்ல வேண்டும் என்று பிரார்த்திக்கின்றான்...

இது போன்ற நச்சுக் கருத்துள்ள சிந்தனைகள் விடயத்தில் அனைத்து சூபிகளுமே ஒருமித்த கருத்தில் இருக்கின்றனர் . சூபித்துவ நூல்களில் இவை நிறைந்து காணப்படுகின்றன .

எம்மதமும் சம்மதமே என்பதே சூபித்துவ . இலச்சினை .

மேலே கூறியதற்கேற்ப காண்பதெல்லாம் கடவுளே எனும் சித்தாந்தத்தின்படி ஒருவன் எந்த மதத்திலிருந்தாலும் எந்தச் சிலையை வணங்கினாலும் அவன் அல்லாஹ்வையே வணங்குகின்றான் என்பதே இவர்களின் கருத்தாகும் . இதற்கேற்ப இஸ்லாத்தின் வைரியான பிர்அவ்னும் மிகப் பெரிய தவ்ஹீத் வாதியாவான் . இன்னும் சொல்லப் போனால் 'நான்தான் உங்களுக்கெல்லாம் மிகப் பெரிய கடவுள்' என்று கூறி உண்மையான கடவுள்த் தத்துவத்தை அவன் நிலை நிறுத்தினான் என்று கூறுகின்றனர் . அன்றைய மக்கத்துக் காபிர்களை அல்லாஹ் ' யாஅய்யுஹல் காபிரூன் காபிர்களே ' என்று விழித்ததற்குக் காரணம் அவர்கள் எல்லாமே கடவுள்தான் எனும் சித்தாந்தத்தைக் கைவிட்டு விட்டு 313 விக்ரஹங்கள் மாத்திமே கடவுள் என்று நம்பி காண்பெதெல்லாம் கடவுளே ; என்பதை மறுத்தனர். இதனாலேயே அவர்கள் காபிர்கள் என அழைக்கப்பட்டனர் என்று இவ் வழிகேடர்கள் கூறுகின்றனர் ..

ஜலாலுத்தீன் ரூமி என்பவன் கூறுகின்றான் ... நான் ஒரு முஸ்லிம் ஆனாலும் நான் கிருஷ்த்தவனும்தான், பிராமணனும்தான் நான் பள்ளியிலும் தொழுவேன் கோயிலிலும் கும்பிடுவேன் , சிலைகளையும் வணங்குவேன் ஏனெனில் எல்லாமே ஒன்றுதான் ( ஸூபிய்யா பக்கம் : 45)

இப்னு அரபியின் மற்றுமொரு உளறல்....
'என் மதமும் என் மாற்றுமத நன்பனின் மதமும் ஒரே மதமே என்றில்லாவிட்டால் என்னால் தூங்க முடியாது . என்னுள்ளம் எல்லா மதங்களையும் ஒன்றாகவே நோக்கும் நிலைக்கு வந்து விட்டது . அதிலே கிருஷ்த்தவப் பாதிரிகளுக்கும் இடமுண்டு . சிலை வணங்கிகளுக்கும் இடமுண்டு .கஃபாவுக்கும் இடமுண்டு . அது ஒரே நேரத்தில் தௌராத்தாகவும் குர்ஆனாகவும் இருக்கின்றது . (ஸூபிய்யா 17)


ஸூபிகளின் மேலும் சில ஷிர்க்கான வழி கெட்ட கொள்கைகள்

1- குரு வணக்கம் புரிதலும் குருவை அல்லாஹ்வை விட மேம்படுத்தி ஷிர்க் வைத்தலும் .

வழிகேடு 1 : கஸ்ஸாலி , அபூ தாலிப் மக்கி போன்றோர் கூறுவது .. ஒரு முறை அபூ துராப் எனும் ஸூபி தனது சீடர்களில் ஒருவரைக் கண்டார் .அவர் சதா நேரமும் இறை நினைவில் ஸ்தம்பித்துப் போயிருப்பதைக் கண்ணுற்று ஆச்சரியப்பட்டு அவரிடம் சென்று பேசினார் . பின்னர் அவரிடம் 'இப்படியே இருக்காமல் பிரபல சூபியான அபூ யஸீதையும் போய்ச் சந்தித்து வரலாமே' .. எனக் கூற சீடர் சற்று ஆத்திரப்பட்டு 'என்ன ஷேக் சொல்லுகிறீர்கள்? நான் இங்கிருந்து கொண்டே அல்லாஹ்வைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் , அப்படியிருக்க நான் எதற்காக அவரிடம் செல்ல வேண்டும்' என்றார் . அதற்கு அந்த ஷேக் ஆத்திரப்பட்ட வராக நீ நாசமாய்ப் போக .. அல்லாஹ்வைக் கண்டவுடன் அனைவரையும் மறந்துவிட்டாயா ? மகான் அபூ யஸீத் அவர்களை ஒரு தடவை நீ சந்தித்தால் அல்லாஹ்வை எழுவது தடவைகள் சந்திப்பதை விட அது உனக்கு மிகச் சிறந்தது என்றார் . இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அச்சீடர் அது எப்படியென வினவ நீ உன்னிடத்தில் அல்லாஹ்வைக் காணும் போது உனது நிலைக்கேற்ற அளவிலேயே உன்னிடம் வெளிப்படுகின்றான் . ஆனால் அவரைக் காணும் போது அவரிடத்தில் அவரது நிலைக்கேற்ப முழுமையாகத் தோன்றுகின்றான் என்றார் . ( இஹ்யா 34 -305)


இந்த வழிகேட்டை என்னவென்று விபரிப்பது ? நபி மூஸா அவர்கள் அல்லாஹ்வைக் காண வேண்டுமென அவனிடம் கேட்ட போது 'நிச்சயமாக உன்னால் என்னைக் காண முடியாது ' என் று கூறினான் (அல்குர்ஆன்) நபியவர்கள் தனது ஸஹாபாக்களுக்கு ' அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக நீங்கள் மரணிக்கும் வரை உங்களால் அல்லாஹ்வைக் காண முடியாது என்று கூறினார்கள் . (இப்னு மாஜா 4067 )

இப்படியிருக்க சூபிகள் எப்படி அதுவும் சதா நேரமும் அல்லாஹ்வைக் காண்பது ? சைத்தான்தான் இவர்களின் கண்களில் தோன்றுகின்றான் என்பதில் சந்தேகமில்லை . இது ஒரு புறமிருக்க அபூ யஸீத் எனும் ஸூபியைக் காண்பது அல்லாஹ்வை எழுபது தடவைகள் காண்பதை விடச் சிறந்ததென்றால் இவர்கள் எந்தளவுக்கு வழிகெட்டுப் போயுள்ளனர் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் .

வழிகேடு :2 கஸ்ஸாலியும் அபூதாலிப் மக்கியும் கூறும் மற்றுமொரு பிதற்றல்.
ஒரு முறை பஸரா நகரத்துக்குள் எதிரிப் படைகள் புகுந்து அட்டகாசம் செய்த போது மக்கள் 'ஸஹ்ல் எனும் சூபியொருவரிடம் சென்று தம்மைக் காக்குமாறு முறையிட்டனர். நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால் அவன் உடனே அதை அங்கீகரிப்பான் எனக் கூறினர் .அதற்கவர் மௌனமாயிருந்து விட்டு இவ்வூரில் சில நல்லடியார்கள் இருக்கின்றார்கள் .அவர்கள் உலகிலுள்ள அனைத்து அநியாயக்காரர்களையும் அழிக்க வேண்டுமனப் பிரார்த்தித்தாலும் அதே இரவிலேயே அனைவரும் அழிக்கப்பட்டு விடுவார்கள் . அவர்கள் ' மறுமை நாள் இடம் பெறக் கூடாதென்று கேட்டாலும் அல்லாஹ் மறுமை நாளை ஒரு போதும் ஏற்படுத்த மாட்டான் என்றார் . (இஹ்யா 4- 305 கூத்துல் குலூப் 2 – 71 )

அல்லாஹ்வையே மிஞ்சி விட்ட வல்லமை பெற்றதாக வாதிடும் இவர்கள் இறை நேசர்களா? ஷைத்தானின்பங்காளிகளா ? மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் .

வழிகேடு 3 :ஷிர்க் - இணை வைப்பை இபாதத் என்று கூறும் ஸூபித்துவம் .
அப்துல் கனி அந்நாபிலிஸி எனும் சூபிப் பெரியார் ?? ஷிர்க் சம்பந்தமாக எப்பபடி விளக்குகின்றார் பாருங்கள்! ..
'ஷிர்க் என்பது இரு வகைப்படும் தெளிவான ஷிர்க், மறைவான ஷிர்க். தெளிவான ஷிர்க் என்பது அல்லாஹ்வுடன் வேறொருவர் இருப்பதாக எண்ணுவதாகும் . அல்லாஹ் பார்ப்பவன் கேட்பவன் . மனிதனும் பார்ப்பவன் கேட்பவன். எனவே ஒருவன் அல்லாஹ்வும் மனிதனும் வேறு வேறு என்று நினைத்தால் அவன் பார்த்தல், கேட்டல் போன்ற பண்புகளில் அல்லாஹ்வுக்கு இணையான இன்னொன்றை ஆக்கிவிட்டார். . ( றிஸாலத்து அர்ஸலான் 75 ,76 )
இது தான் சூபித்துவ சிந்தனையின் அச்சாணி, எல்லாம் ஒன்றே என்பதே சூபித்துவவாதிகளின் தௌஹீத் முழக்கமாகும் . மூளையுள்ளவர்கள் - பாமரர்களாயினும் இது சுத்தப் பிதற்றல் போதையில் ஏற்படும் உளரல்கள் என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும் . தம் மூளையினை சூபிகளுக்கு காணிக்கையாகச் செலுத்தி காலில் விழுந்து சாஷ்ட்டாங்கம் செய்தவர்கள் பல்லறிவு மேதைகளாயினும் இது அவர்களுக்குத் தெரியப்போவதில்லை .(அல்லாஹ் வழி கெட விரும்பியவர்களுக்கு நேர்வழிகாட்ட யாரால் முடியும் ??)2-பாலியல் அராஜகம் , காம லீலைகள் புரியும் ஸூபிகள் .

அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி எனும் சூபித்துவப் பித்தன் தனது தபகாதுஸ்ஷஃரானீ எனும்நூலில் எழுதியிருப்பதாவது ...
'எனது தலைவர் குருநாதர் அலீ வஹீஸ் என்பவர்கள் மிகப் பெரும் சூபி மகானாவார்கள். அவர்களுக்கு மிகப் பெரும் கராமத்துகள் நடந்துள்ளன . அவருக்கு ஒரு கடையிருந்தது. அக்கடை மக்கள் எவரும் அருகே நெருங்க முடியாதபடி துர்வாடை வீசிக் கொண்டிருந்தது . காரணம் தெருவில் கிடக்கும் செத்த நாய், ஆடு போன்றவற்றையெல்லாம் இழுத்துக் கொண்டு வந்து இவர் தனது கடைக்குள் போட்டு விடுவார் . எவருமே அவரை நெருங்க முடியாதவாறு அவரிடமும் துர்நாற்றம் வீசும். ஒரு முறை அவர் மஸ்ஜிதுக்குச் செல்ல விரும்பினார் . செல்லும் வழியில் நாய்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்ட நீர்ப்பாத்திரத்தைக் கண்டு அதிலேயே ஒழுச் செய்தார் . பின்னர் கிழட்டுக் கழுதையொன்றுடன் பாலியல் புணர்ச்சி செய்தார் .

'மேற்படி மகானவர்கள் பெண்களையோ விடலைச் சிறுவர்களையோ கண்டால் அவர்களது பின்புறத்திலே கையால் தடவி கூச்சங்காட்டி தனது காமப் பசியைச் தீர்க்க வருமாறு அழைப்பார் . அவர்கள் அவ்வூர்த் தலைவர், அமைச்சருடைய மனைவியாகிலும் சரியே . அப்பெண்ணின் தந்தையின் முன்னிலையிலேயும் இப்படிச் செய்யத் தவற மாட்டார் . மற்ற மக்கள் பார்ப்பார்களே என்பதைக் கண்டு கொள்ளவே மாட்டார் .


'மேற்படி ஷேக் ஊர்த் தலைவரையோ முக்கிய பிரமுகர்களையா கண்டால் அவர்களைக் கழுதையிலிருந்து இறக்கி ' நீ கடிவாளத்தைப் பிடித்துக் கொள்'; என்று கூறிக் கழுதையுடன் பாலியல் லீலையில் ஈடுபடுவார் . அவர்கள் இவரது ஆசைக்கு இணங்க மறுத்தால் அதே இடத்திலேயே சபித்து தரையுடன் சேர்த்து ஆணியறைந்து விடுவார் .அதன் பின் அவர்களால் அவ்விடத்தை விட்டும் நகரவும் முடியாது . ( ஹகீக்கதுஸ் ஸூபிய்யா ப 439)

3- இபாதத்களைக் கொச்சைப் படுத்தும் ஸூபிகள் .

புஸ்தாம் நகரில் மக்கள் மத்தியில் நன் மதிப்புப் பெற்ற ஒரு வணக்கவாளி இருந்தார். இவர் அபூ யஸீத் அல் புஸ்தாமியின் மஜ்லிஸில் தவறாமல் கலந்து கொள்பவராக இருந்தார் . ஒரு நாள் இவர் அபூ யஸீதிடம் ஷேக் அவர்களே .. நான் முப்பது வருடங்களாகத் தினமும் விடாமல் நோன்பு நோற்று வருகின்றேன் . இரவு முழுக்க தூங்காமல் நின்று இறை வணக்கம் செய்கின்றேன் . அப்படியிருந்தும் உங்களிடமுள்ள மெஞ்ஞான அறிவு எனக்குக் கிடைக்கவில்லையே! என்று ஆதங்கப்பட்டார் அதற்கு அபூ யஸீத் ' நீ முன்னூறு வருடங்கள் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்கினாலும் இந்த மெஞ்ஞானம் உனக்குக் கிடைக்காது என்று கூற அவர் ஏன் ? என வின வினார் .
அதற்கவர் உன்னைச் சுற்றி சுயநலம் எனும் திரை இருக்கின்றது (அதாவது வணக்க வழிபாடுகளை உனக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்ற தன்னலம் கருதும் எண்ணத்துடன் செய்கின்றாய். நன்மையும் வேண்டாம் சுவனமும் வேண்டாம் இறைக்காதலே வேண்டும் எனும் எண்ணம் உன்னிடமில்லை என்றார் . அதற்கு அவர் அப்படியாயின் அதனை நீக்க ஏதேனும் மருந்துண்டா ? என வினவ,
உண்டு . ஆனால் நீ அதனை ஏற்றுக் கொள்ளமாட்டாய் என்றார் . இல்லை ஏற்றுக் கொள்வேனென அவர் அடம்பிடிக்க இவர் இவ்வாறு கூறுகின்றார்.. ... நீ இப்படியே சவரக் கடைக்குச் சென்று உன் தலை முடியையும் தாடியையும் மழித்துக் கொள் . உனது இந்த உடையைக் களைந்து விட்டு ஒரு போர்வையை உடுத்திக் கொள் . உன் கழுத்தில் ஒரு தோல்ப் பையைத் தொங்க விட்டு அதனுள் தானியங்களைப் போட்டுக் கொண்டு சந்தைக்குச் சென்று சிறுவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு ' எனக்கு நீங்கள் ஒரு முறை முகத்தில் அறைந்தால், கல்லால் எறிந்தால் ஒரு பருப்புத் தருவேன் என்று கூறிக் கொண்டு அவர்கள் கற்களினால் எறியும் நிலையிலேயே உனக்குத் தெரிந்தவர்கள் இருக்குமிடமெல்லாம் செல் என்றார் .
இதனைக் கேட்ட அவர் ' ஸூப்ஹானல்லாஹ் இதெப்படி முடியுமென்றார் .அதற்கவர் . நீ ஸூப்ஹானல்லாஹ் என்று கூறியது ஷிர்க்காகும். ஏனெனில் உன்னையே நீ தூய்மைப்படுத்தினாய் அல்லாஹ்வையல்ல என்றார் .

இச்சம்பவத்தைத் தனது நூலில் கூறும் கஸ்ஸாலி 'தான் செய்த அமலினால் தற்பெருமை கொள்வோருக்கு இப்படியான மருந்துகளே பயன் தரும் . இந்த மருந்தைப் பாவிக்க முடியாதவன் இது மருந்தல்ல என்று எங்ஙனம் மறுக்க முடியும் ? என வினாவெழுப்புகின்றார்.  (இஹ்யா உலூமுத்தீன்2-456 )

இச்சம்பவத்திலுள்ள மார்க்க முரண்பாடுகளை வரிவரியாக விளக்க ஆரம்பித்தால் பல பக்கங்கள் வீணாகிவிடும் என்பதால் விமர்சனத்தை வாசகர்களுக்கே விட்டு விடுகின்றேன் .

சூபித்துவக் கிறுக்கன் ஷஃரானி மேலும் கூறுவதாவது .. இப்றாஹீம் உஸைபீர் என்பவரும் பிரபல சூபிமகானாவார்கள் . அன்னாருக்கு கஷ்ப் எனும் ஞானம் கொடுக்கப்பட்டிருந்தது . அவர்கள் சீறுநீர் கழித்தால் அது பால்ப்போல் வெண்மையாயிருக்கும் . அவர்களுக்கு சிலவேளை ஞானம் முற்றி விட்டால் முகத்தில் மொய்த்திருக்கும் கொசுவுடனும் பேச ஆரம்பித்து விடுவார்கள் . பள்ளியில் முஅத்தினின் அதானோசையைக் கேட்டால் அவருக்குக் கல்லால் எறிந்து 'நாயே.. நாங்களென்ன காபிர்களா? எங்களுக்கு அதான் சொல்கின்றாயே' .. என்பார்கள் . என்னைப் பொறுத்த வரைக்கும் கிறிஷ்த்தவர்களைப் போன்று ஆட்டிறைச்சி வகைகள் உண்ணாமலிருப்பவனே உண்மையில் நோன்பு நோற்றவனாவான் .ஆடு,கோழி இறைச்சி வகையறாக்களை உண்பவன் நோக்கும் நோன்பு நோன்பேயில்லை என்று கூறுவார்கள்.குதிரையின் சாணத்தைக் குவித்து வைத்து அதன் மீதே தினமும் அவர்கள் உறங்குவார்கள் . . (தபகாத்துஸ் ஷஃரானிய் 2-140 )

4-பல உருவங்களில் அவதாரம் எடுக்கும் வழி கெட்ட சூபிகள் .

ஸெய்யித் முஹம்மத் குலைறி என்பவர்களும் மிகப் பெரும் சூபி மகானாகும். ஒரு முறை குத்பாப் பேருரை நிகழ்த்துமாறு மக்கள் இவரை அழைத்தனர் . உடனே இவர் மிம்பரில் ஏறி ' உங்களின் வணக்கத்துக்குத் தகுதியானவன் இப்லீஸைத் தவிர வேறெவருமில்லையென்று நான் சாட்சி கூறுகின்றேன' என்றார் . இதனைக் கேட்ட மக்கள் குப்ர் .. குப்ர் .. என்று கோசமிட்டனர் உடனே இவர் கீழே இறங்கி வாளை உருவிக் கொண்டு குப்ர் என்று சொன்ன மக்களை நோக்கி ஓடி வர அவர்கள் பள்ளியை விட்டு விரண்டோடினார்கள். மீண்டும் அவர் திரும்பி வந்து தனிமையிலேயே மிம்பரில் அஸர்த் தொழுகை வரைக்கும் நின்று கொண்டிருந்தார் . பின் அவ்வூர்ப் பிரமுகர்கள் சிலர் வந்து அவரிடம் சமாதானம் பேசி வழிக்குக் கொண்டு வந்தனர். பின்னர் அக்கம்பக்க ஊர்களுக்கு இச்செய்தி பரவிய போது அவ்வூரவர்கள் மேற்படி ஷேய்க் தமது ஊரில் அதே தினம், அதே நேரத்தில் குத்பா ஓதியதாக வாதிட்டனர். இவ்வாறு கணக்கிட்ட போது முப்பது ஊர்களின் முப்பது இடங்களில் அதே நாள் அதே நேரத்தில் இவர் கொத்பா ஒதியிருந்தமை தெரிய வந்தது . ஆனால் அவர் எங்களூரில் எங்கள் கண்ணெதிரேயே மிம்பரில் இருந்து கொண்டிருக்கக் கண்டோம் . . . (ஸூபிய்யா பீ மீஸானிஸ் ஸூன்னா 20)

அல்லாஹ் தான் அனுப்பிய எந்த நபிக்குமே இவ்வாறானதொரு அதிசயத்தைக் கொடுக்க வில்லை. இது உன்மையெனில் நபியவர்களுக்கு எப்போதாவது இப்படி நிகழ்ந்துள்ளதா? சிந்தியுங்கள் அவர்களுக்கு எப்படியான இக்கட்டான நிலைகளெல்லாம் ஏற்பட்டன இப்படி உருமாறி ஒரே நேரத்தில் பல இடங்களிலும் தோன்றும் விடயம் உன்மையெனில் சாத்தியமெனில் ஒரே நேரத்தில் உலகின் பல இடங்களுக்கும் சென்று இஸ்லாத்தைப் பரப்பியிருக்க முடியுமே ? அந்த இடங்களுக்கெல்லாம் தோழர்களை அனுப்ப வேண்டியதில்லையே? .
எனவே அல்லாஹ்வால் அருளப்பட்ட பகுத்தறிவில் அணுவளவேனும் பாக்கி வைத்திருக்கக்கூடிய ஒருவன் கூட இவ்வாறான செய்திகளை உண்மைப்படுத்த மாட்டான் . வழிகெட்ட சூபிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு பகுத்தறிவை மகான்களுக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்ட மூளையற்றவர்கள் வேண்டுமானால் இவ்வாறான விடயங்களை உண்மைப்படுத்தலாம் இவ்விடயம் ஒன்றில் திட்டமிடப்பட்ட வெறும் ஏமாற்று வேலையாக இருக்கும் . இல்லாவிடில் சைய்த்தான்களின் உதவியுடன் செய்யப்படும் செட்டப்பாக இருக்க வேண்டும் .சூபிகள் தமது இலக்கை அடைவதற்காக செய்த்தானுக்கு சிரம் பணிந்து சாஷட்டாங்கம் செய்யவும் தயங்கமாட்டார்கள்.

5-குர்ஆன் ஹதீஸ் சட்டங்களை மறுக்கும் சூபித்துவம் .

ஸூபிகள் அல்குர்ஆனைப் பொறுத்த வரைக்கும் அது அல்லாஹ்வுடையது என்று ஏற்றுக் கொண்டாலும் அதன் சட்டங்களை மறுப்பதற்கு – நடைமுறைப் படுத்தாமல் புறக்கணிக்க இரண்டு வழிகளைக் கையாள்கின்றனர் .
- குர்ஆனின் சட்ட திட்டங்கள் அனைத்துமே அடிமட்டத்திலுள்ள- அல்லாஹ்வை நன்கு அறியாத பாமர மக்களுக்காகவே சொல்லப்பட்டிருக்கின்றன. உண்மையான மெஞ்ஞான அறிவைப்பெற்ற சூபி மகான்கள் எவ்வித வணக்க வழிபாடுகளும் செய்ய வேண்டியதில்லை, அவர்கள் சரீஅத் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டியதுமில்லை என்பார்கள் .
இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டவைகள் அனைத்தும் இவர்களுக்கு ஹலாலாகும் . மது மாது உற்பட அனைத்துமே இவர்களைப் பொறுத்த வரைக்கும் இபாதத்கள் என்ற குப்ரான கருத்தைக் கொண்டிருக்கின்றனர் . அப்படியானால் முஹம்மத் (ஸல்) உற்பட அனைத்து நபிமார்களுமே இறுதி மூச்சு வரை தொழுது கொண்டுதானே இருந்தார்கள்? நபியவர்கள் மரணப் படுக்கையிலிருக்கும் போது கூட தமது தோழர்களின் உதவியுடன் இரு புறமும் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொள்ள பள்ளிக்குச் சென்று தொழுதார்களே அவர்களது வாழ்க்கை பற்றி அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா 'நபியவர்களின் பண்புகள் அனைத்தும் குர்ஆனாகவே – குர்ஆனுக்கேற்பவே இருந்தது' என்று கூறியுள்ளார்களே ... அப்படியாயின் நபியவர்கள் அடிமட்ட பாமர மனிதரா ? அவர்களுக்கு இந்த மெஞ்ஞானம் கிடைக்கவில்லையா என்று கேட்டால் அதற்குத் தரும் பதில் குப்ரின் மேல் குப்ராகவே இருக்கின்றது . ஆம் அவர்கள் சொல்கின்றார்கள்; நபிமார்களுக்கு இந்த மெஞ்ஞானம் கொடுக்கப் படவில்லைதான். நபிமார்கள் மெஞ்ஞானம் எனும் அறிவுக் கடலின் கரையிலேயே நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் சூபிகளான நாங்களோ அந்த மெஞ்ஞானத்தின் ஆழ்கடல் வரைக்கும் சென்று மூழ்கியிருக்கின்றோம் என்கின்றனர். ஆதாரம் : (சூபித்துவத்தின் சுய ரூபம் 450.)

-அல்குர்ஆன் போதனைகளை மறுக்க இவர்கள் கடைப்பிடிக்கும் அடுத்த யுக்தி அல்குர்ஆனுக்கு உள் அர்த்தம் வெளி அர்த்தம் என இரண்டு வகையான அர்த்தங்கள் உள்ளன என வாதிடுகின்றனர் . சாதாரண அறிஞர்கள் இதன் உள் அர்த்தங்களை அறிந்து கொள்ள மாட்டார்கள் . சூபித்துவ மெஞ்ஞான மேதைகளுக்கே?? இதன் உண்மை அர்த்தம் புலப்படும் என்று கதையளக்கின்றனர் .
உதாரணத்திற்கு மூஸா நபிக்கு அல்லாஹ் நபித்துவத்தை வழங்கிய வேளை 'உனது இரு காலணிகளையும் கழட்டு ஏனெனில் நீ புனிதமான ஒரு இடத்தில் இருக்கின்றாய்' என்றான் இங்கு 'இரண்டு காலணிகளையும் ' என்பதற்கு அர்த்தம் உலக ஆசை, சொர்க்கத்து ஆசை ஆகியவற்றைக் களைந்து விடு என்பதாகும் என வாதிடுகின்றனர்.
அதே போன்று நபி இப்றாஹீம் அவர்கள் பிரார்த்திக்கும் போது 'என்னையும் என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாற்றுவாயாக என்று பிரார்த்தித்தார்கள் . அதற்கு விளக்கமளிக்கும் சூபிகள் 'சிலைகள் என்பதன் அர்த்தம் தங்கம் வெள்ளி போன்றவற்றிலுள்ள உலக மோகம்தான், மாறாக உண்மையில் சிலை வணக்கத்தை விட்டும் அவர்கள் பாதுகாப்புத் தேடவில்லை ஏனெனில் சிலையும் அல்லாஹ்தான் என உளறுகின்றனர்.. (நூல் : சூபித்துவமும் கஸ்ஸாலியும் ப: 131 )

அல்லாஹ்வின் அன்பு மாத்திரம் தான் உள்ளத்தில் இருக்க வேண்டுமென வாதிடும் இந்தப் போக்கிரிகளின் கருத்துப்படி தங்கம் வெள்ளி உலக வஸ்த்துக்கள் கூட அல்லாஹ்தானே? பிறகு ஏன் அவற்றின் ஆசை மனதில் இருக்கக் கூடாது .? அவற்றை வெறுக்க வேண்டுமென பிரச்சாரம் எதற்கு? அல்லாஹ்வுக்கே வெளிச்சம்!! .

அவ்வாறே நபி (ஸல் ) அவர்களுடைய ஹதீஸ்களை, பொன் மொழிகளை மறுப்பதற்கு இந்தக் கயவர்கள் மற்றுமொரு யுக்தியைக் கையாள்கின்றனர் . இது பற்றி பிரபல சூபித்துவப் பித்தனும் கிறுக்கனுமாகிய இப்னு அறபி இவ்வாறு உளறுகின்றான்.......
'எத்தனையோ ஹதீஸ்கள் அவற்றின் அறிவிப்பாளர்கள் வரிசையைப் பார்க்கும் போது அவை ஸஹீஹானதாக, ஏற்றுக்கொள்ளக் கூடிய அமைப்பில் உள்ளன. (அதன்படி மக்கள் அமல் செய்து கொண்டும் இருக்கின்றனர்.) ஆனால் துன்யா மோகம் எனும் போலித்திரைகள் நீக்கப்பட்ட சூபிகளில் ஒருவர் தனது கஷ்புடைய நிலையில் ஞானப் பார்வையால் நபியவர்களைச் சந்திப்பார் . அவர்களிடத்தில் இந்த ஹதீஸ் பற்றிக் கேட்ட போது நபியவர்கள் நான் அப்படியொரு ஹதீஸைச் சொல்லவில்லையே அப்படியொரு தீர்ப்பை வழங்க வில்லையே எனக் கூறி மறுத்து விடுவார்கள். எனவே அந்த சூபிமகான் இந்த ஹதீஸ் போலியானது, பலவீனமானது என்பதை அல்லாஹ்விடமிருந்து நபி மூலம் நேரடியாகக் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் அறிந்து கொண்டு அதன்படி செயற்படுவதை விட்டு விடுவார் . எனினும் பாமரர்கள் (அதாவது ஹதீஸ் கலை அறிஞர்கள்) அதன் அறிவிப்பாளர் வரிசை சரியாக உள்ளதே என்பதை மாத்திரம் பார்த்துக் கொண்டு அதன்படி அமல்ச் செய்து கொண்டிருப்பார்கள். யதார்த்தத்தில் உண்மை அதுவல்ல . (நூல் : குர்ஆன் தராசில் சூபித்துவம் ப: 17)

எனவேதான் சூபிகள் மார்க்கம் எனும் போர்வையில் தமது நச்சுக் கருத்துக்களைப் பரப்புவதற்கு ஏதுவாக தாம் அறிவை அல்லாஹ்விடமிருந்தும் நபி (ஸல்) அவர்களிடமிருந்தும் நேரடியாக தகவல்களை எடுப்பதாக நாடகமாடுகின்றனர் . 'ஹத்த தனீ கல்பீ அன் றப்பீ' என்னுள்ளம் எனது இறைவன் சொன்னதாக அறிவிக்கின்றது ... என்று ஆரம்பித்து தம் விசக் கருத்தை மக்கள் மத்தியில் விதைப்பார்கள் .

இது பற்றி பிரபல வழிகேடன் இப்னு அறபி பேசுகையில்..
எங்களில் சிலர் நபியவர்களின் பிரதிநிதியாவார்கள். தமக்குக் தேவையான சட்டங்களை நேரடியாக நபியவர்களைச் சந்தித்துக் கேட்டறிந்து கொள்வார்கள், அல்லது தமது சுய ஆராய்ச்சியின் மூலம் அதற்குத் தீர்வு கண்டு கொள்வார்கள்.. எங்களில் இன்னும் சிலர் நேரடியாக அல்லாஹ்விடமிருந்தே தமக்குத் தேவையான சட்டங்களை எடுத்துக் கொள்கின்றனர் .இவர்கள் உலகிலுள்ள அல்லாஹ்வின் பிரதிநிதியாவார்கள். (ஆதாரம் தபகாத்துஸ் ஷஃரானி-- சூபித்துவம் குர்ஆன்தராசில் 31 )

6– உலகத்தையே ஆட்சிசெய்யும் 'ஸூபி ராஜ்ஜியம்'.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையே கடித்த குள்ள நரி என்ற முதுமொழிக்கேற்ப இந்த மதி கெட்ட சூபிகள் இஸ்லாத்தின் ஒவ்வொரு தூண்களிலும் சிறிது சிறிதாகக் கை வைத்து ஆட்டங்காணச் செய்து முதற்கட்டமாக தாம் இறை நேசச்செல்வர்கள் என்று புருடா விட்டு அதற்கப்பால் தமக்குக் கராமத் இருப்பதாகக் கூறி நபிமார்களுக்கு அல்லாஹ் கொடுத்த முஃஜிஸா அற்புதங்களைத் தோற்கடிக்கும் வகையில் போலி அற்புதங்களைப் புனைந்து, அதற்கப்பால் ஒரு படி மேலே சென்று நபிமார்களை விடவும் தாம் உயர்ந்தவர்கள் என்று வாதாடி இறுதியில் அல்லாஹ்வையே நாங்கள் தோற்கடித்து விரட்டி விட்டு அவனிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைப் பறித்துக் கொண்டோம். என்று சொல்வதைப் போன்று அல்லாஹ்வுக்குரிய அனைத்து வல்லமைகள் அதிகாரங்கள் அனைத்தும் தமக்கும் இருப்பதாக வாதிக்கும் நிலைக்கு வந்து விட்டனர் .
இதனை சிலர் நம்பாமல் இருக்கலாம் . ஏற்க மறுக்கலாம். அதற்காகத்தான் அவர்கள் கூறும் சில அதிசய நிகழ்வுகளை மாத்திரம் தொட்டுக் காட்டுகின்றேன் . புட்டுக் காட்டுவதானால் அதற்கே தனியாக பெரியதொரு புத்தகம் எழுத வேண்டியிருக்கும் . இச்சம்பவங்களை சில சூபித்துவ பக்தர்கள் ஆதார மற்றவை, மகான்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டவை என்று கூடக் கூறலாம் . ஆனால் இச்சம்பவங்கள் உண்மையா? என்று ஆராய்ந்தறிவதில் அர்த்தமில்லை. காரணம் இவற்றில் அனேக சம்பவங்களில் இடம்பெறும் பாத்திரங்களுக்கு முகவரியேயில்லை. என்றாலும் இச்சம்பவங்கள் அவர்களது புத்தகங்களில் உள்ளன. அவர்களால் போதிக்கப்படுகின்றன. அதற்கும் மேலாக அவர்களிடம் இந்த நம்பிக்கை புரையோடிப்போய் அவர்களின் இதயங்களில் சங்கமித்து நிற்கின்றன . அவற்றை இவர்கள் வெளிப்படையாகவே பேசுகின்றனர், பிரச்சாரம் செய்கின்றனர் . எனவே அல்லாஹ்வின் சக்திகள் அனைத்தும் தமக்கும் இருப்பதாக சூபிகள் வாதிக்கின்றனர் என்பதை நிரூபிக்கவே பின்வரும் நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றேன் ...
1- இப்படியும் பிள்ளை வரம்.

ஞான வழி நடந்த இறைநேசச் செல்வர்களில் ஒருவரிடத்தில் ஒருவர் வந்து தனக்காக ஒரு ஆண் குழந்தை கிடைக்க இறைவனிடம் துஆச் செய்யுமாறு வேண்டினார் . அதற்கு ஷேக் அவர்கள் 'அதற்காக பெருந்தொகைப் பணம் செலவாகுமே ஒரு தொகைத் தங்கக் காசுகள் ஸதகாச் செய்வதற்காக எனக்குத் தர வேண்டும் என்றார். அதற்குச் சம்மதித்த அவர் சொன்னபடி பணமுடிச்சைக் கொண்டு வந்து கொடுத்தார் . அதன் பின் ஆண் குழந்தை கிடைப்பதற்காக துஆச் செய்தார் . ஆனால் அவருக்குப் பெண்குழந்தையே பிறந்தது . இதனால் ஆச்சரியப்பட்ட அவர் ஷேக் அவர்களே!! ஆண்குழந்தை கிடைக்குமென்றீர்களே பெண் குழந்தை தானே பிறந்துள்ளது என்றார் . இதைக் கேட்ட ஷேக் 'நீ தரவேண்டிய பணத்தில் குறைபாடு செய்து விட்டாய் , அதனால் உனக்குக் கிடைத்த குழந்தையிலும் குறை ஏற்பட்டு விட்டது' என்றார் . அதனால் கைசேதப்பட்ட அந்த நபர் ஷேக் அவர்களே உண்மை தான் . அதற்கு ஏதேனும் பரிகாரமுண்டா ? என வினவ ஆம் உண்டு. மிகுதிப்பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்றார் . உடனே அந்த மனிதர் மிகுதிப் பணத்தைத் திருப்பிக் கொடுத்ததும் ஆம் இப்போது வீட்டுக்குச் சென்று பார் என்றார். என்ன ஆச்சரியம்!! வீட்டுக்குச் சென்று பார்த்ததும் அதே பெண் குழந்தை ஆண் குழந்தையாக மாறியிருந்தது . (கஸ்பு ஸூபிய்யா 444)

2- சொர்க்கத்தை விற்பனை செய்யும் சூபிகள்.
ஷேக் மத்யன் அஹ்மத் அவர்களும் பிரபல சூபி மகானாவார்கள் . ஒருமுறை அவரிடத்தில் ஒரு பெண் வந்து முப்பது பொற்காசுகளைக் கொடுத்து எனக்கு மறுமையில் சொர்க்கம் வேண்டும் என்றாள் .அதற்கவர் இத்தொகை போதாது என்றார் .இதைத் தவிர வேறெதுவும் தன்னிடம் இல்லையென்று அவள் கூறியதும் சிறிது யோசித்து விட்டு பின்னர் அவள் சுவர்க்கம் செல்வதற்குத் தான் பொறுப்பென ஒப்புக் கொண்டார் . பின்னர் அப்பெண் இறந்ததும் அவளின் உறவினர்கள் இவ்வொப்பந்தம் செல்லாது என்று கூறி அப்பணத்தைக் கேட்டு ஷேக்கிடம் வந்தார்கள் . அன்றிரவு அப்பெண் அவர்களின் கனவில் வந்து 'ஷேக் அவர்கள் வாக்குறுதியளித்தவாறு எனக்கு சொர்க்கத்தைத் தந்து விட்டார்கள் .எனவே அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்' என்றாள் .
(தபகாத்துஷ;ஷஃரானி 2-102 )

3-சூபிகளின் ராஜ்ஜியமா ? கேடிகளின் அராஜகமா?
லவ்ஹூல் மஹ்பூளில் உள்ளதை அறியும் ஸூபிகள் .
செய்யத் முஹம்மத் ஸூவைமிய் அவர்களும் பிரபல சூபித்துவ மகானாவார்கள் . அவர்களுக்கு மரண வேளை நெருங்கிய போது மலக்குல் மௌத்தானவர் அவர்களிடம் உயிரைக் கைப்பற்ற வந்தார்கள் . அதற்கு ஷேக்கவர்கள் நீர் தவறான தகவலினடிப்படையில் என்னிடம் வந்திருக்கின்றீர். எனக்கு இன்னும் அஜல் இருக்கின்றது இப்போது சென்று லவ்ஹூல் மஹ்பூள் பலகையைப்பார் என்றார். இதற்கேற்ப அவர் சென்று பார்த்தபோது இன்னும் பத்து வருடங்களுக்கு அவரது வாழ்நாள் நீடிக்கப்பட்டிருந்தது . பின் அவர்களுக்கு மரணவேளை நெருங்கிய போது தனதுமனைவியிடம் 'தனக்குப்பின் நீ எவரையும் மணக்கக் கூடாது' என்று கட்டளையிட்டார்கள் .
(அவரின் மனைவியுடன் அவர் ஒரு போதும் உடலுறவு கொள்ளாததால்) மனைவி கன்னிப் பெண்ணாகவே இருந்தார். இது பற்றி அப்பெண் உலமாக்களிடம் கேட்ட போது இச்சட்டம் நபியவர்களுக்கு மாத்திரமுள்ளது. எனவே நீ தாராளமாக மறுமணம் செய்யலாம் என்றார்கள் . இதன்படி அப்பெண் மறுமணம் செய்த போது முதலிரவில் கணவனுடன் இருந்த வேளை அந்த ஷேக் அங்கு தோன்றி அவளின் கணவனை ஈட்டியால் குத்திக் கொலை செய்துவிட்டார். அதன் பின் அப்பெண் மரணிக்கும் வரைக்கும் கன்னியாகவிருந்தே இருந்து இறந்தார். (தபகாத்துஷ்ஷஃரானி 2-103)


4-கர்ப்பத்திலுள்ளதையும், லவ்ஹூல் மஹ்பூளையும் அறிந்த சூபிமகான்.

ஜாக்கீர்கர்த்தீ என்பவர் பிரபல சூபியாவார்கள். இவர் ஒருமுறை வீதியால் செல்லும் போது பெண்கள் கூட்டமாகச் செல்வதைக் காண நேர்ந்தது . உடனே ஷேக் அவர்கள் ஒரு பெண்ணைச் சுட்டிக்காட்டி இப்பெண் காளை மாட்டின் மூலம் கர்ப்ப முற்றிருக்கின்றாள். அதன் நிறம் சிவப்பு அதன் வடிவம் இன்னது என்று சொன்னார் . பின்னர் அப்பெண் பிரசவித்த பின் காளை மாட்டின் குழந்தையை அறுக்க நேர்ச்சை செய்து அதற்கென ஒரு நபரையும் நியமித்தார் . மற்றுமொருவர் அவரிடம் வந்து தான் கடற்பயணம் செய்ய விருப்பதாகக் கூறினார் .அதற்கு அந்த மகான் கடலில் உனக்கு ஏதேனும் இன்னல்கள் ஏற்பட்டால் உடனே என் பெயரைக் கூறி அழைத்து அபயம் தேடு. நான் அபயமளிப்பேன் என்றார் . அதன் பின் ஷேக் கூறினார் . நான் ஒருவரைப் பாதுகாப்பதாக வாக்குறுதியளிப்பதென்றால் அவரின் பெயரையும் அவர் பற்றிய தகவல்களையும் லவ்ஹூல் மஹ்பூள் எனும் ஏட்டைப் பார்த்து அறிந்து கொண்டதன் பின்னரே வாக்குறுதியளிக்கின்றேன் என்றார், (தபகாத்துஷ்ஷஃரானி 2-106 )

5 -மாண்டோரை மீட்டு உயிர் கொடுக்கும் சூபி.

ஷேக் அதிய் அவர்களிடம் நான் ஒரு முறை சென்றிருந்தேன் . அப்போது வெளியூரிலிருந்து ஹூஸைன் என்பவரின் தலைமையில் ஒரு கூட்டத்தினர் அவரைச் சந்திக்க வந்திருந்தனர். அப்போது ஷேக்கவர்கள் வாருங்கள் இந்தத் தோட்டத்தைச் சுற்றி சுவரமைப்போம் என்றார் . உடனே அனைவரும் அவருடன் சென்று மலையைப் பெயர்த்துக் கற்களை எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பாறாங்கல் ஒருவர் மீது விழ அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்து அவரது உடல் சின்னாபின்னமாகி விட்டது . இதனை மக்கள் ஷேக் அவர்களிடத்தில் முறையிட்ட போது ஷேக் வானத்தின் பக்கம் கையை உயர்த்தினார். உடனே அம்மனிதர் எவ்வித மாற்றமுமின்றி முன்பிருந்தது போல் உயிர் பெற்றெழுந்தார். (ஜாமிஉன் நப்பஹானி 2- 297 )

பார்த்தீர்களா? ... இந்தச் சூபியாக்கள் எவ்வளவு தந்திரமாக பாமர மக்களின் ஈமானுடன் விளையாடியிருக்கின்றார்கள். அல்லாஹ்வின் தனிப்பட்ட வல்லமைகளில் எதையுமே விட்டு வைக்காது ஆக்கல், அழித்தல் ,காத்தல், உயிர் கொடுத்தல், பிள்ளை கொடுத்தல் உலகில் அதிகாரம் செலுத்தல் போன்ற அல்லாஹ்வின் தனிப்பட்ட வல்லமைகள் அனைத்தையும் தமக்கு இருப்பதாக வாதிக்கும் இப்போலிச் சாமியார்களை ஓட ஓட விரட்டிக் கொல்ல வேண்டும்.
இவர்களால் எத்தனை லட்சோபலட்சம் மக்கள் ஈமானை இழந்து இவர்கள் காலடியில் தவம் கிடந்து நரகச்சீட்டைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.

கராமத் காட்டுகின்றார்களாம் !!
முதலில் கராமத் எல்லாம் இப்படி இறைவனை மறுத்து நான் தான் அல்லாஹ் என்பதாக வாதிடும் ஷைத்தான்களுக்கு ஏற்படுமா? அப்படியே நடந்தாலும் அது கராமத் அல்ல, ஷைத்தானின் சூழ்ச்சி !!. இது போன்ற சூழ்ச்சிகளை இவர்களென்ன சிலை வைத்து வணங்கும் இந்துசாமிகளும், மடாதிபதிகளும் சன்னியாசிகளும் கூடச் செய்கின்றார்கள் தானே ! அப்படியெனில் அவர்களும் இறைநேசச் செல்வர்களோ?

எனவே கராமத் என்பது அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நடக்கும் நல்லடியார்களில் சிலருக்கு அல்லாஹ் தன் புறத்திலிருந்து அம்மனிதனின் எவ்வித விருப்பு வெறுப்பின்றி அவரிடம் வெளிப்படுத்தும் சிலவற்றைக் குறிக்கும் . இவ்வாறு கராமத் ஏற்படாதவர்கள் கராமத் உள்ளவர்களை விட அல்லாஹ்விடம் நெருங்கியவர்களாகவும் இருக்கலாம் . ஏனெனில் நபியவர்களுக்கடுத்து அல்லாஹ்வின் அன்புக்குரியவர்கள் ஸஹாபாக்கள். இவர்களில் அதிகம் பேருக்கு எவ்விதமான கராமத்துகளும் இடம்பெற வில்லை. ஒரு முஃமின் தனக்கு சில வேளை கராமத் நடந்தாலும் கூட அதை மறைத்து மக்கள் பார்த்து விடக் கூடாதேஎனப் பயந்து – ஒரு வேளை ஷைத்தானின் சூழ்ச்சியாக இருக்குமோ, அல்லது அல்லாஹ்வின் சோதனையாகவிருககுமோ என அஞ்சி அடக்கத்துடன் இருப்பான் இப்படித்தான் உண்மையிலேயே கராமத் கொடுக்கப்பட்ட சில நல்லடியார்கள் கூட வாழ்ந்திருக்கின்றார்கள் . இவர்கள் ஒரு வேளை அல்லாஹ் நம்மைச் சோதிப்பதற்காகத்தான் இப்படித் தந்திருக்கின்றானோ என அஞ்சி நடுங்குவார்கள். மற்றவர்கள் அதைப் பார்த்து விட்டால் பிரபலப்படுத்தி விடுவார்களேயென்று பயப்படுவார்கள் .
நபி ஸூலைமான் (அலை) அவர்களுக்கு உலகின் அனைத்தையும் வசப்படுத்தி நினைத்ததை நடத்திக் காட்டும் அற்புதத்தை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்திருந்தான் . பல்கீஸ் ராணியின் சிம்மாசனம் ஒரு நொடிப்பொழுதில் தன்னிடத்தில் இருக்கக் கண்ட அவர்கள் என்ன சொன்னார்கள் ...

'அவர் சிம்மாசனம் தன் முன்னால் இருப்பதைக் கண்டதும் நிச்சயமாக இது அல்லாஹ் எனக்கருளிய அருளாகும் .நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா ? அல்லது மாறுசெய்கின்றேனா ? என என்னைச் சோதிப்பதற்காகவே எனக்கு இதைத் தந்துள்ளான்' என்றார்கள் . (ஸூரா அந் நம்ல் 40 ம் வசனம் .)

எனவே அல்லாஹ்வுக்கு அடிபணிந்து நடக்காத – அவனுடைய வல்லமையுடன் போட்டிபோடும் இச் சூபிகளிடம் வெளிப்படுவது உண்மையில் ஷைத்தானிய சேஷ்டைகளே ! என்பது தெளிவாகின்றது . எனவே இவர்களின் சதி வலையில் வீழ்ந்து ஈமானை இழந்து விடாமல் குர்ஆன். ஹதீஸின் பக்கம் திரும்பி ஸஹாபாக்களின் வாழ்வு வாழ்ந்து இறை நேசர்களாக மரணிப்போமாக . . ஆமீன் ...


அன்றைய ஸூபித்துவமும் இன்றைய தப்லீக் ஜமாஅத்தும்.

சூபித்துவம் பற்றிய பகுதியில் அவர்களது அடிப்படைக் கொள்கைகள் பற்றி ஆராயும் போது அவர்களது சிந்தனைகள், கொள்கைகள் பற்றியெல்லாம் விரிவாக அலசவேண்டிய அவசியமில்லாத வகையில் -- லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவுக்கு அவர்கள் கொடுக்கும் அர்த்தத்தை வைத்தே அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்று முடிவு செய்து விட முடியும்..

இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறெதுவுமே இல்லையென்பதே அவர்கள் கலிமாவுக்குக் கொடுக்கும் அர்த்தமாக உள்ளது என அறிந்தோம். அதே சூபித்துவத்திலே வாழையடி வாழையாக வந்துதித்தவர்களே தப்லீக் ஜமாஅத்தின் பூர்வீக காலம் தொட்டு இன்று வரை பொறுப்பு வகிக்கும் தப்லீக்கின் முக்கியஸ்தர்கள் என்பதுதான் ஆச்சரியமிக்க உண்மை. இதனை ஜீரணிப்பது சற்று கடினம்தான். ஆனால் அதுதான் உண்மை,.
இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் தப்லீக்கின் உயர் பொறுப்பில் இருக்கும் மௌலானாக்கள், பெரியார்கள் அனைவரிடத்திலும் இதே சூபித்துவக் கொள்கை இருந்தது - இன்றும் இருக்கின்றது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதே இப்பகுதியின் முக்கிய நோக்கம். ஆனால் மூன்று நாள் நாற்பது நாள் என்றெல்லாம் வக்துக் கொடுத்து வெளிக்கிளம்பிச் செல்லும் அப்பாவி மக்களுக்கு இது பற்றியெல்லாம் எதுவும் தெரிவதில்லை. அது பற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதுமில்லை. சூபித்துவவாதிகள் எப்படி தம்மிடம் வரும் முரீதீன்களுக்கு பக்தர்களுக்கு தம்மீது முழு நம்பிக்கை வரும்வரை தமது விசக்கருத்துக்கள் எதையும் வெளியிடுவதில்லையோ அவ்வாறே இவர்களும் சாதாரண ஆரம்ப நிலையிலுள்ள தப்லீக் பக்தர்களுக்கு இது பற்றியெல்லாம் எதுவும் சொல்வதில்லை.

அவர்களுக்குத் தப்லீக்கின் அடிப்படை விதிகளான கலிமா,  தொழுகை, இல்முதிக்ரு, இக்ராம் இக்லாஸ்,  தப்லீக் ஆகியவற்றைப் பற்றி மாத்திரமே பேசப்படும். போதிக்கப்படும். தப்லீக் இயக்கத்தின் மீது மக்களுக்கு அபிமானம் ஏற்பட வேண்டுமென்பதற்காக செய்யப்பட்ட முயற்சியே இது. இந்த வழிதனிலே பல காலம் ஒருவர் பயிற்றுவிக்கப்பட்டதன் பின் ஒரு வருடம் இருவருடம் என்றெல்லாம் ஒருவர் டில்லி மர்க்கஸ், ட்ரை விந்மர்க்கஸூக்கெல்லாம் சென்றுவந்து தப்லீக்கின் மௌலானாக்கள், பெரியார்கள் மீது நீக்கமுடியாத ஒரு பிடிப்பு பற்று, அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டதன் பின்பே சூபித்துவக் கருத்துக்களைப் படிப்படியாக அவருக்குக் கற்பிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். இதையும் வெறும் கற்பனையாகவோ வாய்ப்பேச்சாகவோ நான் சொல்லவில்லை. ஆதாரப் பூர்வமாக – தகுந்த ஆதாரங்களுடன் நிருபித்துக் காட்டவுள்ளேன். குர் ஆன் ஹதீஸ் போதனைகள் எப்படியிருந்தாலும் தனக்கு தன் டில்லி பெரியார் - மௌலானா சொன்னதே சரி என்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு அங்கு அவர்களுக்கு மூளைச் சலவை இடம் பெறும். சூபித்துவப் போதனைகள் வெளிரங்கத்தில் ஆத்மீக சிந்தனையின் பக்கம் அழைப்பது போல் -- இவர்கள் தொழுகையின் பக்கம் மக்களை அழைக்கும் இயக்கம் என்று பாமரர்கள் மத்தியில் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். சந்தர்ப்பம் வரும் போதே தம் சூபித்துவக் கருத்துக்களைப் புகுத்துகின்றனர்.

பொதுவாகக்கூறின் அதிகமான சகோதரர்கள் ஏன் தப்லீக்கை ஆதரிக்கின்றார்கள்?. அதில் வெளிக்கிளம்ப விரும்புகின்றார்கள் என்று ஆராயும்போது இன்றைய பஸாதுகளும் குழப்பங்களும் நிறைந்த இந்த பித்னாவுடைய ஜமானில் குழப்பங்கள் அதிகரித்துள்ள காலகட்டத்தில் வாழும் இச்சகோதரர்கள் இஸ்லாத்தின் மீது தாம் கொண்டுள்ள பற்றின் காரணமாகவும் நபிவழிப்படி நடக்க வேண்டுமென்ற ஆர்வ மேலீட்டாலும் தமக்கு இஸ்லாமிய வழிகாட்டலை வழங்கக் கூடிய ஒருவரைத் தேட இவர்களின் மனம் விரும்புகின்றது. மேலோட்டமாகத் தேடிப் பார்க்கின்றார்கள். தப்லீக் ஜமாஅத்துத்தான் 'தீன் என்பது அல்லாஹ் வின் கட்டளையும் நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழி முறையுமாகும் இதை பூரா மனித சமூதாயத்துக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் பணியில் சொந்த பணத்தை, உடலுழைப்பை, காலத்தைத் தியாகம் செய்து உழைக்கும் ஒரு அமைப்புத்தான் தப்லீக் ஜமாஅத்' என்ற விளம்பரத்தைக் கேட்கின்றார்கள்.

அதனையடுத்து கார்க்கூன்களின் விடாமுயற்சியாலும்,  தொடர்ச்சியான சந்திப்பாலும் 3 நாட்கள் வெளிக்கிளம்பிச் செல்லச் சம்மதிக்கின்றார்கள் அங்குள்ள சூழல் அவர்களின் மனதுக்கு இதமளிப்பதாக,  மனதிலுல்ல கவலை கஷடங்களை மறக்க ஒரு நன்மருந்தாக,  தொழில் மற்றும் குடும்பச் சுமைகளை விட்டுப் பிரிந்து சுதந்திரமாக நேரத்துக்குத் தொழுது கொண்டு வேளாவேளை சாப்பிட்டுக் கொண்டு பள்ளியுடைய சூழலில் இருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம். எவருடைய தொந்தரவுமில்லை. செல்லும் இடமெல்லாம் வரவேற்பு அமோகமாயிருக்கின்றது. சண்டை சச்சரவு பிரச்சினைக்குரிய எந்த விடயங்களிலும் தலையிடுவதில்லை. இப்படியான ஒரு சூழல் தப்லீக்கில் கிடைப்பதால் இதையே எதிர்பார்த்திருந்த அதிக வேலைப்பளுமிக்க வாழ்க்கையால் விரக்தியுற்றிருந்த பாமர சகோதரர்கள் இதை நேசித்து இதன்பால் லயித்து விடுகின்றனர் இதனால் இந்த அமைப்பில் உள்ள மார்க்க முறண்பாடுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தவறி விடுகின்றனர் இதில் அதிகம் பேர் மார்க்மென்றால் என்னவென்று பெரிதாக அறியாத நிலையிலேயே -- அறிந்து கொள்ளும் நோக்கிலேயே தப்லீக்கில் காலடியெடுத்து வைக்கின்றனர். எனவே இதிலுள்ள குறைகளை அறிவது ஒருபக்கமிருக்க அவைதான் இஸ்லாம் என்று அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதால் அப்படியே அவற்றை ஏற்றுக் கொள்கின்றனர். அதன் முக்கியஸ்தர்கள் கூட அடிக்கடி தமது பயான்களில் 'இந்த வேலையில் குறை பிடிக்க முற்படுபவர் வேலையை விட்டும் தூரமாக்கப்படுவார். பின்னர் தீனிலிருந்தே தூரமாக்கப்பட்டு விடுவார் என்று அடிக்கடி எச்சரிப்பதால் பயம் காட்டுவதால் அதிக அப்பாவிப் பாமர மக்கள் இதைப் பற்றி ஆராய்வதற்கே அச்சம் கொண்டு தானும் ஒரு வேளை அவர்கள் சொல்வது போல் தீனை விட்டும் தூரமாகி விடுவோமோ எனப் பயந்து 'தலைவன் எவ்வழியோ தானும் அவ் வழியே ' என்ற கோஷத்துடன் நடை பயில ஆரம்பித்து விடுகின்றனர். அதனால் யாரேனும் இதைப்பற்றி இதன் குறைகளைப் பற்றி அவரிடம் எடுத்துச் சொன்னாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்வதில்லை.

இதனாலேயே இன்று தப்லீக் அமைப்பு பாமர மக்களின் ஹீரோவாகச் செல்வாக்குப் பெற்று பல நாடுகளிலும் வியாபித்துக் காணப்படுகின்றது.

அறபுக்கள் கூட இதற்கு ஆதரவளிப்பது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அரபுக்கள் என்ன மலக்குகளா ? நபிமார்களா ? அவர்களும் மனிதர்களே. . எம்மை விடவும் மார்க்க அறிவில் மட்டமான நிலையிலுள்ள – ஏன்..பாத்திஹா ஸூராவே ஒழுங்காக ஓதத் தெரியாத அறபுகளும் நிறையவே இருக்கின்றனர்.. அறபுக்களில் ஒரு சில சகோதரர்கள் இதில் மும்முரமாக ஈடுபடுவது உண்மை தான். அதனால் அது மார்க்க அங்கீகாரம் பெற்றுவிடுமா ? அப்படியானால் அறபிகளுக்கு எதற்காக அல்லாஹ் நபியை அனுப்ப வேண்டும். ??? அவர்கள்தான் மேதைகளாச்சே. ..
ஆக தப்லீக் அமைப்பு இன்று அகலமாக வளர்ந்துள்ளது,  ஆனால் ஆழமாக வளர வில்லையென்பதே உண்மை.

இன்று தப்லீக்கில் ஈடுபாடு கொண்டுள்ள எம் சகோதரர்களுக்கு இக்கருத்துக்கள் ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் தரலாம். இதனையெல்லாம் ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். ஆனால் உண்மையை அறிய விரும்புபவர் நடுநிலையாக இதில் கூறுப்படும் கருத்துக்களை தப்லீக் அமைப்புடன் ஒப்பீடு செய்து ஆராயும் போது இன்ஷ அல்லாஹ் உண்மை புலப்படும். உண்மைக்கு உறக்கம் கிடையாது. ஆனால் அதை விரும்பாதவர்க்கு அது எளிதில் புலப்படாது. அதற்காகத்தான் தப்லீக் ஜமாஅத்தின் வெளிப்படையான,  ரகசியமான அனைத்து நடவடிக்கைகளையும் -- அவற்றில் குர்ஆன் ஹதீதுக்கு முரண்பாடு எந்த விதத்தில் உள்ளன என்பதையும் ஆதாரப்பூர்வமாக எடுத்துக் காட்டுகின்றேன்.

இன்னும் ஒருசிலர் 'தப்லீக்கில் குறைபாடு இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும். எதில்தான் குறைபாடு இல்லை. குறைகளை விட்டு விட்டு நிறைய நல்ல விடயங்கள் இருக்கின்றன அவற்றை எடுத்து நடப்போமே' என்று நடுநிலைவாதம் பேசுகின்றனர் இவ்வாதமும் அர்த்தமற்ற வாதமே. உலகிலுள்ள எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அதிலே அவற்றில் சமூகத்துக்கு நன்மை தீமை இரண்டுமே இருக்கத்தான் செய்கின்றன. மது பானத்தில் கூட நன்மையும் இருப்பதாகவே அல்குர்ஆன் சொல்கின்றது.

'நபியே நீங்கள் சொல்லுங்கள் அதிலே (சாராயத்தில்) அதிகம் தீங்கிருக்கின்றது,  அத்துடன் அதில் மக்களுக்கு நன்மையுமிருக்கின்றது. அதனால் ஏற்படும் தீமை அதன் நன்மையை விட மிக அதிகமாகும்' எனக் கூறுகின்றது. (ஸூரத்துல் பகரா 219).

எனவே நன்மை இருக்கின்றதென்பதால் ஒரு விடயத்தை நல்லதென நியாயப்படுத்த முடியாது. அதனால் ஏற்படும் விபரீதம் தீமை எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் தீர ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும். அந்த வகையில் நான் சூபிகளிடம் இருப்பதாகக் கூறிய இஸ்லாத்தைத் தகர்த்தெறியும் ஷிர்க்கான- இஸ்லாமிய அகீதாவைக் குழிதோண்டிப் புதைக்கும் குப்ரான விடயங்கள் அனைத்துமே இதன் ஸ்தாபகர்களான ட்ரைவிந் மர்கஸ் மௌலானாக்களிடமும், டில்லிப் பெரியார்களிடமும் இருக்கின்றன. அதையும் ஆதாரப் பூர்வமாக நிரூபித்துக் காட்டவுள்ளேன்.

அதே போன்று ஆறு நம்பருடைய வாழ்க்கை பூரா மக்களிடமும் வரவேண்டுமென்பதில் ஒரே குறியாக இருக்கும் இப்பெரியார்கள் அந்த ஆறு நம்பர்களையும் மாத்திரம் எடுத்து ஏனைய இஸ்லாமிய விடயங்களை எவ்வளவு சாதூர்யமாகப் புறந்தள்ளுகின்றனர் என்பதையும் ஆறு நம்பரிலுள்ள விடயங்கள் வெளிப்படையில் நல்லவைகளாகத் தோன்றினாலும் அதற்கு அவர்கள் கொடுக்கும் வியாக்கியானம் எந்தளவு குறுகிய வட்டத்தில் உள்ளது என்பதையும் முடிந்தளவு ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தவுள்ளேன். அதுமட்டுமின்றி சூபிகளின் கொள்கைகளை அப்படியே அச்சொட்டாகப் பின்பற்றும் இவர்களிடம் இபாதத்களாகக் கருதப்பட்டு வரும் ஏராளமான மார்க்க விரோத விடயங்களையும் முடிந்தளவு சுருக்கமாகத் தெளிவு படுத்த விரைகின்றேன்.

தப்லீக் சகோதரர்கள் அனைவரினதும் ஒருமித்த வாதம் என்னவென்றால் சில வழி கெட்ட கூட்டத்தினர் இந்த நபிமார்கள் செய்து வந்த மகத்தான வேலையைப் பற்றி இல்லாதது பொல்லாதததையெல்லாம் சொல்லுவார்கள். அவையெல்லாமே அவர்களின் பொறாமையின் வெளிப்பாடு. இந்த ஹக்கான வேலையின் பரக்கத்தால் எத்தனை லட்சம் பேர் நேர்வழி பெற்றிருக்கின்றார்கள். குடியும் போதையுமாக இருந்த எத்தனை பேர் நல்ல மனிதர்களாகியிருக்கின்றார்கள். ஒரு கையில் வெட்டரிவாளும் மறுகையில் சாராய போத்தலுமாக அலைந்த ஆயிரக் கணக்காணோர் இன்று ஒரு கையில் தஸ்பீஹ் மணியும் மறுகையில் மிஸ்வாக் குச்சியுடனும் காட்சி தருகின்றார்கள். எத்தனை ஆயிரம் பூட்டிக்கிடந்த பள்ளிகள் உயிர்ப்பிக்கப்பட்டு இன்று இபாதத்களால் ஜொலிக்கின்றன. முஸ்லிம் பெண்களிடத்தில் பர்தாவுடைய வாழ்வு வந்திருக்கின்றது. கலிமாச் சொல்வதற்கே தெரியாத எத்தனையோபேர் இன்று திருந்தி இஸ்லாமிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இது அல் லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயக்கம் என்பதற்கு இதன் தீவிர வளர்ச்சியே சான்றென்று அடுக்கிக்கொண்டே செல்வார்கள்.

உண்மையில் இவையெல்லாம் நல்ல விடயங்கள் என்பதிலும் தப்லீக் இயக்கத்தின் முயற்சியே இதற்கு முக்கிய பங்கு என்பதிலும் சந்தேகமேயில்லை. ஆனால் இந்த நன்மைகளைக் கூட விஞ்சி விடக் கூடிய இஸ்லாமிய கோட்பாட்டுக்கு எதிரான நச்சுக் கருத்துள்ள கொள்கைகள் ஒரு பக்கமும்,  இஸ்லாத்தைக் குறுகிய வட்டத்துக்குள்ளாக்கி அது கூறிய பலவற்றைக் கத்தரித்து விட்டு அது கூறாத நிறைய விடயங்களை இஸ்லாமியச் சாயம் பூசி விளம்பரப்படுத்தும் போக்கும் இவர்களிடம் காணப்படுவதனாலேயே இதனை விமர்ச்சிக்கும் நிலை ஏற்படுகின்றது. இது பற்றி பின்னர் விபரமாகச் கூறவுள்ளேன். அதே போன்று ஒரு இயக்கத்திற்குக் கிடைக்கும் தீவிர வளர்ச்சியும் பெரும்பான்மை மக்கள் ஆதரவும் சமூக வரவேற்பும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இயக்கம் என்பதற்கு ஒரு போன்றும் சான்றாக ஆகாது.
பத்ர் யுத்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நபிகளாருடன் 313 பேர். காபிர்கள் 1000 பேர். மூஸா நபியுடன் ஒரு சிறு கூட்டம். பிர்அவ்னிடம் ஒரு பெரிய பட்டாளம். எண்ணிக்கையை வைத்துச் சொல்வதென்றால் குரைஷிகளும் பிர்அவ்னும் சத்தியத்தில் இருந்ததாகவே சொல்ல வேண்டும். இன்றும் கூட உலக மக்கள் தொகையில் முஸ்லிம் களின் எண்ணிக்கையை விட கிருஷதவர்களின் எண்ணிக்கையே அதிகம். உலகச் செல்வத்தின்; பெரும்பகுதி அவர்களிடம் இருக்க அனேக நாடுகள் அவர்களை ஆதரித்து அவர்களின் உதவிக்காகக் கையேந்திக் காத்திருக்கின்றன. எனவே எண்ணிக்கையை வைத்தே சத்தியமா அசத்தியமா? என்று தீர்மானிப்பதாயின் இஸ்லாத்தை விடக் கிருஸ்தவ மதமே மிக உண்மையானது. அல்லாஹ்வின் அருளைப் பெற்றது என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்ல முடியுமா? என்று தப்லீக் சகோதரர்கள் சிந்திப்பார்களாக.

எனக்கும் தப்லீக் ஜமாஅத்துக்கும் கூட ஒரு காலத்தில் நெருங்கிய தொடர்பு இருந்தது. அப்போது தப்லீக்கின் பெரியார்கள் மார்க்க விரோதக் கருத்துக்கள் சிலவற்றைக் கூறும் வேளை அதனை நானும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலையில்தான் இருந்தேன் தப்லீக் மீதிருந்த அபார பக்தியும் அபிமானமும் அதிலுள்ள குறைகளைக் கண்டுகொள்ளக் கூடிய மனோநிலையை என்னில் இல்லாமலாக்கி விட்டன என்றே கூற வேண்டும். இதே போன்று இதை வாசிக்கும் தப்லீக் அபிமானிகளுக்கும் இந்த மனோபாவம் இருக்கும் என்றே நம்புகின்றேன். இருப்பினும் உண்மை கசத்தாலும் அதை ஏற்றே ஆகவேண்டியிருக்கின்றது. நபிவழிக்கு மாற்றமாக யாரின் செயல் இருப்பினும் அதனைப் புறக்கணித்தே ஆக வேண்டியுள்ளது. அது ஒரு முஸ்லிமின் இஸ்லாமிய, மற்றும் தார்மீகக் கடமையாகும். எனவே குர்ஆன் ஹதீஸின் ஆதாரத்துடன் தப்லீக்கில் தவறு இருப்பதாக நீரூபித்தால் அதனை ஏற்றுக்கொள்வேன் என்ற உறுதியுடன் இதனை வாசிக்க ஆரம்பியுங்கள்.
இது தவிர தனிப்பட்ட வகையில் எனக்கு தப்லீக்குடனோ தப்லீக் சகோதரர்களுடனோ எவ்வித காழ்ப் புணர்ச்சியோ கசப்புணர்வோ கிடையாது. இன்று வரைக்கும் நான் அவர்களுடன் சகோதரத்துவ வாஞ்சையுடனேயே பழகி வருகின்றேன். ஒரு முஸ்லிம் தான் விரும்புவதை தனது சக சகோதரனுக்கும் கிடைக்க வேண்டுமென விரும்ப வேண்டுமென்ற நபிமொழிக்கேற்ப இதிலுள்ள விடயங்களை தப்லீக் சகோதரர்கள் படித்ததன் பின் அது பற்றிச் சிந்திக்கத் தலைப்பட வேண்டு மென்பதே எனது அவா. ..

அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கின்றேன். இன்றும் கூட குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பல கோணங்களில் முரண்படுகின்றது என்ற ஒரே காரணத்துக்காகவே நான் தப்லீக்கை விட்டு ஒதுங்கியுள்ளேன். இன்றும் கூட டில்லி,  ரைவிந் மர்கஸ் தொடர்புகளைக் கத்தரித்து விட்டு அல்குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் செயற்படுவது என்ற நிபந்தனைக்கு கார்க்கூன்கள் சம்மதித்தால் இன்றிலிருந்தே நான் என் ஆயுளைக் கொடுத்து தப்லீக்கில் இணைந்து செயற்படக் காத்திருக்கின்றேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன். நான் மட்டு மல்ல குர்ஆன் ஹதீஸ் வழியில் நடக்கும் அனைத்து சகோதரர்களும் இதற்கு சம்மதிப்பார்கள் என்றே நம்புகின்றேன். நாம் அனைவருமே நிச்சயம் என்றோ ஒரு நாள் மரணிக்கக் கூடியவர்கள். அதன் பின் கப்ரில் புதைக்கப்பட்டு விடுவோம். அங்கே எமக்கு மீண்டும் உயிரூட்டப்பட்டு மலக்குகள் விசாரிப்பார்கள். நபி (ஸல்) அவர்களுடைய உருவத்தைக் காட்டப்பட்டு இந்த மனிதரைப்பற்றி நீ என்ன சொல்கின்றாய் ? என்பார்கள் அப்போது நபிவழியில் நடந்தவர்களே சரியான பதிலைக் கூற முடியும். நபிவழியைப் புறக்கணித்து நடந்தவர்களின் நிலை அந்தோ பரிதாபம் !! நாளை மறுமையில் அல்லாஹ் நம்மனைவரையும் மஹ்ஷர் வெளியில் ஒன்று கூட்டுவான் விசாரணை செய்வான். நபிவழிப்படி செயற்பட்டிருந்தால்த்தானே அல்லாஹ்வின் விசாரணையிலிருந்து வெற்றி பெற இயலும். நபியவர்களை நாம் மறுமையில் கவ்தர் எனும் ஆற்றின் பக்கம் சந்திக்க இருக்கின்றோம். அவ்வேளை நபிவழி நடந்தவர்களுக்கே நீர் புகட்டப்படும். அதற்கு மாற்றமாக நடந்தவர்களை நபியவர்களே மலக்குகளிடம் கூறி 'இவர்களைத் துரத்துங்கள் துரத்துங்கள் என்று விரட்டுவார்கள் எனஹதீஸில் உள்ளதே. ... நமக்கு இந்த நிலை ஏற்பட்டால் நம் கதி என்ன ? என்பது பற்றிய சிந்தனையுடன் தொடர்ந்து வாசியுங்கள். அல்லாஹ்வின் நல்லடியார்களாக நாம் அனைவருமே வாழ்ந்து மரணிக்க வேண்டுமென்று அவனைப் பிரார்த்திக்கின்றேன்.


தப்லீக் ஜமாஅத்தின் தோற்றம்.

இந்தியாவின் வடபகுதியிலுள்ள தேவ்பந்த் எனும் ஊரிலுள்ள மேவாத் எனும் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மத் இல்யாஸ் காந்திஹ்லவி தேவ்பந்தி (றஹ்) என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டு – அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பே தப்லீக் ஜமாஅத் எனும் அமைப்பாகும். இந்த தப்லீக் அமைப்பின் கேந்திரஸ்தலம் இந்தியாவின் தலைநகரான டில்லியில் அமைந்துள்ளது. தேவ்பந்த் எனப்படுவது அங்குள்ள ஹனபி மத்ஹப் போதிக்கும் மத்ரஸாக்களில் மிகப் பழைமை மிக்கதும், பெரியதுமாகும். மத்ரஸத்து தாருல் உலூம் என்பது இதன் பெயராகும். முஹம்மத் காஸிம் நானூத்துவியின் மேற்பார்வையில்; நபி (ஸல்) அவர்களே இதனை ஆரம்பித்ததாகவும்,  இந்த மத்ரஸாவுக்கு அடிக்கடி முஹம்மது நபியவர்கள் தமது கலீபாத் தோழர்களுடன் வருகை தந்து மத்ரஸாவின் வரவுசெலவுக் கணக்குகளைச் சரிபார்ப்பதாகவும் தப்லீக் முக்கியஸ்தர்கள் வாதிடுகின்றனர். ஆதாரம்: : (தோ ரூஹானிய்யத் அறபு பெயர்ப்பு ப:434)

இந்த மத்ரஸாவில் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை விளக்கம் (அகீதா ) இஸ்லாத்துக்குப் பல்வேறு கோணங்களில் முரண்படும் மாத்துர்திய்யா பிரிவினரின் கொள்கையின் படி போதிக்கப்படுகின்றது. மார்க்கச் சட்டங்கள் ஹனபி மத்ஹபின் ஊடாகக் கற்பிக்கப்படுகின்றன. இந்த மத்ஹபு நபிவழிக்கு மாற்றமான ஆயிரக் கணக்கான சட்டங்களைப் போதிக்கின்றதென்பது தனி விடயம். அப்படியானால் அல்லாஹ் கூறிய கொள்கைக்கு மாற்றமான நம்பிக்கைகளும்,  நபியவர்களின் போதனைகளுக்கு மாற்றமான சட்டங்களும் போதிக்கப்படும் மத்ரஸா ஒன்றை எப்படி நபியவர்களே தொடங்கி வைக்க முடியும் ? அடிக்கடி வருகை தந்து கணக்குகளைச் சரிபார்க்க முடியும் ? அவர்களுக்கே வெளிச்சம் இப்படி நிகழ்வது சாத்தியமா ? என்பது தனி விடயம்.

இது ஒருபக்கமிருக்க இந்த தப்லீக் பெரியார்கள் அனைவருமே ஜிஸ்த்திய்யா தரீக்காவின் ஷேக்மார்கள் - தர்ம கர்த்தாக்களாவார்கள் என்பதுதான் ஆச்சரியமான விடயம். இந்தத் தரீக்காவைத் சேர்ந்தவர்கள்; ஹாஜா முஈனுத்தீன் ஜிஸ்;தி அவர்களைத் தமது ஆத்மீக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள்.

இவர்களிடம் 'ஜிஸ்திய்யா தரீக்காவின் ஷேக்மாரின் வரலாறுகள்' எனும் பெயரில் ஒரு புத்தகம் உண்டு. இதில் அந்த தரீக்காவின் முக்கிய ஷேக்மார்களின் வாழ்க்கைத் தொகுப்பு உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இதில் முதலாவது இடத்தில் நபி (ஸல்) அவர்களுடைய பெயரை இடம்பெறச் செய்திருக்கின்றார்கள். என்னவோ நபியவர்களே ஜிஸ்த்திய்யாத் தரீக்காவை ஆரம்பித்து அதன் முதலாவது ஷேக்காக இருந்து நடத்தியது போன்ற ஒரு பிரமையைப் பாமரர்களுக்குப் போதிப்பதற்காக இவ்வாறு செய்துள்ளார்கள். அடுத்து வரும் ஜிஸ்த்தியாத் தரீக்காவின் ஷேக் மார்களாக அபூபக்ர், உமர்,உதுமான்,  அலி ரலியல்லாஹ- அன்ஹூம் அவர்களது பெயர்களை இடம்பெறச் செய்து இஸ்லாத்தின் வரலாறே ஜிஸ்திய்யா தரீக்காவிலிருந்தே தோற்றம்பெற்றது போன்ற ஒரு மாயையைத் தோற்றுவிக்கின்றார்கள்.

அது மட்டுமின்றி நபியவர்கள் தமது மரணத்தில் கப்ருடைய வாழ்க்கையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். மரணித்தவர்கள் திரும்ப மறுமையில் தான் எழுப்பப்படுவார்கள் என்பது இஸ்லாமியப் போதனை. அவர்கள் சொர்க்கவாசிகளாயின் அங்குள்ள இன்பங்களைக் கண்ணுற்றதும் உலகிற்கு வரவே விரும்ப மாட்டார்கள். உயிர்த்தியாகம் செய்த ஷஹீத் மாத்திரம் மீண்டும் உலகுக்கு வந்து 10 தடவைகள் போரில் கொல்லப்பட வேண்டுமென விரும்புவார் என்பது நபிமொழி. (புகாரி 2606 முஸ்லிம் 34)

இதற்கு மாற்றமாக மரணத்தின் பின்னும் ஒருவர் உலகிக்கு மீண்டு பல்வேறு செயற்பாடுகளைச் செய்ய முடியுமென்ற வழிகெட்ட சூபிகள் கூறும் இந்துக் கொள்கையினையே இவர்கள் கொண்டிருக்கின்றனர் நபியவர்கள் தேவ்பந்து மத்ரஸாவின் கணக்கு வழக்குகளைச் சரிசெய்யத் தோழர்களுடன் அடிக்கடி வருவதாக இவர்கள் கூறுவதிலிருந்து இதனை விளங்கிக் கொள்ளலாம். தப்லீக் ஜமாஅத் சூபித்துவம் பிரசவித்த குழந்தை என்பதற்கு இந்த ஒரு ஆதாரம் மாத்திரமே போதும்.

இல்யாஸ் மௌலானா (றஹ்) அவர்களைப்பற்றிச் சொல்வதானால் இவர்கள் ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள். சூபித்துவப் பாதையில் தன்னை முன்னர் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் மார்க்க அறிவில் போதிய தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் இஸ்த்தைப் பரப்ப வேண்டுமென்ற ஆர்வம் அவர்களிடம் மேலோங்கியிருந்தது. அதாவது அவர் சார்ந்திருந்த, சரிகண்டிருந்த சூபித்துவ தரீக்காவின் பக்கம் மக்களை ஒன்று சேர்ந்த்து நேர் வழிப்படுத்த வேண்டுமென்ற ஆதங்கத்துடன் இருந்தார்கள். றஸீத் அஹ்மத் கான்கோஹி, அஷ;ரப் அலி தானவி போன்ற ஷேக் மார்களிடமும் பைஅத் - குருஞான தீட்சை பெற்றுக் கொண்டவராயிருந்தார்கள். (நள்ரத் அல் ஆபிரா ப: 7,8)

குருமார்களிடம் சென்று ஞான தீட்சை – பைஅத் செய்வது இஸ்லாத்துக்கு முறனான விடயமென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தனது ஊரான மேவாத்தியிலுள்ள மக்கள் இஸ்லாத்தை விட்டும் தூரமான நிலையில் -- விக்ரக வழிபாடு நடத்தும் இந்துக்களின் கலாச்சாரத்தை முற்றிலும் தழுவிய நிலையிலே,  எவ்வித வணக்க வழிபாடுகளோ இபாதத்களோ இன்றி வயலும் வாழ்வுமாக இருந்த அந்த அறியாமைக் கூட்டத்தைக் கண்டு இவர்களை நேர்வழிப் படுத்த எண்ணிய ஷேக் அவர்கள் தனது குருமார்களிடம் இது பற்றிப் பேசி தனது திட்டத்தைத் தெரிவித்த போது அவர்களும் அதற்குச் சம்மதிக்கவே இவர்கள் தமது இந்த அமைப்பைத் தொடங்கி தொழுகையின் பக்கம் மக்களை அழைக்கும் இயக்கமென அதை அறிமுகப் படுத்தினார்கள். (நள்ரத் அல் ஆபிரா ப: 7,8).

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம் யாதெனில் ஷேக் அவர்களின் இஸ்லாமியப் பற்றும், மக்களை நல்வழிப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள்,  பட்ட சிரமங்கள் அனைத்தும் பாராட்டத்தக்கதே. ஆனால் அவர்கள் எதன் பக்கம் மக்களை அழைத்தார்கள் என்பதே கேள்வி ?. சூபித்துவத்தைப் பற்றியும் அதன் கொள்கைகள் கோற்பாடுகள் பற்றியும் ஏற்கனவே உங்களுக்குக் கூறியிருக்கின்றேன். அந்த தரீக்காக்களின்; பக்கம்தான் மக்களை அழைத்தார்கள். அதாவது அன்று அவர்களுக்குத் தெரிந்த இஸ்லாம் அதுதான். இதற்காக அவர்களைக் குறைகூறவும் முடியாது. காரணம் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இந்திய முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாம் இப்படித்தான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இஸ்லாம், குர்ஆன் ஹதீஸின் விளக்கங்களெல்லாம் ஆலிம்களுக்குக் கூடத் தெரிந்திருக்காத காலமது. மத்ஹபு நூல்களை மார்க்க ஞானமெனவும்,  சூபித்துவக் கருத்துக்களை மெஞ்ஞானமெனவும் நம்பி பாமர முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலம். குர்ஆன் ஹதீஸ் போதனைப்படிதான் மக்கள் வாழவேண்டுமென ஆங்காங்கே ஓரிரு உலமாக்கள் பிரச்சாரம் செய்தாலும் அவர்களெல்லாம் குழப்பவாதிகள்,  வஹாபிகள் என்று பட்டஞ் சூட்டப்பட்டு சமூகத்திலிருந்தே ஒதிக்கி வைக்கப்பட்ட காலம். எனவே ஷேக் இல்யாஸ் (றஹ்) அவர்களிடமும் இஸ்லாத்தின் அகீதா அறிவுகள் அதன் தூய வடிவில் சென்றடையவில்லை. அவர்களிடம் இஸ்லாமியப் பிரச்சாரம் பற்றிய அவா ஓங்கியிருந்த போதும் கூட அதனைச் செயற்படுத்துவதற்காக அவர்கள் தெரிவுசெய்த வழிமுறை சூபித்துவ வழிமுறையாகவே இருந்தது. அவர்களும்கூட சூபித்துவ தரீக்காவின் ஷேக்மார்களிடம் குருதீட்சை பெற்றிருந்தார்கள்.. அவர்களுக்குப் பின் வந்த தப்லீக்கின் முக்கியஸ்த்தர்களும் அதே ஞான வழியில் நடை பயில்பவர்களாகவே இருந்தார்கள்.

எனவே சுருங்கக் சொல்வதானால் ஒரு இயக்கத்தின் ஸ்தாபகர் தன்னகத்தே கொண்டிருந்த நற்குணங்கள்,  பக்தி, இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மீதிருந்த ஈடுபாடு போன்வற்றைக் கொண்டு அவரது இயக்கத்திற்கும் நல்ல இயக்கம் என்று சான்றுவழங்கிட முடியாது. உதாரணமாக நூஹ் நபி லூத் நபி ஆகியோர் நல்லடியார்கள் என்றபடியால் அவர்களின் மனைவிமக்களும் நல்லவர்களென வாதிடுவது எப்படி அபத்தமானதோ அது போன்று தான் இதுவும். நபியவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய கூட்டமெனப் பிரகடனம் செய்த கவாரிஜ்களைப் பாருங்கள் ஸஹாபாக்களையே மிஞ்சி விடுமளவுக்கு அதிக இபாதத்தாளிகளாக இருந்தார்கள். குணசீலர்களாயிருந்தார்கள். இதை வைத்து அவர்கள் நல்லவர்கள் என்று சொல்லிட முடியுமா ? எனவே ஒரு இயக்கத்தை இஸ்லாமிய இயக்கமென்று சொல்வதானால் அது இஸ்லாத்தின் போதனைகளுக்கு எந்தளவுக்கு ஒத்துப் போகின்றது, எந்தளவுக்கு முரண்படுகின்றது என்பதை எடை போட்டுப் பார்த்தே முடிவெடுக்க வேண்டும். எனவே தப்லீக் இயக்கம் உருவாக்கியுள்ள அடிப்படைகள் சட்ட வரையறைகள் கொள்கைகள் பற்றியெல்லாம் சற்று விரிவாக விளக்க வேண்டியது அவசியம் எனவே தப்லீக் சகோதரர்கள் தயவு செய்து பொறுமையுடன் பின்வரும் விடயங்களையும் வாசிக்க வேண்மென்பதே எனது எதிர்பார்ப்பும் வேண்டுதலுமாகும்.


தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் ( ஆறு நம்பர் )

தப்லீக் ஜமாஅத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக அவர்கள் ஆறு விடயங்களை அமைத்திருக்கின்றார்கள் . ஆறு நம்பருடைய வாழ்க்கை வாழ வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் முன்வைக்கின்றனர் .  இல்யாஸ் (றஹ்) அவர்களே இந்த ஆறு நம்பர்களை வகுத்து அறிமுகப்படுத்தியிருந்தாலும் கூட அவர்கள் அடிநிலை மக்கள் தெளிவு பெறுவதற்காகவே இவற்றை முன் வைத்தார்களேயன்றி இவ்வளவும் தான் இஸ்லாம் என்று ஒரு போதும் அவர்கள் கூறவில்லை . மாறாக ஏனைய மார்க்க விடயங்களையும் தெரிந்து வைத்திருக்க முயற்சிக்க வேண்டும் என்றே ஆர்வப்படுத்தியுள்ளார்கள் .  ஆனால் அதன் பின் வந்த முக்கியஸ்தர்கள் அளவுக்கு மீறிய குருபக்தி காரணமாக அந்த ஆறு விடயங்களும்தான் இஸ்லாத்தின் அடிப்படை அவையல்லாத அனைத்தும் இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டவை என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு ஏனைய மார்க்க விடயங்கள் அனைத்தையுமே புறக்கணித்து புறந்தள்ளிவிட்டு இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் . 
அது மட்டுமின்றி இந்த ஆறு நம்பரிலுள்ள மார்க்க அம்சங்களுக்கு விரிவுரையோ விளக்கமோ அவர்களது தஃலீம் நூல்களிலிருந்து மாத்திரம்தான் பெறப்பட வேண்டுமென்ற போதனையையும் மேல் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை ஒரு வகை ரகசியம் கலந்த பிரச்சாரமாக முன்வைக்கப்படுவது மறுக்க முடியாத உண்மை யாகும் .  ஆனால் ஆரம்ப நிலை தப்லீக் சகோதரர்களுக்குப் போதனை செய்யப்படும் போது 'சில விடயங்கள் இருக்கின்றன அவற்றின் பேரில் தொடர்ந்து முயற்சி செய்தால் நாமும் முழு மனித சமூதாயமும் தீனின்படி வாழ்வது இலகுவாகி விடும் ' என்று சொல்லியே ஆரம்பிப்பார்கள் .  ஆறு நம்பர் என்பது முழுமையான தீன் அல்ல தீன் வருவதற்கான வழிதான் என்றும் சொல்லிக் கொள்வார்கள் .  ஆனால் காலப் போக்கில் 40 நாள் 4 மாதம் 1 வருடம் என்றெல்லாம் வெளிக்கிளம்பி பெரியார்களைச் சந்தித்ததன் பின்னரே - அங்கு மேற்கொள்ளப்படும் மூளைச்சலவையின் பின்னரே ஆறு நம்பரை விட்டு வெளியேறினால் தீனை விட்டே வெளியேறி விட்டதாக ஆகி விடும் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றார்கள் .  இதனைப் பல்வேறு நிகழ்வுகளையும் சம்பவங்களையும் மேற்கோள் காட்டிப் பின்னர் விளக்குகின்றேன் .

எனவே இந்த ஆறு நம்பருக்குள் மார்க்கத்தின் ஒரு பகுதி மாத்திரம் உள்வாங்கப்பட்டு விட்டு ஏனையவை புறக்கணிக்கப்படுகின்றன என்பது ஒரு புறமிருக்க இந்த ஆறு நம்பரிலுள்ள மார்க்க விடயங்களுக்கே இவர்கள் எப்படித் தவறான விளக்கம் கொடுக்கின்றார்கள் என்பதையும் சற்றுவிரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது .